உள்ளடக்கத்துக்குச் செல்

க. சிவபாதசுந்தரக்குருக்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(சிவஸ்ரீ க. சிவபாதசுந்தரக்குருக்கள் இலிருந்து வழிமாற்றப்பட்டது)


சிவஸ்ரீ க. சிவபாதசுந்தரக்குருக்கள்
பிறப்புசிவபாதசுந்தரம்
மார்ச் 11, 1926
யாழ்ப்பாணம், இலங்கை
இறப்புஅக்டோபர் 21, 1994(1994-10-21) (அகவை 68)
திருநெல்வேலி, யாழ்ப்பாணம்
தேசியம்இலங்கைத் தமிழர்
பணிமதகுரு, பதிப்பாளர், சைவபிரசங்கர், எழுத்தாளர்
அறியப்படுவதுசைவக்கிரியை, சைவக்குருமார்களின் வளர்ச்சிக்கு வித்திட்டவர்
சமயம்சைவம்
வாழ்க்கைத்
துணை
பொன்னம்மா
பிள்ளைகள்நீலகண்டக்குருக்கள், ஆறுமுகக்குருக்கள், லலிதாம்பிகை, அருணாசலக்குருக்கள், கைலாசநாதக்குருக்கள், இராஜராஜேஸ்வரி, மகேஸ்வரக்குருக்கள்

சிவஸ்ரீ க. சிவபாதசுந்தரக்குருக்கள் (மார்ச் 11, 1926 - ஒக்டோபர் 21, 1994) ஈழத்தில் சைவசமய வளர்ச்சிக்கும் சைவக்குருமார்களின் வளர்ச்சிக்கும் பெரும் தொண்டாற்றியவர். சைவக்குருமார்கள் அனைவரும் நிறுவனரீதியாக ஒன்றிணைந்து செயற்பட்டு சைவசமய வளர்ச்சிக்கும் சைவக்குருமார்களின் வளர்ச்சிக்கும் உதவும் நோக்கில் 1971 ஆம் ஆண்டு "அகில இலங்கை சைவக்குருமார் அர்ச்சகர் சபை" எனும் நிறுவனத்தை உருவாக்கி இறுதி வரை அதன் செயலாளராக இருந்து சைவக்குருமார்களை ஒன்றிணைத்து கும்பாபிசேக நிகழ்வுகளை நடத்துதல், சமய தீட்சைகள், சமயப் பிரசாரங்கள், கூட்டுப்பிரார்த்தனைகள் போன்ற நிகழ்வுகளை நடத்துதல், ஆலய நிர்மாணத்திற்கு வேண்டிய ஆலோசனைகளை வழங்குதல் உட்பட பல பணிகளை சபையினூடாக முன்னின்று நடாத்தியவர். சைவக்குருமார்களின் சிறார்களுக்கு குருகுலக்கல்வியை போதித்து அவர்களுக்கு குருப்பட்டாபிசேகம் செய்தும் வைத்துள்ளார்கள்.

வாழ்க்கைக் குறிப்பு

[தொகு]

பிறப்பு

[தொகு]

கட்டுவன் சைவக்குரு பரம்பரையில் தோற்றிய ஆ. கந்தையா ஐயருக்கும் கல்வியங்காடு செல்லம்மா அம்மையாருக்கும் மகனாக பிறந்தார். ஆரம்பக்கல்வியை கல்வியங்காடு சைவ வித்தியாசாலையிலும், பின்னர் கட்டுவன் பாலர் ஞானோதய வித்தியாசாலையிலும் பெற்றார்.

குருகுலக்கல்வி

[தொகு]

வறுத்தலைவிளானில் மருதடி விநாயகர் அருளுறு மகிமையில் வாழ்ந்த தொல்காப்பிய இலக்கண முனிவர் வடதென்மொழி இலக்கிய வித்தகர் மகாவித்துவான் பிரம்மஸ்ரீ சி. கணேசையர் அவர்களிடம் குருகுலவாசமாக கந்தபுராணம், பெரியபுராணம், கருடபுராணம், திருவிளையாடற் புராணம், திருவாதவூரடிகள் புராணம் என்னும் நூல்களைப் பாடங்கேட்டு தமிழ், சமயக்கல்வியில் புலமை பெற்றார். கணேசையரிடம் கல்வி பயின்று நல்லாசி பெற்றதனால் இவரை எல்லோரும் "கணேசையா" என்னும் சிறப்பு நாமம் செல்லி அழைக்கலாயினர். பிற்காலத்தில் இதுவே இளையோர் இவரை "கணேசப்பா" என்று அழைக்க காரணமாகியது.

கீரிமலை நகுலேஸ்வர ஆதீனகுரு நகுலேஸ்வரக்குருக்கள், மாவை ஆதீனகுரு சண்முகநாதக்குருக்கள் ஆகியோருடன் இணைந்து குமாரசுவாமிக்குருக்களிடம் வடமொழிக்கல்வியையும், ஆகமக்கல்வியையும் பயின்று கோயிற் கிரியைகளில் விஷேட பயிற்சியும் பெற்றார்.

திருமணமும் புத்திரப்பேறும்

[தொகு]

சைவாசாரம் மிகுந்த நற்குலத்தில் வாழ்ந்த ஐயாத்துரைக்குருக்களும் சின்னாச்சிப்பிள்ளைக்கும் மகளாகப் பிறந்த பொன்னம்மா அவர்களை மணம் முடித்தார்கள். பிள்ளைகளாக நீலகண்டக்குருக்கள், ஆறுமுகக்குருக்கள், லலிதாம்பிகை, அருணாசலக்குருக்கள், கைலாசநாதக்குருக்கள், இராஜராஜேஸ்வரி, மகேஸ்வரக்குருக்கள் ஆகியோரைப் பெற்றார்.

குருப்பட்டாபிஷேகம்

[தொகு]

குருக்கள் ஐயா அவர்கள் தனது 16வது வயதில் கட்டுவன் துறட்டயிட்டி ஞானவைரவர் ஆலயத்தில் நெடியகாடு திருச்சிற்றம்பலப் பிள்ளையார் கோவில் பிரதமகுரு சிவஸ்ரீ சோமுக்குருக்கள் அவர்களால் குருப்பட்டாபிஷேகம் நிகழ்த்தப்பட்டது. இவர் குருப்பட்டாபிஷேகம் பெறமுன் கீரிமலை, மாவிட்டபுர தேவஸ்தான குருமார்களே கட்டுவன், மயிலிட்டி, குரும்பசிட்டி ஆகிய இடங்களில் சமயச் சடங்குகளை ஆற்றிய வந்தனர். குருப்பட்டாபிஷேகத்தின் பின் அக்கிராமங்களில் இவரே சமயச்சடங்குகளை இறுதி வரை ஆற்றிய பெருமைக்குரியவர். அத்துடன் கட்டுவன் கிராமத்தில் முதன்முதல் குருப்பட்டாபிஷேகம் பெற்றவரும் இவரே ஆவர்.

சைவக்குருமார்களின் வளர்ச்சிப் பணி

[தொகு]

சைவக்குருமார்கள் அனைவரும் நிறுவனரீதியாக ஒன்றிணைந்து செயற்பட்டு சைவசமய வளர்ச்சிக்கும் சைவக்குருமார்களின் வளர்ச்சிக்கும் உதவ வேண்டும் எனும் நோக்கில் இவரின் பெருமுயற்சியால் கட்டுவன் ஸ்ரீஞானவைரவர் ஆலய மண்டபத்தில் 1971ம் ஆண்டு சைவக்குருமார்களை ஒன்றுதிரட்டி அகில இலங்கை சைவக்குருமார் அர்ச்சகர் சபை எனும் நிறுவனத்தை ஸ்தாபித்து இறுதிவரை அதன் செயலாளராக இருந்து பணியாற்றினார். இதனூடாக கும்பாபிஷேக நிகழ்வுகளை ஒன்றிணைந்து நடத்துதல், சமய தீட்சைகள், சமயப் பிரசாரங்கள், கூட்டுப்பிரார்த்தனைகள் போன்ற நிகழ்வுகளை நடத்துதல், ஆலய நிர்மாணத்திற்கு வேண்டிய ஆலோசனைகளை வழங்குதல் உட்பட பல பணிகளை சபையினர் முன்னின்று நடாத்தி வந்தார்கள்.

சபையின் ஸ்தாபகரும் செயலாளருமாகிய சிவஸ்ரீ க. சிவபாதசுந்தரக்குருக்கள் அவர்கள் கட்டுவனில் தமது இல்லத்தில் சைவக்குருமார்களின் சிறார்களை அழைத்து குருகுலக்கல்வியைப் போதித்ததோடு தானும் ஏனைய சைவக்குருமார்களும் இணைந்து நடத்தும் கிரியா நிகழ்வுகளில் அவர்களைக் கலந்துகொள்ள செய்து அவர்களுக்கு வேண்டிய செய்முறைப் பயிற்சிகளையும் வழங்கினார்கள்.

புண்ணிய திருத்தல யாத்திரை

[தொகு]

இவர் தீராவினைகள் தீர்க்கும் புண்ணியத் திருத்தல யாத்திரைகள் பல முறை செய்தவர். இந்நியாவில் மதுரை, சிதம்பரம், திருவண்ணாமலை, ஸ்ரீரங்கம், திருச்செந்தூர், திருப்பழனி, காசி, சபரிமலை ஆகிய தலங்களையும் இலங்கையில் திருக்கோணேஸ்வரம், திருக்கேதீஸ்வரம், முன்னேஸ்வரம், கதிர்காமம், நயினை நாகபூசணி ஆகிய தலங்களையும் தரிசித்து இறையருள் பெற்றவர். 1986ம் ஆண்டு தம் இல்லத்தரசியுடன் காசி யாத்திரை செய்து விஸ்வநாதப் பெருமானின் திருவருள் பெற்றவர். இந்த யாத்திரையே இவரின் கடைசி யாத்திரையாகும்.

பட்டங்கள்

[தொகு]
 • கிரியா வித்தகர்
 • விநாயக பூஜா துரந்தரர்
 • குருமணி
 • சிவாகம கிரியா ரத்தினம்

குருத்துவப்பணி

[தொகு]

இவர் குருவாக இருந்து நடாத்திய மஹாகும்பாபிஷேகங்கள்

[தொகு]
 1. மந்திகை கண்ணகை அம்மன் ஆலயம்
 2. நாயன்மார்கட்டு அரசடிப்பிள்ளையார் ஆலயம்
 3. திருக்கோவில் சித்திரவேலாயுத சுவாமி ஆலயம்
 4. ஏழாலை கண்ணகை அம்மன் ஆலயம்
 5. நாயன்மார்கட்டு ஸ்ரீவெயிலுகந்த விநாயகர் ஆலயம்
 6. நாயன்மார்கட்டு ஸ்ரீஇராஜராஜேஸ்வரி (பேய்ச்சி) அம்பாள் ஆலயம்
 7. அச்சுவேலி தீர்த்தாங்குளப் பிள்ளையார் ஆலயம்

மஹோற்சவம் நிகழ்த்திய ஆலயங்கள்

[தொகு]
 1. நாயன்மார்கட்டு ஸ்ரீஇராஜராஜேஸ்வரி (பேய்ச்சி) அம்பாள் ஆலயம்
 2. அச்சுவேலி தீர்த்தாங்குளப் பிள்ளையார் ஆலயம்

இவர் குருவாக இருந்து நடாத்திய ஆசார்யாபிஷேகங்கள்

[தொகு]
 • சிவஸ்ரீ அ. பாலசுந்தரக்குருக்கள்
 • சிவஸ்ரீ வே. நவரத்தினக்குருக்கள்
 • சிவஸ்ரீ வே. சண்முகராசாக்குருக்கள்
 • சிவஸ்ரீ வே. தியானந்தராசாக்குருக்கள்
 • சிவஸ்ரீ சோ. பாலசுப்பிரமணியக்குருக்கள்
 • சிவஸ்ரீ சோ. சிவசுப்பிரமணியக்குருக்கள்
 • சிவஸ்ரீ கு. பாலசுப்பிரமணியக்குருக்கள்
 • சிவஸ்ரீ சதா. மகாலிங்கசிவக்குருக்கள்
 • சிவஸ்ரீ சதா. மகேஸ்வரக்குருக்கள்
 • சிவஸ்ரீ சோமசேகரக்குருக்கள்
 • சிவஸ்ரீ தி. சோமாஸ்கந்தராஜாக்குருக்கள்
 • சிவஸ்ரீ பா. கணேசலிங்கக்குருக்கள்
 • சிவஸ்ரீ இ. குமாரசாமிக்குருக்கள்
 • சிவஸ்ரீ ந. கோணேஸ்வரக்குருக்கள்
 • சிவஸ்ரீ செ. பரமேஸ்வரக்குருக்கள்

தொகுத்து வெளியிட்ட நூல்கள்

[தொகு]
 1. கேதார கௌரி விரதம்
 2. முத்ராலட்சண விதி
 3. மஹோற்சவ காலத் தமிழ் வேதத் திருமுறைத் திரட்டு
 4. விவாகக் கிரியை விளக்கம்
 5. மஹாகும்பாபிஷேக தத்துவங்கள்
 6. மஹோற்சவ விளக்கம்
 7. அபரக்கிரியை விளக்கம்
 8. ஐயப்பசுவாமி பஜனைப் பாடல்கள்
 9. திருவிளக்கு வழிபாடு
 10. வீரபத்திரக் கடவுள்

உசாத்துணை நூல்கள்

[தொகு]

[1]

 1. சதாசிவக்குருக்கள், சிவஶ்ரீ செ. நாயன்மார்கட்டு அரசடிப்பிள்ளையார் ஆலயல இரதோற்சவ மலர், - 1990