உள்ளடக்கத்துக்குச் செல்

பயனர் பேச்சு:Krishnaprasaths/தொகுப்பு 1

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

வாருங்கள், Krishnaprasaths/தொகுப்பு 1! உங்களை வரவேற்கிறோம்.

வாருங்கள் Krishnaprasaths/தொகுப்பு 1, உங்களை வரவேற்கிறோம்!
வாருங்கள் Krishnaprasaths/தொகுப்பு 1, உங்களை வரவேற்கிறோம்!

விக்கிப்பீடியாவிற்கு உங்களை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறோம். விக்கிப்பீடியாவைப் பற்றி அறிந்து கொள்ள புதுப் பயனர் பக்கத்தைப் பாருங்கள். தமிழ் விக்கிப்பீடியா பற்றிய உங்கள் பொதுவான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும். ஏதேனும் உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்தில் கேளுங்கள். நீங்கள் கட்டுரை எழுதிப் பயிற்சி செய்ய விரும்பினால், தயவு செய்து மணல்தொட்டியைப் பயன்படுத்துங்கள்.

விக்கிப்பீடியாவிற்குப் பங்களிப்பது பற்றி மேலும் அறிந்து கொள்ள, தயவு செய்து பின் வரும் பக்கங்களை ஒருமுறை பார்க்கவும்:

__________________________________________________________________________________________________________________

கையொப்பம் இட இந்தப் பொத்தானை அமுக்கவும்


தாங்கள் தமிழ் விக்கிப்பீடியாவின் பேச்சுப் பக்கங்களிலும், கலந்துரையாடல்களிலும் கலந்து கொள்ளும் போது தங்கள் கையொப்பத்தை இட ~~~~ என்ற குறியீட்டைப் பயன்படுத்துங்கள் அல்லது தொகுப்புப் பக்கத்தில் உள்ள பொத்தான்களில் (படத்தில் சிவப்பு நிற அம்புக் குறியிட்டுக் காட்டப்பட்டுள்ள) சரியான பொத்தானைச் சொடுக்கவும். __________________________________________________________________________________________________________________

  • தங்களைப் பற்றிய தகவல்களை தங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், தங்களைப் பற்றி அறிந்து கொள்ள இயலும். மேலும், விக்கிப்பீடியா தங்களுக்கு முதன் முதலில் எப்படி அறிமுகம் ஆனது என்று தெரிவித்தால், தமிழ் விக்கிப்பீடியாவிற்கு மேலும் பல புதுப்பயனர்களைக் கொண்டு வர உதவியாக இருக்கும். மேலும் கட்டுரைப் பக்கங்களில் தங்கள் தொடர்ச்சியான பங்களிப்பை எதிர்பார்க்கிறோம். நன்றி.

__________________________________________________________________________________________________________________

  • புதுக்கட்டுரை ஒன்றைத் தொடங்க, கட்டுரைக்கான தலைப்பைக் கீழே உள்ள பெட்டியில் இட்டு அதற்குக் கீழே உள்ள பொத்தானைச் சொடுக்குங்கள்.

--தேனி.எம்.சுப்பிரமணி./உரையாடுக. 17:19, 21 ஏப்ரல் 2011 (UTC)

பாராட்டுகள்

[தொகு]

பல நல்ல கட்டுரைகளை எழுதி வருகிறீர்கள் கிருஷ்ணபிரசாத். எனது பாராட்டுகளும் வாழ்த்துகளும்.--சோடாபாட்டில்உரையாடுக 13:50, 3 சூலை 2011 (UTC)[பதிலளி]

நல்வரவு

[தொகு]

கிருஷ்ணபிரசாத், தங்கள் பங்களிப்புகள் செம்மை பெற வாழ்த்துகள்! நேரம் கிடைக்கும் போதெல்லாம் தமிழ்விக்கியில் பங்களிக்க வாருங்கள்! நன்றி! --மரு. பெ. கார்த்திகேயன் (karthi.dr) 06:03, 9 சூலை 2011 (UTC)[பதிலளி]

மேற்கோள் இணைப்பும் பயனர் பக்கமும்

[தொகு]

கிருஷ்ணபிரசாத், மேற்‌கோள் இணைப்பது மற்றும் பயனர் பக்கம் குறித்து எனது பேச்சுப்பக்கத்தில் கேட்டிருந்தீர்கள் பொதுவாக கேள்வி கேட்ட இடத்திலேயே (எனது பேச்சுப்பக்கத்திலேயே) பதிலளிப்பது தான் வழக்கம். தாங்கள் புதிய பயனர் என்பதால் உங்களின் பேச்சுப்பக்கத்தில் பதிலளிக்கிறேன்.

மேற்கோள்களைச் சேர்ப்பது மிக எளிது. கருவிப்பட்டையில் இடமிருந்து வலமாக ஐந்தாவது பொத்தானாக உள்ள இணைப்பைச் சொடுக்குங்கள். நீங்கள் காட்ட விரும்பும் மேற்கோள் வலைத்தளத்தின் முகவரியை மேலேயும் காட்ட வேண்‌டிய தொடரையும் கீழேயும் தந்தால் இணைப்பு உருவாகிவிடும். இந்த இணைப்பை <ref> </ref> இரண்டுக்கும் நடுவில் இட்டால் அது மேற்கோள் இணைப்பாகி விடும்.

கட்டுரையின் கடைசியில் மறக்காமல்,

==மேற்கோள்கள்==

{{Reflist}} என்பதை மட்டும் சேர்த்து விடுங்கள். மணற்தொட்டியில் பயிற்சி செய்து பாருங்கள்.

உங்கள் பயனர் பக்கம் விக்கிப்பீடியா விதிகட்குட்பட்டு எப்படி வேண்டுமாயினும் இருக்கலாம். உங்கள் விருப்பமே! நன்றி! --மரு. பெ. கார்த்திகேயன் (karthi.dr) 03:50, 11 சூலை 2011 (UTC)[பதிலளி]

விக்கிப்பீடியாவில் படங்கள்

[தொகு]

வணக்கம் கிருஷ்ணபிரசாத், இணையத்தில் கிடைக்கும் அனைத்து படங்களையும் விக்கிப்பீடியாவில் பதிவேற்ற இயலாது. விக்கிப்பீடியா அமெரிக்காவில் பதிவு செய்யப்பட்ட அறக்கட்டளையாதலால் சற்றே கடுமையான அமெரிக்க பதிப்புரிமை விதிகளைக் கடைபிடிக்கிறது. இதன்படி பிற தளங்களில் வெளியாகி இணையத் தேடல்களில் கிடைக்கும் படங்களை பதிப்புரிமை பெற்றவை எனவே கருத வேண்டும். அவற்றை இங்கு பதிவேற்ற இயலாது. பின் வரும் வகைப் படங்களை மட்டும் பதிவேற்றலாம்.

  • 1) நாமே எடுத்த படம்
  • 2) இந்தியாவில் 1951 க்கு முன்பு வெளியான படம் (பதிப்புரிமை காலாவதி ஆகியிருக்கும்)
  • 3) புகைப்படம் எடுத்தவர் எழுத்துப் பூர்வமாக அனுமதி வழங்கியுள்ள படம்.
  • 4) உயிருடன் இல்லாதவர்களின் படங்கள்.
  • 5) புத்தக அட்டைகள், திரைப்பட சுவரொட்டிகள்

இதில் 4 மற்றும் 5, நியாயப் பயன்பாட்டுக் காரணம் என்ற பயன்பாட்டு அனுமதியின் கீழ் இங்கு ஏற்றலாம். 1, 2, 3 சரியான உரிமத்தை சேர்த்து ஏற்றலாம். இது குறித்து ஏதேனும் ஐயங்கள் இருப்பின் என்னைக் கேளுங்கள். என்னால் இயன்றவரை உதவுகிறேன்.--சோடாபாட்டில்உரையாடுக 05:07, 31 சூலை 2011 (UTC)[பதிலளி]

பிற தளங்களில் வெளியான படங்களை, அந்த தளத்தின் உரிமையளரிடம் படங்களை பகிர்ந்து கொள்வதர்கான அனுமதி பெற்ற பின் அந்த படங்களை பதிவேற்றலாமா?
பதியலாம். ஆனால் இதில் கொஞ்சம் கவனமாக இருக்க வேண்டும். ஏனெனில் இந்தியத் தளங்கள் வலைப்பதிவுகளில் பிறர் படங்களை எடுத்துப் போட்டிருக்கக் கூடும். எனவே படத்தின் அசல் உரிமையாளரிடமிருந்து தான் அனுமதி பெறுகிறோமா என்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும்.
மேலும் விக்கிப்பீடியாவில் படத்தை பதிவேற்றிய பின் அதன் பதிப்புரிமை பற்றி எவ்வாறு எழுதுவது?
பல வகைப்பட்ட உரிமங்கள் உள்ளன. நீங்கள் எடுத்த படம் எனில் படம் பதிவேற்றிய பின் அப்பக்கத்தைத் தொகுத்து {{PD-self}} என்ற வார்ப்புருவை இணையுங்கள், அல்லது பிறரிடமிருந்து பெறப்படும் படிமங்களுக்கு {{Cc-by-sa-3.0}} என்ற வார்ப்புருவை இணையுங்கள். நியாயப்பயன்பாட்டுக்கு இது போன்ற வேறு சில வார்ப்புருக்கள் உள்ளன. எ.கா - பட சுவரொட்டிகளுக்கு {{Non-free poster}} போன்றவை. ஐயமிருப்பின் பதிவேற்றி விட்டு என் பேச்சுப் பக்கத்தில் குறிப்பிடுங்கள், நான் மாற்றங்கள் தேவைப்படின் செய்து விடுகிறேன்.--சோடாபாட்டில்உரையாடுக 07:20, 31 சூலை 2011 (UTC)[பதிலளி]

ஒரு படம் விக்கிமீடியா காமன்சில் பதிவேற்றப்பட்டிருந்தால் அனைத்து விக்கிப்பீடியா மற்றும் பிற விக்கி திட்டங்களிலும் அதே பெயரைப் பயன்படுத்தினாலே தோன்றி விடும் - ரஜினி படம் காமன்சில் உள்ளதால் இரு விக்கிகளில் வந்து விடுகிறது (commons - common for all wiki projects). ஆனால் பல படங்கள் பல்வேறு காரணங்களால் காம்ன்சில் இல்லாமல் ஆங்கில விக்கியில் இருக்கும் (பதிவேற்றியவருக்க காமன்ஸ் திட்டம் பற்றி தெரியாதிருத்தல், அல்லது காமன்ஸ் திட்டம் தொடங்கப்படுமுன்னர் பதிவேற்றப்பட்ட படங்கள், நியாயப் பயன்பாட்டுப் படங்கள் போன்றவை). அவற்றை தரவிரக்கி இங்கு பதிவேற்றலாம். அவ்வாறு செய்யும் போது, ஆங்கில விக்கி மூலத்துக்கு இணைப்பு கொடுத்து, ஆங்கில விக்கியிலிருந்து எடுத்தது என்று குறிப்பிட்டு விடுங்கள். (அப்ப்[அடி செய்யும் போது ஆங்கில விக்கியின் படப்பக்கத்திலுள்ள உள்ளடக்கத்தை அப்படியே படியெடுத்து இங்கு ஒட்டி விட்டாலும், பதிப்புரிமை குறிப்பது எளிதாகிவிடும்) --சோடாபாட்டில்உரையாடுக 13:11, 31 சூலை 2011 (UTC)[பதிலளி]

இந்திய விக்கி மாநாடு -- மும்பை -- நவம்பர் 18-20 2011


வணக்கம் Krishnaprasaths,

முதல் இந்திய விக்கி மாநாடு மும்பையில் 2011 நவம்பர் 18 முதல் 20 வரை நடைபெறவுள்ளது.

மாநாட்டு உரலிகள்: மாநாட்டு இணையபக்கம், ஃபேசுபுக் நிகழ்ச்சி பக்கம் , உதவித் தொகை விண்ணப்பம்(கடைசி : ஆகஸ்ட் 15) மற்றும் ஆய்வுக் கட்டுரை சமர்பிக்க (கடைசி : ஆகஸ்ட் 30).

மாநாட்டுக்கான 100 நாள் பரப்புரை தொடங்கவுள்ளது.

நீங்கள் தமிழ் விக்கி சமூகத்தின் அங்கத்தினராக இருப்பதால், மாநாட்டிற்கு வருகை தந்து உங்களின் விக்கி அனுபவத்தை பகிர்ந்துகொள்ள அழைக்கிறோம். உங்களின் பங்களிப்புகளுக்கு நன்றி.

உங்களை 18-20 நவம்பர் 2011 இல், மும்பையில் ஆவலுடன் எதிர்பார்க்கிறோம்.

Invite to WikiConference India 2011

[தொகு]

Hi Krishnaprasaths,

The First WikiConference India is being organized in Mumbai and will take place on 18-20 November 2011.
You can see our Official website, the Facebook event and our Scholarship form.

But the activities start now with the 100 day long WikiOutreach.

Call for participation is now open, please submit your entries here. (last date for submission is 30 August 2011)

As you are part of Wikimedia India community we invite you to be there for conference and share your experience. Thank you for your contributions.

We look forward to see you at Mumbai on 18-20 November 2011

பதக்கம்

[தொகு]
சிறப்புப் பதக்கம்
நவீன தொழில்நுட்பம் தொடர்பாக தொடர்ச்சியாக நல்ல கட்டுரைகளை ஆக்கி வரும் தங்களைப் பாராட்டி இப்பதக்கத்தை வழங்குகிறேன். --மரு. பெ. கார்த்திகேயன் (karthi.dr) 12:41, 14 ஆகத்து 2011 (UTC)[பதிலளி]
கார்த்தியின் பாராட்டுகளை வழிமொழிகிறேன். மேலும் தொடர்ந்து பங்களிக்க என் வாழ்த்துகள்--சோடாபாட்டில்உரையாடுக 20:13, 16 ஆகத்து 2011 (UTC)[பதிலளி]

பக்கங்களை நகர்த்துதல்

[தொகு]

பக்கங்களை வேறு தலைப்புகளுக்கு நகர்த்த, வெட்டி ஒட்டி புதுக்கட்டுரை உருவாக்கத் தேவையில்லை. மேல் மெனுவில் “நகர்த்துக” என்றொரு தெரிவு உள்ளது. அதன் மூலம் எளிதாக நகர்த்தலாம். (கட்டுரை வரலாற்றைப் பாதுகாக்க இது தேவையான ஒன்று)--சோடாபாட்டில்உரையாடுக 12:16, 30 ஆகத்து 2011 (UTC)[பதிலளி]

தங்களது தகவலுக்கு நன்றி. --கிருஷ்ணபிரசாத் 12:21, 30 ஆகத்து 2011 (UTC)[பதிலளி]

பதக்கம்

[தொகு]
அசத்தும் புதிய பயனர் பதக்கம்
கடந்த சில மாதங்களாக நீங்கள் ஆற்றி வரும் அருமையான பங்களிப்புகளைப் பாராட்டி இப்பதக்கத்தை (கொஞ்சம் லேட்டாக :-)) வழங்குகிறேன். :-) சோடாபாட்டில்உரையாடுக 11:25, 10 செப்டெம்பர் 2011 (UTC)[பதிலளி]

விக்கியன்பு மூலம் வழங்கப்பட்டது

சன் குழுமம்

[தொகு]

சன் குழும வார்ப்புருவை - வார்ப்புரு:சன் குழுமம் சரி செய்திருக்கிறேன். பயன்படுத்திக்கொள்ளுங்கள்.--சோடாபாட்டில்உரையாடுக 04:33, 24 செப்டெம்பர் 2011 (UTC)[பதிலளி]

நன்றி

[தொகு]

பாராட்டுதலுக்கு நன்றிகள். தொழில்நுட்பம் பற்றி எழுதிவரும் உங்கள் பங்களிப்புகள் மேலும் வளரட்டும்.--தென்காசி சுப்பிரமணியன் 10:56, 24 செப்டெம்பர் 2011 (UTC)[பதிலளி]

முதற்பக்க அறிமுகம்

[தொகு]

கிருஷ்ணபிரசாத்,

உங்களைப் பற்றிய சிறு அறிமுகக் குறிப்பை முதற்பக்கத்தில் காட்சிப்படுத்த விரும்புகிறேன். பின்வரும் இணைப்பில் உங்களைப் பற்றிய குறிப்பினை இணைக்க வேண்டுகிறேன்.--சோடாபாட்டில்உரையாடுக 08:46, 25 செப்டெம்பர் 2011 (UTC)[பதிலளி]

விக்கிப்பீடியா:பங்களிப்பாளர் அறிமுகம்/கிருஷ்ணபிரசாத்

நன்றி கிருஷ்ணபிரசாத், அடுத்த ஞாயிறன்று முதற்பக்கத்தில் காட்சிப்படுத்தப்படும்.--சோடாபாட்டில்உரையாடுக 16:57, 25 செப்டெம்பர் 2011 (UTC)[பதிலளி]
முதற்பக்கத்தில் சேர்த்துள்ளேன். அடுத்த இரு வாரங்களுக்கு முதல் பக்கத்தில் இருக்கும்.--சோடாபாட்டில்உரையாடுக 11:40, 2 அக்டோபர் 2011 (UTC)[பதிலளி]

வாழ்த்துக்கள்

[தொகு]

உங்களைப் பற்றிய முதற் பக்க அறிமுகம் கண்டு மகிழ்வடைகிறேன் கிருஷ்ணபிரசாத், விக்கியில் உங்கள் பணி மேலும் சிறக்கட்டும்--P.M.Puniyameen 13:20, 2 அக்டோபர் 2011 (UTC)[பதிலளி]

உங்கள் முதற்பக்க அறிமுகம் கண்டு மகிழ்ச்சி. மேலும் உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்.--தென்காசி சுப்பிரமணியன் 09:06, 3 அக்டோபர் 2011 (UTC)[பதிலளி]
கிருஷ்ணபிரசாத், முதற்பக்கத்தில் உங்கள் அறிமுகம் கண்டு மகிழ்ச்சியும் பாராட்டுகளும். தொடர்ந்து பங்களியுங்கள்.--Kanags \உரையாடுக 09:19, 3 அக்டோபர் 2011 (UTC)[பதிலளி]

P.M.Puniyameen, தென்காசி சுப்பிரமணியன், Kanags ஆகியோர்க்கு நன்றிகள். --கிருஷ்ணபிரசாத் 15:27, 4 அக்டோபர் 2011 (UTC)[பதிலளி]

தொடுப்பிணைப்பி

[தொகு]

தொடுப்பிணைப்பியில் ஒரு வழு உள்ளது. அதைத் தெரிவு செய்திருந்தால் internet explorer வழியாக விக்கிப்பீடியாவை பயன்படுத்த முடியாது. விக்கி பக்கத்தைத் திறந்த உடன் கிராஷ் ஆகி விடும் :-)--சோடாபாட்டில்உரையாடுக 13:45, 5 அக்டோபர் 2011 (UTC)[பதிலளி]

நான் ஃபயர் ஃபாக்சு உலாவியில் மட்டுமே விக்கிப்பீடியாவை பயன்படுத்துகிறேன். --கிருஷ்ணபிரசாத் 13:50, 5 அக்டோபர் 2011 (UTC)[பதிலளி]

:படிமம்:Indian official poster.jpg இன் காப்புரிமை என்ன?

[தொகு]
Image Copyright problem
Image Copyright problem

படிமம்:Indian official poster.jpg படிமத்தை பதிவேற்றியமைக்கு நன்றி. எனினும், இப்படிமத்துக்கான காப்புரிமை/அளிப்புரிமைத் தகவல்கள் வழங்கப்படவில்லை. விக்கிப்பீடியா காப்புரிமைத் தொடர்பில் மிகவும் கவனத்தில் உள்ளது. காப்புரிமைத் தகவலும் படிமம் எங்கிருந்து பெறப்பட்டது என்றத் தகவலும் இணைக்கப்படாவிட்டால் படிமம் வெகு சீக்கிரத்தில் நீக்கப்படும். உங்களுக்கு இந்தத் தகவல்கள் தெரிந்திருப்பின் காப்புரிமை வார்ப்புரு ஒன்றை படிமப் பக்கத்தில் இணைத்து மூலத்தையும் குறிப்பிடவும்.

இது தொடர்பான கேள்விகள் இருப்பின் பதிப்புரிமை கேள்விகள் பக்கத்தில் கேட்கவும். AswnBot 02:02, 27 நவம்பர் 2011 (UTC)[பதிலளி]


இதன் பதிப்புரிமையை ஏற்கனவே அனுமதி தலைப்பில் வழங்கியுள்ளேன். --கிருஷ்ணபிரசாத்/உரையாடுக 02:31, 27 நவம்பர் 2011 (UTC)[பதிலளி]

:படிமம்:Indian official poster.jpg இன் காப்புரிமை என்ன?

[தொகு]
Image Copyright problem
Image Copyright problem

படிமம்:Indian official poster.jpg படிமத்தை பதிவேற்றியமைக்கு நன்றி. எனினும், இப்படிமத்துக்கான காப்புரிமை/அளிப்புரிமைத் தகவல்கள் வழங்கப்படவில்லை. விக்கிப்பீடியா காப்புரிமைத் தொடர்பில் மிகவும் கவனத்தில் உள்ளது. காப்புரிமைத் தகவலும் படிமம் எங்கிருந்து பெறப்பட்டது என்றத் தகவலும் இணைக்கப்படாவிட்டால் படிமம் வெகு சீக்கிரத்தில் நீக்கப்படும். உங்களுக்கு இந்தத் தகவல்கள் தெரிந்திருப்பின் காப்புரிமை வார்ப்புரு ஒன்றை படிமப் பக்கத்தில் இணைத்து மூலத்தையும் குறிப்பிடவும்.

இது தொடர்பான கேள்விகள் இருப்பின் பதிப்புரிமை கேள்விகள் பக்கத்தில் கேட்கவும். AswnBot 05:31, 2 திசம்பர் 2011 (UTC)[பதிலளி]

நன்றி

[தொகு]

உங்கள் வாழ்த்து கண்டு மகிழ்ந்தேன். உங்களைப் போன்ற பலரும் தமிழ் விக்கிப்பீடியாவின் இணைந்து பங்களிப்பதே, இன்னும் கூடிய உற்சாகத்துடன் அனைவரையும் பங்களிக்க வைக்கிறது. நன்றி.--இரவி (பேச்சு) 07:17, 14 மார்ச் 2012 (UTC)