பாஸ் மார்க்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பாஸ் மார்க்
இயக்கம்வி. பாலகிருஷ்ணன்
தயாரிப்புபி. கண்ணப்பன்
ஆர். தனராஜ்
ஆர். சீனிவாசன்
கதைவி. பாலகிருஷ்ணன்
இசைதேவா
நடிப்பு
ஒளிப்பதிவுபி. எஸ். நிவாஸ்
படத்தொகுப்புஆர். டி. சேகர்
கலையகம்ஸ்ரீ லட்சுமி பாலாஜி பிலிம்ஸ்
வெளியீடுசூலை 23, 1993 (1993-07-23)
நாடுஇந்தியா
மொழிதமிழ்

பாஸ் மார்க் (Pass Mark) என்பது 1993 ஆம் ஆண்டய தமிழ் நகைச்சுவை-நாடக திரைப்படம் ஆகும். வி. பாலகிருஷ்ணன் எழுதி இயக்கிய இப்படத்தில் ராம்கி, கஸ்தூரி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். சனகராஜ், விவேக், எஸ். எஸ். சந்திரன் ஆகியோர் துணை வேடங்களில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு தேவா இசை அமைத்துள்ளார் இப்படம் 1993 சூலை 23 அன்று வெளியிடப்பட்டது. இந்த படம் பின்னர் தெலுங்கில் அல்லரி அப்பாய் என்று மொழிமாற்றம் செய்யபட்டது.[1]

கதை[தொகு]

வேலையற்ற இளைஞனான முரளி ஒரு குறும்புக்காரன். தன்னைச் சுற்றியுள்ளவர்களுக்கு ஏற்படக்கூடிய எந்த பிரச்சினையையும் பொருட்படுத்தாமல் பணத்திற்காக எந்த பந்தயத்துக்கும் முன்வரக்கூடியவன். பந்தையத்துக்காக தான் இறந்துவிட்டதாகவும், பைத்தியக்காரனாகவும் நடித்துள்ளான். இது அவனது பெற்றோருக்கு மிகுந்த மன உளைச்சலை ஏற்படுத்துகிறது. முரளி ஒரு ரிக்‌ஷா ஓட்டுநராக ஆகி பொறுப்பாக இருக்கிறான். ஆனால் விரைவில் தனது பழைய பழக்கவழக்கங்களுக்கு மீண்டும் செல்கிறான். செல்வம் ஒரு மதுபானக் கடையை வைத்திருக்கிறார், சாந்தியை திருமணம் செய்து கொள்ள விரும்புகிறார், ஆனால் அவரது குடும்பத்தினரும், சாந்தியும் இதை கடுமையாக எதிர்க்கின்றனர். அவளுக்கு வேறு ஒருவருடன் திருமண ஏற்பாடு நடக்கிறது. செல்வம் முரளியை திருமணத்திற்கு அழைத்து வந்து, அவன் தாலியைத் திருடி, யாரும் கவனிக்குமுன் திருப்பித் வைக்க வேண்டும் என்று பந்தையம் வைக்கிறார். முரளி இந்த சவாலை ஒப்புக் கொண்டு தாலியைத் திருடுகிறான். ஆனால் அதை திருப்பி வைப்பதற்கு முன்பு செல்வத்தால் போதை மருந்து கொடுக்கப்படுகிறான். தாலி காணமல் போனதை கெட்ட சகுணமாக கருதி மணமகன் திருமணத்தை நிறுத்துகிறான். குற்ற உணர்வுக்கு ஆளான முரளி சாந்திக்கு உதவுவ்வேண்டும் என்று உறுதி கொள்கிறான். முரளிக்கு கல்யாணியை திருமணம் செய்து வைக்க வேண்டும் என்று அவனது பெற்றோர் விரும்புகிறார்கள். கல்யாணியும் முரளியை மணப்பதில் ஆர்வமாக இருக்கிறாள், ஆனால் அவன் சாந்தியால் ஈர்க்கப்படுகிறான். சாந்திக்கு உதவுவதற்கான முயற்சியில் செல்வம் மற்றும் அவனது பெற்றை முரளி எதிர்கொள்ள வேண்டிவருகிறது.

நடிகர்கள்[தொகு]

இசை[தொகு]

இப்படத்திற்கான பின்னணி இசை மற்றும் பாடல்களுக்கான இசையை இசையமைப்பாளர் தேவா மேற்கொண்டார். 1993 இல் வெளியான இந்த பாடல் பதிவில், வைரமுத்து எழுதிய 6 பாடல்கள் இருந்தன.[3]

எண் பாடல் பாடகர்(கள்) காலம்
1 'உன் புன்னகை போதுமடி' எஸ். பி. பாலசுப்பிரமணியம், சித்ரா 4:48
2 'மாமோய் பட்டிக்காட்டுக் குட்டி' எஸ். ஜானகி 4:43
3 'பெண்ணே நீ சூடும்' கே. ஜே. யேசுதாஸ் 4:11
4 'வானம் நமது' எஸ்.பி.பாலசுப்பிரமணியம் 4:22
5 'ஏறிக்கையா ஏறிக்கையா' சித்ரா, மனோ 4:35

வரவேற்பு[தொகு]

நியூ ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸின் கே. விஜயன் இதை "ஒரு சற்று வித்தியாசமான கதை" என்றும் "2½ மணிநேரம் பொழுது போக்குவதற்கான ஒரு வழியாக உள்ளது" என்றும் குறிப்பிட்டார்.[2]

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பாஸ்_மார்க்&oldid=3660458" இருந்து மீள்விக்கப்பட்டது