பயனர் பேச்சு:Sasitharagurukkal

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

வாருங்கள்!

வாருங்கள், Sasitharagurukkal, விக்கிப்பீடியாவிற்கு உங்களை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறோம்!

பூங்கோதை விக்கிப்பீடியாவில் பங்களிப்பதைப் பற்றி பேசுகிறார்

உங்கள் பங்களிப்புக்கு நன்றி தொகுப்புக்கு. விக்கிப்பீடியா என்பது உங்களைப் போன்ற பலரும் இணைந்து, கூட்டு முயற்சியாக எழுதும் கலைக்களஞ்சியம் ஆகும். விக்கிப்பீடியாவைப் பற்றி மேலும் அறிய புதுப் பயனர் பக்கத்தைப் பாருங்கள். தமிழ் விக்கிப்பீடியாவைப் பற்றிய உங்கள் கருத்துக்களை தமிழ் விக்கிப்பீடியாவில் கலந்துரையாடலுக்கான ஆலமரத்தடியில் தெரிவியுங்கள். ஏதேனும் உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்திலோ அதிக விக்கிப்பீடியர்கள் உலாவும் முகநூல் (Facebook) பக்கத்திலோ கேளுங்கள். நீங்கள் கட்டுரை எழுதி, பயிற்சி பெற விரும்பினால், அருள்கூர்ந்து உங்களுக்கான சோதனை இடத்தைப் (மணல்தொட்டி) பயன்படுத்துங்கள்.


தங்களைப் பற்றிய தகவலை தங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், தங்களைப் பற்றி அறிந்து மகிழ்வோம். விக்கிப்பீடியா தங்களுக்கு முதன்முதலில் எப்படி அறிமுகமானது என்று தெரிவித்தால், தமிழ் விக்கிப்பீடியாவிற்கு மேலும் பல புதுப்பயனர்களைக் கொண்டு வர உதவியாக இருக்கும்!


நீங்கள் கட்டுரைப் பக்கங்களில் உள்ள பிழைகளைத் திருத்தலாம். கூடுதல் தகவலைச் சேர்க்கலாம். புதுக்கட்டுரை ஒன்றையும் கூடத் தொடங்கலாம். இப்பங்களிப்புகள் எவருடைய ஒப்புதலுக்கும் காத்திருக்கத் தேவையின்றி உடனுக்குடன் உலகின் பார்வைக்கு வரும்.

பின்வரும் இணைப்புக்கள் உங்களுக்கு உதவலாம்:

--உமாபதி \பேச்சு 19:00, 27 மே 2010 (UTC)

உங்களைப் பற்றிய விபரங்கள்[தொகு]

தயவுசெய்து உங்களைப் பற்றிய விபரங்களை பயனர்:Sasitharagurukkal இல் எழுதவும். விக்கிப்பீடியாக் கட்டுரையில் உங்களைப் பற்றிய விபரங்களைத் தருவது கலைக்களஞ்சியத்திற்கு ஒவ்வாது. --உமாபதி \பேச்சு 19:05, 27 மே 2010 (UTC)

வணக்கம், உங்கள் பங்களிப்புகள் கண்டு மகிழ்ச்சி. அண்மையில் சிவஸ்ரீ க. சிவபாதசுந்தரக்குருக்கள் பற்றிய ஒரு கட்டுரை எழுதியிருக்கிறீர்கள். இக்கட்டுரையில் தரவுகள் போதுமானதாக இல்லை. அன்னாரைப்பற்றி மேலும் சில தகவல்களை அறிந்து தாருங்கள். சைவக்குருமார்களின் வளர்ச்சிக்கு வித்திட்டவர், தொழில் மதகுரு, பதிப்பாளர், சைவபிரசங்கர், எழுத்தாளர்-- இவை பற்றி மேலும் சில தகவல்களைத் தாருங்கள். குறைந்தது அவர் ஆற்றிய சேவைகள் (உ+ம் பதிப்பாளராக, எவற்றைப் பதிப்பித்தார், எழுத்தாளர், எழுதிய நூல்கள் பற்றிய விபரங்கள்). நன்றி.--Kanags \உரையாடுக 06:56, 2 ஜூன் 2010 (UTC)

மகிழ்ச்சி![தொகு]

Sasitharagurukkal!நீங்கள் தமிழ் விக்கிப்பீடியாவிற்கு வந்ததில் மட்டற்ற மகிழ்ச்சி. சமயம் சார்ந்த தகவல் பக்கங்களை அளித்து வருவது குறித்து மகிழ்ச்சி. ஏதேனும் ஐயம் இருந்தால் என் பேச்சுப் பக்கத்தில்தொடர்பு கொள்ளுங்கள். நன்றி. --பரிதிமதி 03:03, 13 ஜூன் 2010 (UTC)

கோயில் பெயர்கள்[தொகு]

வணக்கம், விக்கிப்பீடியா பெயரிடல் கொள்கைப்படி தலைப்புகளில் சிறப்பு விளிப்புப் பெயர்கள் தவிர்க்கப்படுகின்றன. எ-கா: அருள்மிகு, ஸ்ரீ, உயர்திரு, திரு, டாக்டர், திருமதி, முனைவர் போன்றவை. மேலும் இயன்றளவு கிரந்த எழுத்துக்கள் தவிர்த்தும் எழுதப்படுகின்றன. அதன்படியே நீங்கள் ஆரம்பித்திருந்த கோயில் பெயர்களில் தலைப்புக்களில் சிறிது மாற்றம் செய்திருந்தேன். கட்டுரையில் மாற்றம் செய்யவில்லை. மேலும், இயன்றளவு கலைக்களஞ்சிய நடைக்கும் மாற்றியிருக்கிறேன். நான் மாற்றம் செய்திருந்த கட்டுரைகளில் ஏதேனும் மாற்றங்களில் உங்களுக்கு உடன்பாடு இல்லையெனில் உங்கள் கருத்துக்களை அந்தந்தக் கட்டுரைகளின் உரையாடல் பக்கங்களில் தாருங்கள். நன்றி.--Kanags \உரையாடுக 06:46, 27 ஜூன் 2010 (UTC)

பொருளடக்கம்[தொகு]

சசிதரக்குருக்கள் ஐயா, பொருளடக்கம் ஒரு கட்டுரையில் வருவதற்கு அக்கட்டுரையில் குறைந்தது 4 உப தலைப்புகள் வேண்டும். உங்கள் சைவக் கிரியை கட்டுரையில் இதுவரையில் மூன்று உப தலைப்புகளே உண்டு. இதனாலேயே பொருளடக்கம் காட்டப்படவில்லை.--Kanags \உரையாடுக 09:15, 29 ஜூன் 2010 (UTC)

பங்களிப்பு வேண்டுகோள்[தொகு]

தமிழ் விக்கிப்பீடியாவில் தங்கள் பங்களிப்புகள் அனைத்தும் சிறப்பானவை. இந்த சிறப்பான பங்களிப்பில் தங்கள் பணிகளின் காரணமாக, தற்போது சற்று இடைவெளி ஏற்பட்டிருக்கிறது என கருதுகிறேன். தங்களுக்குக் கிடைக்கும் விடுமுறை நாளில் / ஓய்வு நேரங்களில் தமிழ் விக்கிப்பீடியாவிற்கு பங்களித்து, தமிழ் விக்கிப்பீடியாவின் வளர்ச்சியில் மீண்டும் பங்கெடுக்க வேண்டுமாய் அன்புடன் வேண்டுகிறேன்.--தேனி.எம்.சுப்பிரமணி./உரையாடுக. 08:41, 21 சூலை 2011 (UTC)

விக்கிப்பீடியர் சந்திப்பு ஏற்பாடுகள்[தொகு]

கொழும்பில் வரும் ஏப்ரல் 27, 28 இல் நடைபெறும் தமிழ் ஆவண மாநாட்டில் பங்குபெற பல விக்கிப்பீடியர் வருவதாக உள்ளது. இந்த சந்தர்ப்பத்தைப் பயன் படுத்தும்வகையில் விக்கிப்பீடியர் சந்திப்பொன்றை நடாத்துவது குறித்து சிந்தித்தோம். ஆலமரத்தடியில் இது குறித்த உரையாடல் ஒன்றும் இடம்பெற்றது. இலங்கைப் பயனர்கள் இதனைப் பயன்படுத்தி சந்திப்பில் கலந்து கொள்ளுவதும் விக்கி குறித்த மேம்பாட்டு முன்னெடுப்புகள் மற்றும் தொடர்புபட்ட விடயங்கள் பற்றி உரையாடுவதும் இதன் மூலம் எதிர்பார்க்கப்படுகின்றது. இதற்காக இலங்கைப் பயனராகிய தங்களின் கருத்தை தெரிந்துகொள்ள விரும்புகின்றேன். நன்றிகள்.--சஞ்சீவி சிவகுமார் (பேச்சு) 06:39, 13 மார்ச் 2013 (UTC)

விக்கித்திட்டத்தில் பங்கேற்க அழைப்பு[தொகு]

விக்கித் திட்டம் சைவத்தில் பங்கேற்க அழைப்பு

வணக்கம், Sasitharagurukkal!

தமிழால் சைவமும், சைவத்தால் தமிழும் வளரட்டும்

தமிழ் விக்கிப்பீடியாவில் சைவம் குறித்தான கட்டுரைகளை தாங்கள் எழுதுவதற்கும், மேம்படுத்துவதற்கும் என் நன்றியையும் மகிழ்ச்சியையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

நமது தமிழ் விக்கிப்பீடியாவில் சைவம் தொடர்பான கட்டுரைகளை வளர்த்தெடுக்க விக்கிப்பீடியா:விக்கித் திட்டம் சைவம் உருவாக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தில் இணைந்து சைவத்தினையும் தமிழினையும் செம்மைப்படுத்த தங்களை அன்புடன் அழைக்கிறேன்.

இந்த திட்டத்தை பின்வரும் வழிகளின் மூலமாக மேம்படுத்தலாம்.

  • உருவாக்கப்பட வேண்டிய கட்டுரைகள் என்ற பட்டியலின் கீழுள்ள கட்டுரைகளை உருவாக்கி உதவலாம். குறுங்கட்டுரையாக தொடங்கி, தக்க ஆதாரங்களைச் சேர்த்து உதவலாம். படங்களை இணைத்து கட்டுரைகளை மேம்படுத்தலாம்.

--சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 12:34, 7 சூன் 2013 (UTC)

32 விநாயகர் திருவுருவங்கள் குறித்த கட்டுரைகள்[தொகு]

வணக்கம், விக்கிப்பீடியா:நீக்கலுக்கான வாக்கெடுப்பு#விநாயகர் திருவுருவங்கள் குறித்த கட்டுரைகள் பார்த்து உங்கள் கருத்தைத் தெரிவிக்க வேண்டுகிறேன். இக்கட்டுரைகளை விரிவாக்கி எழுதுவதற்கான தகவல் ஆதாரங்கள் ஏதேனும் இருந்தால் சுட்ட வேண்டுகிறேன். நன்றி.--இரவி (பேச்சு) 18:42, 11 மே 2014 (UTC)

Nikolai Noskov[தொகு]

ஹலோ dear Sasitharagurukkal! Can you translate in Tamil language an article about singer (Nikolai Noskov)? If you make this article, then I will be grateful! நன்றி! --78.25.120.206 09:19, 25 ஏப்ரல் 2017 (UTC)

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்_பேச்சு:Sasitharagurukkal&oldid=2263727" இருந்து மீள்விக்கப்பட்டது