இடதுசாரி ஜனநாயக முன்னணி (கேரளா)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

இடதுசாரி ஜனநாயக முன்னணி (Left Democratic Front -LDF (ஆங்கில மொழியில்)) இந்தியாவின் கேரள மாநிலத்தில் அமைக்கப்பட்டுள்ள ஒரு அரசியல் கூட்டணி. கேரளாவிலுள்ள இரு வலுவான அரசியல் கூட்டணிகளில் இது ஒன்று, மற்றொன்று ஐக்கிய ஜனநாயக முன்னணி. இவ்விரு கூட்டணிகளும் கடந்த சில பத்தாண்டுகளாக மாறிமாறிக் கேரளாவில் ஆட்சி அமைத்து வருகின்றன. தற்சமயம் ஐக்கிய ஜனநாயக முன்னணி ஆட்சி செய்துவர இடதுசாரி ஜனநாயக் முன்னணி எதிர்க்கட்சியாக செயற்படுகிறது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இக்கூட்டணியின் முக்கிய கட்சியாக உள்ளது.

கேரள சட்டப் பேரவைத் தேர்தல், 2006[தொகு]

2006 ஆம் ஆண்டின் கேரள மாநில சட்டப் பேரவைத் தேர்தலில் இக்கூட்டணி, மொத்தமுள்ள 140 இடங்களில் 99 இடங்களைக் கைப்பற்றியது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி (CPI(M)) இன் தலைவர் வி. எஸ். அச்சுதானந்தன் தலைமையில் 2006-'11 வரை கேரள மாநில ஆட்சி இக்கூட்டணியிடம் இருந்தது.

கேரள சட்டப் பேரவைத் தேர்தல், 2011[தொகு]

2011 ஆம் ஆண்டின் கேரள மாநில சட்டப் பேரவைத் தேர்தலுக்கு முன்னதாகவே இக் கூட்டணியின் இணைய தளம் தொடங்கப்பட்டது.[1] இத் தேர்தலில் இரு கூட்டணிகளுக்குமிடையே கடும் போட்டி நிலவியது. மிகக் குறைந்த பெரும்பான்மையுடன் ஐக்கிய ஜனநாயக முன்னணி வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது.[2]மொத்தமுள்ள 140 சட்டப்பேரவைக்கான தொகுதிகளில் இடதுசாரி முன்னணி 68 தொகுதிகளிலும் ஐக்கிய முன்னணி 72 இடங்களிலும் வெற்றி பெற்றன. எதிர்க் கட்சித் தலைவராக வி. எஸ். அச்சுதானந்தன் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[3]

சட்டப்பேரவையில்-இக் கூட்டணிக் கட்சிகள்[தொகு]

2011 ஆம் ஆண்டின் கேரள மாநிலச் சட்டப்பேரவையில் இடம்பெற்ற இக் கூட்டணியின் அரசியல் கட்சிகள்:

  1. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி
  2. இந்திய கம்யூனிஸ்ட் கட்சி
  3. மதச் சார்பற்ற ஜனதா தளம்
  4. தேசியவாத காங்கிரஸ்
  5. இந்திய சோசியலிச காங்கிரஸ்
  6. கேரள காங்கிரஸ்

கேரள சட்டப் பேரவைத் தேர்தல், 2016[தொகு]

2016 இல் நடைபெற்ற கேரள மாநில சட்டப் பேரவை தேர்தலில் மொத்தமுள்ள 140 தொகுதிகளில் இடதுசாரி ஜனநாயக முன்னணி வெற்றிபெற்று, கேரள மாநிலத்தில் ஆட்சி அமைத்தது.இத் தேர்தலில் மொத்தமுள்ள 140 தொகுதிகளில் 47 தொகுதிகளில் ஐக்கிய ஜனநாயக முன்னணிக் கூட்டணியும், 91 தொகுதிகளில் இடதுசாரி ஜனநாயக முன்னணிக் கூட்டணியும் வெற்றி பெற்றன. பெரும்பான்மை பெற்று இடதுசாரி ஜனநாயகக் கூட்டணி பினராயி விஜயன் தலைமையில் ஆட்சி அமைத்தது.

கட்சிகள்[தொகு]

2016 இல் நடைபெற்ற கேரள மாநில சட்டப் பேரவை தேர்தலில் இடதுசாரி ஜனநாயக முன்னணிக் கூட்டணிக் கட்சிகள்.

எண் கட்சி சின்னம் மாநிலத் தலைவர்
1 இந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்) South Asian Communist Banner.svg கொடியேரி பாலகிருஷ்ணன்
2 இந்தியப் பொதுவுடைமைக் கட்சி CPI-banner.svg கானம் ராஜேந்திரன்
3 மதச்சார்பற்ற ஜனதா தளம் மாத்யூ டி. தோமஸ்
4 தேசியவாத காங்கிரசு கட்சி NCP-flag.svg உழவுர் விஜயன்
5 ரெவல்யூஷனரி சோசியலிஸ்டு கட்சி (லெனினிஸ்டு) RSP-flag.svg
6 கேரள காங்கிரசு (சக்கரியா தாமஸ்) சக்கரியா தாமஸ்
7 காங்கிரசு (எஸ்) கடந்நப்பள்ளி ராமச்சந்திரன்
8 இந்திய தேசிய லீக்
9 கம்யூனிஸ்டு மார்க்சிஸ்டு கட்சி கே.ஆர். அரவிந்தாட்சன்
10 கேரள காங்கிரசு (பி) ஆர். பாலகிருஷ்ணப்பிள்ளை

அரசியல் செயற்பாடுகள்[தொகு]

இந்தியாவிற்கும் தென்கிழக்கு ஆசிய நாடுகள் சங்கத்துக்குமிடையே கையெழுத்தான கட்டற்ற வணிக ஒப்புதலுக்கு எதிர்ப்புத் தெரிவித்து, அக்டோபர் 2, 2009 இல் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 30 லட்சம் தொண்டர்கள் இணைந்து 500 கிமீ நீளமுள்ள மனிதச் சங்கிலிப் போராட்டம் நடத்தினர்.[4]

115 ஆண்டுகள் பழமையடைந்த முல்லைப் பெரியாறு அணைக்குப் பதிலாகப் புது அணை கட்ட வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து, டிசம்பர் 7, 2011 இல், கட்சித் தொண்டர்களை வரிசையாக நிறுத்தி, 208 கிமீ நீளமுள்ள மனிதச் சுவரமைத்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிப் போராட்டம் நடத்தியது. கேரளாவின் இரு மாவட்டங்களை இணைத்து அமைக்கப்பட்ட இந்த மனிதச் சுவர் கேரள அரசியல் வரலாற்றில் இரண்டாவது நீளமான மனிதச் சுவராகும்.[4]

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]