கேரள மாணவர் ஒன்றியம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கேரள மாணவர் ஒன்றியம்
இந்திய தேசிய மாணவர் ஒன்றிய கேரள மாநிலக் கிளை
சுருக்கக்குறிKSU
தலைவர்கே.எம்.அபிஜித்
குறிக்கோளுரைமுற்போக்கு சிந்தை, சமயசார்பற்ற பார்வை மற்றும் ஜனநாயக நடத்தை (Progressive Thought, Secular Vision and Democratic Action)
தொடக்கம்மே 30, 1957 (1957-05-30)
இணையதளம்
http://www.ksuonline.org/

கேரள மாணவர் ஒன்றியம் (ஆங்கிலம்: Kerala Students Union, மலையாளம்: കേരള സ്റ്റുഡന്റ്സ് യൂണിയൻ) என்பது இந்திய தேசிய காங்கிரசின் மாணவர் பிரிவான இந்திய தேசிய மாணவர் ஒன்றியத்தின் கேரள மாநிலக் கிளையாகும். இவ்வமைப்பு 1957 ஆம் அண்டு மே 30 இல் ஆலப்புழையில் தோற்றுவிக்கப்பட்டது.[1][2][3]

விவரம்[தொகு]

கேரள மாணவர் ஒன்றியம் கேரள மாநிலத்தில் மிகப்பெரிய மாணவர் அமைப்புகளில் ஒன்றாகும். இவ்வமைப்பு மாணவர் செயல்பாடுக்கான வழிமுறை முற்போக்குச் சிந்தனை, சமயசார்பற்ற பார்வை மற்றும் ஜனநாயக நடத்தை ஆகியவற்றைச் சார்ந்திருக்க முன்மொழிகிறது. மாநிலத்தில் பேருந்துகளிலும் படகுகளிலும் மாணவர்களுக்குப் பயணச் சலுகை வேண்டும் என நடத்தப்பட்ட புகழ்பெற்ற "ஓரனா சமரம்" எனும் மாணவர்கள் போராட்டத்தின் வாயிலாக இது மாணவர் அரசியலில் நுழைந்தது. இதைத் தோற்றுவித்த ஏ. கே. அந்தோணி, வயலார் ரவி, உம்மன் சாண்டி, ஏ. சி. ஜோசு, வி. எம். சுதீரன் மற்றும் எம். ஆர். பிரசாத் போன்ற பெரும்பாலான தலைவர்கள் இந்தியத் தேசியக் காங்கிரசின் பல உன்னத பொறுப்புகளில் சேர்ந்துள்ளனர். இது புதிய இளம் இரத்தங்களை காங்கிரசில் செலுத்துவதாலும் அரசியல் அரங்கில் நுழைகின்ற புதிய தலைவர்களின் ஒரு முழுத் தலைமுறையைக் கொண்டுள்ளதாலும் இரண்டு தலைமை அமைச்சர்கள் உட்பட பல நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களைத் தந்துள்ளது.

வெளியிணைப்புகள்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. "എം.എ. ജോൺ". August 29, 2020 – via Wikipedia.
  2. "MA John passes away". The New Indian Express.
  3. "Congress Leader M A John Found Dead". www.outlookindia.com/.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கேரள_மாணவர்_ஒன்றியம்&oldid=3893644" இலிருந்து மீள்விக்கப்பட்டது