பி. சி. விஷ்ணுநாத்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பி. சி. விஷ்ணுநாத்
கேரள சட்டமன்ற உறுப்பினர்
பதவியில் உள்ளார்
பதவியில்
24 மே 2021 (2021-05-24)
முன்னையவர்ஜெ. மெர்சிகுட்டி அம்மா
தொகுதிகுண்டற
செயலாளர், அகில இந்திய தேசிய காங்கிரசு குழு
பதவியில் உள்ளார்
பதவியில்
2021 (2021)
கேரள சட்ட மன்ற உறுப்பினர்
பதவியில்
2006 (2006)–2016 (2016)
முன்னையவர்சோபனா ஜார்ஜ்
பின்னவர்கே. கே. இராமச்சந்திரன் நாயர்
தொகுதிசெங்கன்னூர்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு30 மார்ச்சு 1978 (1978-03-30) (அகவை 46)
மாவடி, கொல்லம், கேரளம், இந்தியா
தேசியம்இந்தியர்
அரசியல் கட்சிஇந்திய தேசிய காங்கிரசு
துணைவர்[1]
முன்னாள் கல்லூரிஅரசு சட்டக் கல்லூரி, திருவனந்தபுரம்
இணையத்தளம்http://www.pcvishnunadh.com/

பி. சி. விஷ்ணுநாத் (P. C. Vishnunadh) (பிறப்பு 30 மார்ச் 1978) இந்திய தேசிய காங்கிரசைச் சேர்ந்த ஓர் இந்திய அரசியல்வாதி ஆவார். இவர் கேரள சட்டமன்றத்தில் குண்டற தொகுதியை பிரதிநிதித்துவப்படுத்துகிறார்.

விஷ்ணுநாத் கொல்லம் மாவட்டம் கொட்டாரகரையிலுள்ள மாவடியில் பி. செல்லப்பன் பிள்ளை - லீலா சி பிள்ளை ஆகியோருக்குப் பிறந்தார். குறிப்பிடத்தக்க கன்னட கவிஞரும் நாடகக் கலைஞருமான கனகா ஹா மாவை மணந்தார்.[2]

அரசியல் வாழ்க்கை[தொகு]

இவர், கேரள மாணவர் ஒன்றியம் மூலம் அரசியலில் நுழைந்தார். சாஸ்தம்கோட்டாவின் தேவஸ்வம் போர்டு கல்லூரியின் அலகு செயலாளராக இருந்தார் (1993). தேவஸ்வம் போர்டு கல்லூரியின் கலைச் சங்கச் செயலாளராகவும் (1997), கல்லூரியின் பல்கலைக்கழக ஒன்றிய உறுப்பினராகவும் (1998) தேர்ந்தெடுக்கப்பட்டார். 2001, 2002 இல் கேரள பல்கலைக்கழக ஆட்சிப் பேரவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 2005ஆம் ஆண்டு கேரள மாநிலத்தின் பிரதிநிதியாக உப்புச் சத்தியாகிரகத்தின் 75 வது ஆண்டு நினைவாக நடந்த 'நினைவு அணிவகுப்பில்' இவர் பங்கேற்றார். 2002 முதல் 2006 வரை கேரள மாணவர் சங்கத்தின் மாநிலத் தலைவராக இருந்தார். அப்போது, பேருந்து கட்டண உயர்வை எதிர்த்து கேரள மாணவர் சங்கம் நடத்திய வேலைநிறுத்தம் தொடர்பாக இவர் சிறையில் அடைக்கப்பட்டார். மேலும், இவர் பல மாணவர்களின் போராட்டங்களிலும், வேலைநிறுத்தங்களிலும் பங்கேற்றுள்ளார். 2010இல் கேரள இளைஞர் காங்கிரசு தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.[3] [4] 2014இல் கேரள பிரதேச காங்கிரசின் பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்டார். 2017ஆம் ஆண்டில், கர்நாடக மாநிலப் பொறுப்பில் இந்திய தேசிய காங்கிரசின் செயலாளராக நியமிக்கப்பட்டார். 2020 ஜனவரியில், கேரள பிரதேச காங்கிரசு குழுவின் துணைத் தலைவராக நியமிக்கப்பட்டார்.[5]

2006இல் நடந்த கேரள சட்டமன்றத் தேர்தலில் செங்கன்னூர் சட்டமன்றத் தொகுதியிலிருந்து முதன்முதலாக கேரளா சட்டமன்றத்துக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர், இந்தியப் பொதுவுடமைக் கட்சியின் (மார்க்சிசம்) வேட்பாளர் திரு. சாஜி செரியனை 5321 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார். 2011 ஆம் ஆண்டு கேரள சட்டமன்றத் தேர்தலில் இவர் இரண்டாவது முறையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்தியப் பொதுவுடமைக் கட்சியின் (மார்க்சிசம்) சி. எஸ். சுஜாதா என்பவரை 12500 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார். 2016 கேரளா சட்டப் பேரவை தேர்தலில் இவர் கே. கே. ராமச்சந்திரன் நாயர் என்ற இந்தியப் பொதுவுடமைக் கட்சியின் (மார்க்சிசம்) வேட்பாளரால் 7983 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடிக்கப்பட்டார். 2021 கேரள சட்டமன்றத் தேர்தலில் குண்டறா சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு இடதுசாரி ஜனநாயக முன்னணியின் (கேரளா) ஜே. மெர்சிக்குட்டி அம்மாவை 4,454 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.[6]

வகித்த பதவிகள்[தொகு]

மற்ற விருப்பங்கள்[தொகு]

இவர், தனது நண்பர் ரமேஷ் மகாயிரம் இயக்கிய "நான் கண்ட கேரளம்" என்ற குறும்படத்தில் ஒரு பாடலைப் பாடியுள்ளார். [7]

மேற்கோள்கள்[தொகு]

  1. https://shevlinsebastian.blogspot.com/2015/08/bonding-over-long-march.html?m=1
  2. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2018-06-14. பார்க்கப்பட்ட நாள் 2021-08-18.
  3. "P C Vishnunadh elected Kerala Youth Congress President". Zee News. http://zeenews.india.com/news/kerala/pc-vishnunath-elected-kerala-youth-cong-president_675965.html. 
  4. P.C. Vishnunadh nominated as KPCC general secretary
  5. "KPCC reconstituted with 12 vice presidents". தி இந்து. https://www.thehindu.com/news/national/kerala/kpcc-reconstituted-with-12-vice-presidents/article30645897.ece. []
  6. "P C Vishnunadh from INC Wins". Network18 Group. https://www.news18.com/news/politics/kundara-election-result-2021-live-updates-kundara-winner-loser-leading-trailing-mla-margin-3697895.html. 
  7. P.C Vishnunath MLA now on screen as a singer பரணிடப்பட்டது 12 ஆகத்து 2014 at Archive.today

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பி._சி._விஷ்ணுநாத்&oldid=3792910" இலிருந்து மீள்விக்கப்பட்டது