உள்ளடக்கத்துக்குச் செல்

பழனிச் சிரிப்பான்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பழனிச் சிரிப்பான்
M. fairbanki (மேகமலை)
உயிரியல் வகைப்பாடு e
திணை:
விலங்கு
தொகுதி:
வரிசை:
குடும்பம்:
பேரினம்:
இனம்:
M. fairbanki
இருசொற் பெயரீடு
Montecincla fairbanki
(பிலன்போர்டு, 1869)
வேறு பெயர்கள்

Garrulax jerdoni fairbanki
Strophocincla fairbanki
Trochalopteron fairbanki

பழனிச் சிரிப்பான் (Palani laughingthrush, உயிரியல் பெயர்: மான்டிசின்க்லா பேர்பேங்கி) என்பது ஒரு வகைச் சிரிப்பான் ஆகும். இது பாலக்காட்டுக் கணவாய்க்குத் தெற்கே உள்ள மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் காணப்படுகிறது. இதனுடன் தொடர்புடைய மற்றொரு சிரிப்பானான அசம்புச் சிரிப்பான் அச்சன்கோயில் ஆற்றுக்குத் தெற்கே காணப்படுகிறது.

வகைப்படுத்தல்

[தொகு]

பழனிச் சிரிப்பான் சிற்றினம் கொடைக்கானல் பகுதியிலிருந்து ரெவ். சாமுவேல் பேகன் பேர்பேங்க் என்பவரால் பெறப்பட்ட மாதிரியின் அடிப்படையில் விவரிக்கப்பட்டது. இது புல்னே சிரிப்பான் என்று அழைக்கப்பட்டது.[2] ஜெர்டோனியின் கருப்பு கன்னம் இல்லாதது இந்த சிற்றினத்தை முதன்முதலில் விவரிக்கப்பட்டபோது குறிப்பிடப்பட்டது. இருப்பினும் 1922-ல் ஸ்டூவர்ட் பேக்கரால் இலங்கை மற்றும் மியான்மர் உட்பட பிரித்தானிய இந்தியாவின் விலங்கினங்களின் இரண்டாவது பதிப்பில் ஜெர்டோனியின் கீழ் ஒரு துணையினமாக இது மாற்றப்பட்டது.[2][3] 1880-ல் பிளான்போர்ட் எப். டபுள்யூ. போர்திலான் என்பவரால் பெறப்பட்ட ஒரு மாதிரியின் அடிப்படையில் மெரிடியோனேலை விவரித்தார்.[4] 1883ஆம் ஆண்டில் வில்லியம் ரக்சுடன் டேவிசினால் மெரிடியோனேல் மற்றும் பேர்பாங்கியின் நெருங்கிய உறவு கவனிக்கப்பட்டது.[5] பாலக்காட்டு கணவாயினை உயிர் புவியியல் தடையாகக் கருதி, கன்ன நிறத்திற்கு முக்கியத்துவம் அளித்து, படிவங்களின் தற்போதைய மறுதொகுப்பு, 2005-ல் பமீலா சி. ராசுமுசென் மற்றும் ஆண்டர்டன் ஆகியோரால் அறிமுகப்படுத்தப்பட்டது.[6][7] 2017-ல் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வில், இந்த சிற்றினமானது ஒரு புதிய பேரினமான மான்டிசின்க்லாவில் வைக்கப்பட்டுள்ளது என்றும், இந்த வேறுபாட்டின் அடிப்படையில், மெரிடியோனேல் ஒரு முழு சிற்றினமாக கருதப்படுகிறது.[8]

குணங்கள் மற்றும் சூழலியல்

[தொகு]
அளவீடுகள்
பழனிச் சிரிப்பான்
நீளம் 175–185 mm (6.9–7.3 அங்)
அலகு 21–23 mm (0.83–0.91 அங்)
இறக்கை 83–91 mm (3.3–3.6 அங்)
81–86 mm (3.2–3.4 அங்)
வால் 86–97 mm (3.4–3.8 அங்)
86–92 mm (3.4–3.6 அங்)
கணுக்கால் 33–35 mm (1.3–1.4 அங்)
அசம்புச் சிரிப்பான்
நீளம் 173–190 mm (6.8–7.5 அங்)
அலகு 21–22 mm (0.83–0.87 அங்)
இறக்கை 85–88 mm (3.3–3.5 அங்)
84–85 mm (3.3–3.3 அங்)
வால் 95–96 mm (3.7–3.8 அங்)
கணுக்கால் 35–36 mm (1.4–1.4 அங்)

பழநி சிரிப்பான் இணையாகவும் சிறிய குழுக்களாகவும் காணப்படுகின்றன. இவை சில சமயங்களில் பிற இனங்களுடன் இரை தேட மந்தைகளுடன் இணைகின்றன. இவை லோபெலியா எக்செல்சா, உரோடோடெண்ட்ரான் மற்றும் இசுடுரோபிலாந்தீசு பேரினப் பூக்களின் தேனை உண்கின்றன. இவை இசுடுரோபிலாந்தீசு போன்ற சில பூக்களின் இதழ்களையும், வைபர்னம், யூரியோ, பெர்ரி மற்றும் தவிட்டுக்கொய்யா உள்ளிட்ட பலவகையான தாவரங்களின் பழங்களையும் உண்ணும்.[9] இதனுடைய இனப்பெருக்க காலம் திசம்பர் முதல் சூன் வரை ஆனால் ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் உச்சமாக இருக்கும். கூடு என்பது பாசியுடன் கூடிய ஒரு கோப்பை போன்றிருக்கும். இது புல் மற்றும் அடர்த்தியான தாவரங்களில் மறைந்திருக்கும்.[10] இரண்டு நீல நிற முட்டைகள் சிவப்பு நிற அடையாளங்கள் மற்றும் கருப்பு-கன்னம் கொண்ட சிரிப்பான்களிலிருந்து பிரித்தறிய முடியாதவை. கூடு இளம் குஞ்சுகள் வளர்ந்த பின் கூடு அழிக்கப்படும். அருகில் உள்ள மற்ற பறவைகளின் கூடுகளையும் தாய்ப்பறவைகள் சேதப்படுத்தலாம். குஞ்சு பொரிக்காத முட்டைகளை தாய் பறவைகள் உண்ணலாம்.[11][12] இதனுடைய தொடர்பு அழைப்புகள் ஏறுவரிசையில் பி-கோ... பி-கோ என அமையும் (pee-koko... pee-koko). சில் அழைப்புகள் பாடல்கள் போலத் தோன்றும்.[6]

உசாத்துணை

[தொகு]
  1. BirdLife International (2016). "Montecincla fairbanki". IUCN Red List of Threatened Species 2016: e.T103874452A95109792. doi:10.2305/IUCN.UK.2016-3.RLTS.T103874452A95109792.en. https://www.iucnredlist.org/species/103874452/95109792. பார்த்த நாள்: 12 November 2021. 
  2. 2.0 2.1 Blanford, WT (1869). "Ornithological Notes, chiefly on some bird of Central, Western and Southern India". J. Asiat. Soc. Bengal 38: 164–191. https://archive.org/stream/journalofasiati381869asia#page/175/mode/1up/. 
  3. Jerdon, TC (1872). "Supplementary Notes to 'The Birds of India.'". Ibis 14 (3): 297–310. doi:10.1111/j.1474-919X.1872.tb08412.x. https://archive.org/stream/ibis23brit#page/306/mode/2up. 
  4. Anonymous (1881). "Notices of recent Ornithological Publications". Ibis 23 (3): 472–495. doi:10.1111/j.1474-919X.1881.tb06600.x. 
  5. Davison, William (1883). "Notes on some birds collected on the Nilghiris and in parts of Wynaad and southern Mysore.". Stray Feathers 10 (5): 329–419. https://archive.org/stream/strayfeathersjou101887hume#page/378/mode/2up/. 
  6. 6.0 6.1 Rasmussen, PC; JC Anderton (2005). Birds of South Asia. The Ripley Guide. Volume 2. Washington DC & Barcelona: Smithsonian Institution and Lynx Edicions. p. 414.
  7. Baker, ECS (1922). The Fauna of British India, Including Ceylon and Burma. Birds. Volume 1 (2nd ed.). London: Taylor and Francis. pp. 178–179.
  8. Robin, V.V.; Vishnudas, C. K.; Gupta, Pooja; Rheindt, Frank E.; Hooper, Daniel M.; Ramakrishnan, Uma; Reddy, Sushma (2017). "Two new genera of songbirds represent endemic radiations from the Shola Sky Islands of the Western Ghats, India". BMC Evolutionary Biology 17 (1): 31. doi:10.1186/s12862-017-0882-6. பப்மெட்:28114902. 
  9. Islam, MA (1987). "Food and feeding habits of the South Indian Laughing Thrushes Garrulax cachinnans and Garrulax jerdoni (Aves: Muscicapidae)". Bangladesh J. Zool. 15: 197–204. 
  10. Bates, R.S.P. (1931). "A note on the nidification and habits of the Travancore Laughing-Thrush (Trochalopterum jerdoni fairbanki)". J. Bombay Nat. Hist. Soc. 35 (1): 204–207. https://www.biodiversitylibrary.org/page/47540172. 
  11. Ali, S; SD Ripley (1996). Handbook of the birds of India and Pakistan. Volume 7 (2nd ed.). New Delhi: Oxford University Press. pp. 42–44.
  12. Islam, MA (1989). "Nest destruction and cannibalistic behaviour of Laughing Thrushes, Garrulax spp. (Aves: Muscicapidae)". Bangladesh J. Zool. 17 (1): 15–17. 

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=பழனிச்_சிரிப்பான்&oldid=3777571" இலிருந்து மீள்விக்கப்பட்டது