உள்ளடக்கத்துக்குச் செல்

பார்பி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பார்பி
Barbie
பார்பி பொமையின் தற்போதைய இலச்சினை
வகைஅலங்கார பொம்மை
உருவாக்குனர்(கள்)ரூத் ஹேண்ட்லர்
நிறுவனம்மேட்டல், இங்க்.
நாடுஅமெரிக்க ஐக்கிய நாடுகள்
காலம்March 9, 1959–present
மூலப்பொருள்நெகிழி
அதிகாரப்பூர்வ இணையதளம்

பார்பி (Barbie) என்பது அமெரிக்க தொழிலதிபர் ரூத் ஹேண்ட்லர் என்பவரால் உருவாக்கப்பட்ட ஓர் அலங்கார பொம்மை. ஆகும். அவரது மேட்டல், இங்க். என்னும் பொம்மைகள் தயாரிக்கும் ஒரு அமெரிக்க நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டு மார்ச் 9,1959 அன்று அறிமுகப்படுத்தப்பட்டது. பில்ட் லில்லி என்னும் ஒரு ஜெர்மன் பொம்மையை இதற்கான அடிப்படை ஊக்கமாகக் கொண்டு இதை உருவாக்கியதாக ரூத் ஹாண்ட்லர் கூறினார். பார்பி பொம்மைகளுக்கான சந்தையில் ஐம்பது வருடங்களாக முக்கியமான ஒரு பாகமாக இருந்து வருகிறது. மேட்டல் ஒரு பில்லியனுக்கும் அதிகமான பார்பி பொம்மைகளை விற்றுள்ளது.[1] இந்த பொம்மை 1984 முதல் காணொளி விளாஇயாட்டுகள், இயங்குபடத் திரைப்படங்கள், தொலைக்காட்சி/வலைத் தொடர்கள் மற்றும் ஒரு திரைப்படம் உள்ளிட்ட பல்லூடக வணிகமாக விரிவடைந்துள்ளது. 2009 ஆம் ஆண்டில், பார்பி தனது 50 வது பிறந்த நாளைக் கொண்டாடியது.[2] [3][4]

வரலாறு

[தொகு]

பார்பி மற்றும் அவரது ஆண் சகாவான கென், உலகின் மிகவும் பிரபலமான இரண்டு பொம்மைகளாக விவரிக்கப்பட்டுள்ளன.[5] மேட்டல் நிறுவனம் தனது வருவாயில் பெரும்பகுதியை பார்பி தொடர்புடைய பொருட்கள்-பாகங்கள், உடைகள், நண்பர்கள் மூலம் ஈட்டுகிறது.[1] 1977 ஆம் ஆண்டில் ஜர்னல் ஆஃப் பாப்புலர் கல்ச்சர் என்ற இதழில் டான் ரிச்சர்ட் காக்ஸ் என்பவர், பெண் சுதந்திரத்தின் பண்புகளை வெளிப்படுத்துவதன் மூலம் பார்பி சமூக மதிப்புகளில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்றும், பொம்மை ஏராளமான ஆபரணங்களுடன், பணக்கார நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளக்கூடிய ஒரு சிறந்த வாழ்க்கை முறையையும் கொண்டுள்ளது என்றும் குறிப்பிட்டார்.[6]

பார்பியை உருவாக்கிய ரூத் ஹேண்ட்லர் (1961)

தனது மகள் பார்பரா காகித பொம்மைகளுடன் விளையாடுவதை ரூத் ஹேண்ட்லர் கண்டார். அவற்றுக்கு அவள் பெரியவர்களின் பாத்திரங்களைக் கொடுத்து மகிழ்வதையும் அவர் கவனித்தார். அந்தச் சமயத்தில் குழந்தைகளுக்கான பொம்மைகள் எல்லாம் அநேகமாக சின்னஞ்சிறு குழந்தை வடிவங்களைப் பிரதிபலிப்பதாகவே இருந்தன. பொம்மைகளுக்கான சந்தையில் ஒரு இடைவெளி இருக்கக்கூடும் என்பதை உணர்ந்த ஹேண்ட்லர் வளர்ந்த, பருவமடைந்த ஒரு உடலை பொம்மையாக வடிக்கும் யோசனையை மேட்டல் பொம்மை நிறுவனத்தின் இணை நிறுவனரும் தனது கணவருமான எலியட்டிடம் கூறினார். அவர் இந்த யோசனையில் ஆர்வமற்றவராக இருந்தார்.[7]

1956வது வருடம் தம் குழந்தைகள் பார்பரா மற்றும் கென்னத் ஆகியோருடன் ஐரோப்பாவிற்கு ஒரு சுற்றுலா சென்றபோது, ருத் ஹெண்ட்லர் பில்ட் லில்லி என்றழைக்கப்பட்ட ஒரு ஜெர்மன் பொம்மையைப் பார்க்க நேர்ந்தது.[8][a] வளர்ந்த மனித உருவம் கொண்டிருந்த அந்த பொம்மைதான் ஹேண்ட்லரின் மனதில் இருந்த வடிவம் ஆகும். அவர் அந்த பொம்மைகளில் மூன்றை வாங்கினார். அவர் ஒன்றை தனது மகளுக்குக் கொடுத்தார். மற்ற இரண்டையும் தனது நிறுவனத்திற்கு எடுத்துச் சென்றார். லில்லி பொம்மை முதன்முதலில் மேற்கு ஜெர்மனி 1955 இல் விற்கப்பட்டது. இது ஆரம்பத்தில் பெரியவர்களுக்கு விற்கப்பட்டாலும், அதனை அலங்கரிப்பதை ரசித்த குழந்தைகளிடையே இது பிரபலமானது.[9][10]

பொம்மை உற்பத்தி செய்தல்

[தொகு]

அமெரிக்காவுக்குத் திரும்ப வந்தவுடன், (ஜேக் ரையான் என்ற பொறியாளரின் உதவியுடன்) ஹேண்ட்லர் அந்தப் பொம்மையை மீண்டும் வடிவமைத்து அதற்கு பார்பி என்ற ஒரு புதிய பெயரைச் சூட்டினார். இந்தப் பெயர் அவரது மகள் பார்பராவின் பெயரிலிருந்து வந்தது. 1959வது வருடம் மார்ச் 9ம் தேதி நியூயார்க் நகரில், அமெரிக்க அனைத்துலக விளையாட்டுப் பொருட்கள் கண்காட்சியில் இந்தப் பொம்மை முதன் முதலாக அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த பொம்மை மார்ச் 9,1959 அன்று நியூயார்க் நகரில் நடந்த அமெரிக்க சர்வதேச பொம்மை கண்காட்சியில் அறிமுகமானது.[11] இந்த தேதி பார்பியின் அதிகாரப்பூர்வ பிறந்த நாளாகவும் பயன்படுத்தப்படுகிறது.

வடிவம்

[தொகு]
மார்ச் 9,1959 அன்று அறிமுகப்படுத்தப்பட்ட முதல் பார்பி பொம்மை .

கருப்பும், வெள்ளையும் கலந்த ஒரு வரிக்குதிரை நீச்சல் உடை மற்றும், அதன் பிரத்யேக அடையாளமான உச்சந்தலையில் முடியப்பட்ட ஒரு போனி டெயில் ஆகியவற்றைக் கொண்டிருந்தது. மேலும் இது ஒரு பொன்னிற அல்லது இளஞ்சிவப்பு நிறத்தில் கிடைத்தது. "பதின் வயது நவ நாகரிக மாடல்" என்ற பெயரில் இந்த பொம்மை வர்த்தகப்படுத்தப்பட்டது. இதன் உடைகளை மேட்டலின் நாகரிக உடை வடிவமைப்பாளர் சார்லட் ஜான்சன் அமைத்திருந்தார். முதலில் வந்த பார்பி பொம்மைகள் ஜப்பான் நாட்டில் தயாராயின. அவற்றின் உடைகள் ஜப்பான் நாட்டு வீட்டுத் தொழிலாளர்களால் கைகளால் தைக்கப்பட்டிருந்தன. உற்பத்தி தொடங்கிய முதல் வருடம் 350,000 பார்பி பொம்மைகள் விற்பனையாகின.[12]

குறிப்புகள்

[தொகு]
  1. பாரெவர் பார்பி என்ற புத்த்கத்தின் ஆசிரியரான மேரி ஜி. லார்டுக்கு அளித்த பேட்டியில், ரூத் ஹேண்ட்லர், சுவிட்சர்லாந்தில் உள்ள லூசர்னில் பொம்மையைப் பார்த்ததாகக் கூறினார். இருப்பினும், மற்ற சந்தர்ப்பங்களில் ஹேண்ட்லர் தான் பொம்மையை சூரிக்கு அல்லது வியன்னாவில் பார்த்ததாகக் கூறியதாக புத்தகம் சுட்டிக்காட்டுகிறது.

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 Ziobro, Paul (28 January 2016). "Mattel to Add Curvy, Petite, Tall Barbies: Sales of the doll have fallen at double-digit rate for past eight quarters". Wall Street Journal. பார்க்கப்பட்ட நாள் 23 September 2020.
  2. "Barbie Runway Show – Fall 2009 Mercedes Benz Fashion Week New York". MyItThings.com. February 14, 2009. Archived from the original on July 14, 2011. பார்க்கப்பட்ட நாள் May 23, 2011.
  3. "Runway Rundown: The Barbie Show's 50 Designers!". TypePad. Archived from the original on July 7, 2011. பார்க்கப்பட்ட நாள் May 23, 2011.
  4. "Christian Louboutin explains Barbie "fat ankle" comments". Handbag.com. October 16, 2009. Archived from the original on March 3, 2010. பார்க்கப்பட்ட நாள் May 23, 2011.
  5. Norton, Kevin I.; Olds, Timothy S.; Olive, Scott; Dank, Stephen (1996-02-01). "Ken and Barbie at life size" (in en). Sex Roles 34 (3): 287–294. doi:10.1007/BF01544300. பன்னாட்டுத் தர தொடர் எண்:1573-2762. https://doi.org/10.1007/BF01544300. 
  6. Don Richard Cox, "Barbie and her playmates." Journal of Popular Culture 11.2 (1977): 303-307.
  7. Mary G. Lord, Forever Barbie: The unauthorized biography of a real doll (Bloomsbury Publishing USA, 2004).
  8. Javaid, Maham (May 25, 2023). "Barbie's 'pornographic' origin story, as told by historians - A new trailer for the Barbie movie shows her visiting the real world. In reality, the doll was based on a German sex toy called Lilli.". தி வாசிங்டன் போஸ்ட் இம் மூலத்தில் இருந்து May 26, 2023 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20230526144415/https://www.washingtonpost.com/lifestyle/2023/05/25/barbie-trailer-creator-pornographic-origin-doll/. பார்த்த நாள்: May 26, 2023. 
  9. "Sassy with a sidelong glance: Meet Lilli, Barbie's German inspiration". Sydney Morning Herald. https://www.smh.com.au/world/north-america/sassy-with-a-sidelong-glance-meet-lilli-barbie-s-german-inspiration-20230719-p5dpo0.html. 
  10. "Meet Lilli, the High-end German Call Girl Who Became America's Iconic Barbie Doll". Messy Nessy. January 29, 2016. பார்க்கப்பட்ட நாள் 10 February 2018.
  11. "Ruth Mosko Handler unveils Barbie Doll". Jewish Women's Archive. பார்க்கப்பட்ட நாள் 8 March 2014.
  12. "Barbie". FirstVersions.com. பார்க்கப்பட்ட நாள் 2021-06-02.

மேலும் வாசிக்க

[தொகு]

வெளி இணைப்புகள்

[தொகு]
விக்கிமீடியா பொதுவகத்தில்,
பார்பி
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பார்பி&oldid=4118426" இலிருந்து மீள்விக்கப்பட்டது