சோபனா ஜார்ஜ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சோபனா ஜார்ஜ்
சட்டப் பேரவை உறுப்பினர்
பதவியில்
1991–2005
முன்னவர் மாமன் ஐப்
பின்வந்தவர் பி. சி. விஷ்ணுநாத்
தொகுதி செங்கன்னூர்
தனிநபர் தகவல்
பிறப்பு 4 ஏப்ரல் 1962 (1962-04-04) (அகவை 61)
செங்கன்னூர்
வாழ்க்கை துணைவர்(கள்) ஐசக் ஜார்ஜ்
பிள்ளைகள் 1 மகள்
இருப்பிடம் செங்கன்னூர், திருவனந்தபுரம் கேரளம்
படித்த கல்வி நிறுவனங்கள் கேரளப் பல்கலைக்கழகம், மைசூர் பல்கலைக்கழகம்
As of 2 Aug, 2013
Source: [1]

சோபனா ஜார்ஜ் (Shobhana George) ஓர் அரசியல்வாதியாவார். இவர், கேரள மாநிலத்தில் மூன்று முறை சட்டமன்ற உறுப்பினராக உள்ளார். இவர் இந்திய தேசிய காங்கிரசு கட்சி வேட்பாளராக, செங்கனூரை 9, 10 மற்றும் 11 வது சட்டசபைகளில் பிரதிநிதித்துவப்படுத்தினார். இந்திய தேசிய காங்கிரசு கட்சியில் தொடர்ந்து மூன்று வருடங்கள் ஒரே தொகுதியை பிரதிநிதித்துவப்படுத்திய ஒரே பெண் இவர்.[1]

சோபனா ஜார்ஜ் இப்போது இந்தியப் பொதுவுடமைக் கட்சியின் (மார்க்சிசம்) தீவிர ஆதரவாளராக இருக்கிறார். தற்போது [2] கேரள மாநில காதி மற்றும் கிராம தொழில் வாரியத்தின்] துணைத் தலைவராகவும் இருக்கும் முதல் பெண் இவர்தான்.

ஆரம்பகால வாழ்க்கையும் குடும்பமும்[தொகு]

இவர், கே. எம். ஜார்ஜ் - தங்கம்மா ஜார்ஜ் ஆகியோரின் மகளாக 4 ஏப்ரல் 1962 இல் பிறந்தார். இவருக்கு ஐசக் ஜார்ஜ் என்பவருடன் திருமணமாகி ஒரு மகள் உள்ளார்.

கல்வி[தொகு]

சோபனா, செங்கனூர், அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் தனது பத்தாம் வகுப்பினை முடித்தார். தனது உயர் படிப்பை கோட்டயம் பசாலியஸ் கல்லூரி, இராணி செயின்ட் தாமஸ் கல்லூரி, கோழஞ்சேரி தாமஸ் கல்லூரி, சென்னைப் பல்கலைக்கழகம், மைசூர் பல்கலைக்கழகம் ஆகியவற்றில் பயின்றார் .

தொழில்[தொகு]

இவரது பொது சேவை இவரது 9 வயதிலேயே ஆரம்பித்தது. இந்திய அரசால் ஏற்பாடு செய்யப்பட்ட ஒரு முகாமில் இவரது நடிப்பு இந்தியக் குடியரசுத் தலைவர் - வி. வி. கிரி, இந்தியப் பிரதமர் - இந்திரா காந்தி, துணைக் குடியரசுத் தலைவர் - பக்ருதின் அலி அகமது ஆகியோரால் மிகவும் பாராட்டப்பட்டது. பின்னர், இவர் அகில கேரளா பாலாஜன் சாக்கியத்தின் முதல் பெண் தலைவர் ஆனார். மாநில இளைஞர் காங்கிரசு குழுவின் முதல் பெண் பொதுச்செயலாளராகவும், கேரள பிரதேச காங்கிரசு குழுவின் இணை செயலாளராகவும் பணியாற்றியுள்ளார். அவர் கேரள பல்கலைக்கழகத்தின் ஆட்சிமன்றக் குழு உறுப்பினராகவும் பணியாற்றியுள்ளார். இந்திய தேசிய காங்கிரசிலிருந்து வெளியேற்றப்பட்டதைத் தொடர்ந்து, இவர் ஜனநாயக இந்திரா காங்கிரசில் (கருணாகரன்) சேர்ந்தார். அங்கு இவர் பொதுச் செயலாளராக பணியாற்றினார்.[3] இவர் கேரள சட்டமன்றத்தில் 9, 10 மற்றும் 11 வது சட்டசபைகளில் செங்கனூர் தொகுதியை பிரதிநிதித்துவப்படுத்தினார்.

தேர்தல் வெற்றிகள்
ஆண்டு நெருங்கிய போட்டியாளர் வாக்குகள் பதிவாகின
1991 மாமன் ஐப் [4] (ICS-SCS) 36,761
1996 மாமன் ஐப் (ஐசிஎஸ்)[5] 37,242
2001 வழக்கறிஞர் கே. கே. இராமச்சந்திரன் நாயர் ( இந்தியப் பொதுவுடமைக் கட்சி (மார்க்சிசம்) ) [6] 41,242

கலை நிகழ்ச்சி[தொகு]

2011 இல், சோபனா செங்கனூர் இசை நிறுவனம் வெளியிட்ட ஓணத்தின் வரலாறு மற்றும் மனித விழுமியங்களைப் பற்றிய 'என் ஓணம்' என்ற இசைத் தொகுப்பை அறிமுகப்படுத்தினார்.[7]

இவர் "பிரதீக்சயோதே" என்றத் திரைப்படத்தையும் வெளியிட்டார். இந்தத் திரைப்படம் குழந்தைத் தொழிலாளர்களைப் பற்றியது. நடிகர்கள் முகேஷ், இலட்சுமி சர்மா மற்றும் பலர் நடித்திருந்தனர். மலையாளத் திரையுலகில் தயாரிப்பு, திரைக்கதை எழுதுதல், உரையாடல், திரைக்கதை, நடிப்பு ஆகிய அனைத்தையும் ஒரே திரைப்படத்தில் செய்த ஒரே பெண் இவர்.

2015ஆம் ஆண்டில், சோபனா ஜார்ஜ் தனது சொந்த ஊரில் "மிஷன் செங்கனூர்" என்ற திட்டத்துடன் சேர்ந்து உலகின் மிகப்பெரிய மனிதர்கள் அடங்கிய கிறிஸ்துமஸ் மரத்தை ஏற்பாடு செய்தார். இது கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம் பெற்றது. இதில் மொத்தம் 4030 பேர் இருந்தனர்.

மேற்கோள்கள்[தொகு]

  1. "Kerala Assembly Election 2001 Chengannur". Empowering India இம் மூலத்தில் இருந்து 4 மார்ச் 2016 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20160304035750/http://www.empoweringindia.org/new/constituency.aspx?eid=582&cid=108. 
  2. http://kkvib.org
  3. "Sobhana George – Kerala Legislature Members". Kerala Legislature. http://www.niyamasabha.org/codes/legislatorsupto2006.pdf. 
  4. "Kerala Assembly Election 1991 Chengannur". Empowering India இம் மூலத்தில் இருந்து 16 ஆகஸ்ட் 2021 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20210816130702/http://www.empoweringindia.org/new/constituency.aspx?eid=583&cid=108. 
  5. "Kerala Assembly Election 1996 Chengannur". Empowering India இம் மூலத்தில் இருந்து 4 மார்ச் 2016 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20160304035939/http://www.empoweringindia.org/new/constituency.aspx?eid=718&cid=108. 
  6. "Kerala Assembly Election 2001 Chengannur". Empowering India இம் மூலத்தில் இருந்து 4 மார்ச் 2016 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20160304035750/http://www.empoweringindia.org/new/constituency.aspx?eid=582&cid=108. பார்த்த நாள்: 2 August 2013. 
  7. "Shobana George turns musician" (in Malayalam) (Video). Asianet News. https://www.youtube.com/watch?v=0WS48b1lnGw. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=சோபனா_ஜார்ஜ்&oldid=3710539" இருந்து மீள்விக்கப்பட்டது