உள்ளடக்கத்துக்குச் செல்

தினா (இசையமைப்பாளர்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தினா
இயற்பெயர்பத்ம தினகரன்
பிறப்பு15 சனவரி 1966 (1966-01-15) (அகவை 59)
கோயம்புத்தூர், தமிழ்நாடு, இந்தியா
தொழில்(கள்)இசையமைப்பாளர்
இசைத்துறையில்2001 – தற்போது

தினா (பிறப்பு: ஜனவரி 15, 1966) என்பவர் ஒரு தமிழ்நாட்டைச் சேர்ந்த திரைப்பட மற்றும் தொலைக்காட்சி நாடக இசையமைப்பாளர் ஆவார்.

ஆரம்பகாலம் மற்றும் தொழில் வாழ்க்கை

[தொகு]

ஜி. கே. வெங்கடேசு, இளையராஜா போன்றவர்களிடம் பணியாற்றினார்.[1]

சித்தி, அண்ணாமலை, நினைவுகள், பயணம், நம்பிக்கை, செல்லமே, மெட்டி ஒலி போன்ற தொலைக்காட்சித் தொடர்களுக்கு இசை அமைத்துள்ளார்.‌ ராதிகா சரத்குமார் நடித்து தயாரித்த சித்தி தொடர் தினாவுக்கு பெரிய புகழ் கிடைத்தது.[2]

2001 இல் மிடில் கிளாஸ் மாதவன் திரைப்படத்திற்கு இசையமைத்தார். பின்பு தெலுங்கு, கன்னடத் திரைப்படங்களில் இசையமைத்துள்ளார். 2012இல் வெளியான சூழ்நிலை என்னும் திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்தார்.[3]

விருது

[தொகு]

2021இல் தமிழ்நாடு அரசின் கலைமாமணி விருது பெற்றார்.[4]

ஆதாரங்கள்

[தொகு]
  1. "ஜெயிக்கும் வரை நீ அடிமை!". Kalki. 29 June 2003. pp. 40–41. Retrieved 9 February 2024.
  2. "Profile of Dhina". lakshmansruthi.com. Archived from the original on 2015-01-31. Retrieved 2015-06-09.
  3. "SoozhnilaiA". The Times of India. Retrieved 2025-04-30.
  4. "T.N. govt. announces Kalaimamani awards for 2019, 2020" (in en-IN). The Hindu. 2021-02-20. https://www.thehindu.com/news/national/tamil-nadu/tn-govt-announces-kalaimamani-awards-for-2019-2020/article33885249.ece. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=தினா_(இசையமைப்பாளர்)&oldid=4264036" இலிருந்து மீள்விக்கப்பட்டது