பா. ர. பழனிச்சாமி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பா. ர. பழனிச்சாமி
இயக்கம்எம். முத்துரத்தினம்
தயாரிப்புபி. தங்கவேல்
கதைசுரேஷ் தேவராஜ்
இசைதினா (இசையமைப்பாளர்)
நடிப்பு
ஒளிப்பதிவுபாஸ்கர்
ரவி
படத்தொகுப்புகே. எம். இத்ரிஸ்
எம். சங்கர்
கலையகம்தங்கம் ரியல் பிக்சர்ஸ்
வெளியீடுசூன் 11, 2010 (2010-06-11)
ஓட்டம்110 நிமிடங்கள்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

பா .ர. பழனிச்சாமி (Pa. Ra. Palanisamy) என்பது 2010 ஆம் ஆண்டு வெளியானதமிழ் பரபரப்புத் திரைப்படம் ஆகும். எம். முத்துரத்னம் இயக்கிய இப்படத்தில் மூகூர் சுந்தர், அஸ்வின், சீனிவாச ராவ், மீனாட்சி கைலாஷ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இதில் அலெக்ஸ், கராத்தே ராஜா, பாண்டு, பாலா சுப்பிரமணி ஆகியோர் துணை வேடங்களில் நடித்துள்ளனர். பி. தங்கவேல் தயாரித்த இப்படத்திற்கு, தினா இசை அமைத்துள்ளார். படமானது 11 சூன் 2010 அன்று வெளியானது.[1][2]

நடிகர்கள்[தொகு]

தயாரிப்பு[தொகு]

1000 க்கும் மேற்பட்ட படங்களில் நடன இயக்குநராக பணியாற்றிய மூத்த நடனக் கலைஞர் முகூர் சுந்தர், பா. ர. பழனிசாமி படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார் . தங்கம் ரியல் பிக்சர்ஸ் பதாகையின் கீழ் தயாரிக்கப்பட்ட இப்படத்தில் சீனிவாச ராவ், மீனாட்சி கைலாஷ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க தேர்வு செய்யப்பட்டனர், பாண்டு, அலெக்ஸ், கராத்தே ராஜா ஆகியோர் துணை நடிகர்களாக நடித்தனர். படத்திற்கான இசையை தினா அமைத்தார். சுரேஷ் தேவராஜ் கதை, திரைக்கதையை எழுதியுள்ளார். இந்த படத்தில் முகூர் சுந்தரும் அவரது மகன்களான பிரபுதேவா, ராஜூ சுந்தரம் ஆகியோர் நடனமாடியுள்ளனர். இதை நடன இயக்குநர் ஸ்ரீதர் அமைத்தார்.[3][4][5][6]

இசை[தொகு]

திரைப்பட பின்னணி இசை, பாடல் இசை ஆகியவற்றை திரைப்பட இசையமைப்பாளர் தினா அமைத்தார். 2010 இல் வெளியான இந்த இசைப்பதிவில், சுரேஷ் தேவராஜ் எழுதிய ஆறு பாடல்கள் உள்ளன.[7]

எண் பாடல் பாடகர் (கள்) காலம்
1 "இன்டர் சிட்டி" ஹரிசரண் 4:34
2 "மாலை நேர சூரியன்" எஸ். பி பவன் 1:43
3 "நெஞ்சுக்குள் மரியாள்" பென்னி தயாள், பிரியா இமேஷ் 4:38
4 "நேற்று அது உனக்கு" தினா 5:00
5 "சிங்கரிமாவா சிங்ககுட்டி" முகேஷ், சின்னப்பொண்ணு 4:37
6 "தேடிவந்தேன்" சங்கர் மகாதேவன், மாலதி லட்சுமணன் 4:14

வெளியீடு[தொகு]

இந்த படம் சென்னை மண்டலத்தில் சராசரியான வசூலை ஈட்டியது.[8]

குறிப்புகள்[தொகு]

  1. "Pa.Ra.Palanisamy (2010) Tamil Movie". spicyonion.com. 15 March 2019 அன்று பார்க்கப்பட்டது.
  2. "Jointscene : Tamil Movie Pa. Ra. Pazhanisami". jointscene.com. 7 April 2011 அன்று மூலம் பரணிடப்பட்டது. 15 March 2019 அன்று பார்க்கப்பட்டது.
  3. "Sundaram Master turns hero!". சிஃபி. 4 December 2009. 15 March 2019 அன்று பார்க்கப்பட்டது.
  4. "Pa Ra Palanisamy". ayngaran.com. 15 March 2019 அன்று பார்க்கப்பட்டது.
  5. "Prabhu Deva's father turns hero!". filmibeat.com. 3 December 2009. 15 March 2019 அன்று பார்க்கப்பட்டது.
  6. "A family song by Prabhu Deva". lakshmansruthi.com. 27 ஜனவரி 2023 அன்று மூலம் பரணிடப்பட்டது. 15 March 2019 அன்று பார்க்கப்பட்டது.
  7. "Pa Ra Palanisamy (2010) - Dheena". mio.to. 15 March 2019 அன்று பார்க்கப்பட்டது.[தொடர்பிழந்த இணைப்பு]
  8. "Pa Ra Palanisamy - Behindwoods.com - Tamil Top Ten Movies". behindwoods.com. 14 June 2010. 15 March 2019 அன்று பார்க்கப்பட்டது.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பா._ர._பழனிச்சாமி&oldid=3690030" இருந்து மீள்விக்கப்பட்டது