பயனர் பேச்சு:மாயவரத்தான்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

வாருங்கள்!

வாருங்கள், மாயவரத்தான், விக்கிப்பீடியாவிற்கு உங்களை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறோம்!

பூங்கோதை விக்கிப்பீடியாவில் பங்களிப்பதைப் பற்றி பேசுகிறார்

உங்கள் பங்களிப்புக்கு நன்றி தொகுப்புக்கு. விக்கிப்பீடியா என்பது உங்களைப் போன்ற பலரும் இணைந்து, கூட்டு முயற்சியாக எழுதும் கலைக்களஞ்சியம் ஆகும். விக்கிப்பீடியாவைப் பற்றி மேலும் அறிய புதுப் பயனர் பக்கத்தைப் பாருங்கள். தமிழ் விக்கிப்பீடியாவைப் பற்றிய உங்கள் கருத்துக்களை தமிழ் விக்கிப்பீடியாவில் கலந்துரையாடலுக்கான ஆலமரத்தடியில் தெரிவியுங்கள். ஏதேனும் உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்திலோ அதிக விக்கிப்பீடியர்கள் உலாவும் முகநூல் (Facebook) பக்கத்திலோ கேளுங்கள். நீங்கள் கட்டுரை எழுதி, பயிற்சி பெற விரும்பினால், அருள்கூர்ந்து உங்களுக்கான சோதனை இடத்தைப் (மணல்தொட்டி) பயன்படுத்துங்கள்.


தங்களைப் பற்றிய தகவலை தங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், தங்களைப் பற்றி அறிந்து மகிழ்வோம். விக்கிப்பீடியா தங்களுக்கு முதன்முதலில் எப்படி அறிமுகமானது என்று தெரிவித்தால், தமிழ் விக்கிப்பீடியாவிற்கு மேலும் பல புதுப்பயனர்களைக் கொண்டு வர உதவியாக இருக்கும்!


நீங்கள் கட்டுரைப் பக்கங்களில் உள்ள பிழைகளைத் திருத்தலாம். கூடுதல் தகவலைச் சேர்க்கலாம். புதுக்கட்டுரை ஒன்றையும் கூடத் தொடங்கலாம். இப்பங்களிப்புகள் எவருடைய ஒப்புதலுக்கும் காத்திருக்கத் தேவையின்றி உடனுக்குடன் உலகின் பார்வைக்கு வரும்.

பின்வரும் இணைப்புக்கள் உங்களுக்கு உதவலாம்:

--தேனி. மு. சுப்பிரமணி./உரையாடுக. 01:15, 27 பெப்ரவரி 2013 (UTC) பங்களிக்கத் தொடங்கியிருப்பதற்கு நன்றி

வணக்கம், மாயவரத்தான்!

அறிவொளி ஏற்றுவதற்கு நன்றி!

தமிழ் விக்கிப்பீடியாவில் பங்களிக்கத் தொடங்கியிருப்பதற்கு என் நன்றியையும் மகிழ்ச்சியையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

இதன் மூலம் மாணவர்கள், ஆசிரியர்கள், பொறியாளர்கள், மருத்துவர்கள் என்று பலரும் உள்ள தமிழ் விக்கிப்பீடியர் சமூகத்தில் ஒருவராக இணைந்துள்ளீர்கள். நீங்கள் தொடர்ந்து தமிழ் விக்கிப்பீடியாவில் பங்களிப்பதன் மூலம் தமிழ் விக்கிப்பீடியாவைப் பயன்படுத்தும் பள்ளிச் சிறுவர்கள் உள்ளிட்ட பலருக்கும் உதவியாக இருப்பீர்கள். பின்வரும் வழிகளில் பங்களிப்புகளைத் தொடரலாம்:

ஏதேனும் ஐயம் என்றால் என் பேச்சுப் பக்கத்தில் கேளுங்கள். அல்லது, tamil.wikipedia @ gmail.com என்ற முகவரிக்கு மின்மடல் அனுப்புங்கள். உங்களுக்கு உடனே உதவக் காத்திருக்கிறோம். நன்றி.

-தமிழ்க்குரிசில் (பேச்சு) 10:41, 18 மார்ச் 2013 (UTC)

பதக்கம்[தொகு]

Exceptional newcomer.jpg அசத்தும் புதிய பயனர் பதக்கம்
தொடர்ந்து கட்டுரைகளைத் திருத்தி தகவல்களைச் சேர்த்து பங்களித்துள்ளீர்கள். மகிழ்ச்சியுடன் வாழ்த்துக்களும் நண்பரே!! தமிழ்க்குரிசில் (பேச்சு) 14:32, 19 மார்ச் 2013 (UTC)

விக்கியன்பு மூலம் வழங்கப்பட்டது

வாழ்த்துகள்[தொகு]

நண்பருக்கு, விக்கிப்பீடியாவில் தங்கள் பங்களிப்பு மகிழ்ச்சியடையச் செய்கிறது. தொடர்ந்து தங்கள் பங்களிப்பு இருக்க வேண்டும் என்று விரும்புகிறேன்.என் இனிய நல்வாழ்த்துகள். --தேனி. மு. சுப்பிரமணி./உரையாடுக. 16:06, 19 மார்ச் 2013 (UTC)

நன்றி. எல்லாம் உங்களுடைய ஊக்கம் தான் காரணம்! :) --பயனர்:மாயவரத்தான்

மாயவரத்தான், உங்கள் வரவு நல்வரவாகுக ! மாயவரம் தொடர்புடைய கட்டுரைகளில் நீங்கள் செய்துவரும் ஆக்கபூர்வமான தொகுப்புக்கள் தமிழ் விக்கியின் தரத்தை உயர்த்துவனவாக உள்ளன. நன்றியும் பாராட்டுக்களும். !! உங்களைப் பற்றி உங்கள் பயனர் பக்கத்தில் அறியக் கொடுத்தால் நல்லது. இந்தப் பக்கத்தின் மேலே காண்பிக்கும் பயனர் பக்கம் சென்றும் உங்களைக் குறித்த தகவல்களை இடலாம். மாயவரத்தான் என விக்கி பக்கம் எழுதவியலாது. மேலும் பேச்சுப் பக்கங்களைக் குறித்து அறிய இந்தப் பக்கம் உதவும். --மணியன் (பேச்சு) 03:58, 20 மார்ச் 2013 (UTC)
👍 விருப்பம், வாழ்த்துக்கள் மாயவரத்தான். -தமிழ்க்குரிசில் (பேச்சு) 04:03, 20 மார்ச் 2013 (UTC)
நன்றி. மாயவரத்தான் என்று விக்கி பக்கம் எழுத இயலாதா? உண்மைப் பெயரில் மட்டும் தான் எழுதலாமா? தமிழ்க்குரிசில் என்று விக்கி பக்கம் பார்த்தேனே?! :) --பயனர்:மாயவரத்தான்
மாயவரத்தான், விக்கியில் மாயவரத்தான் என்பது தகவற்களஞ்சியக் கட்டுரை. எவ்வித முன்னொட்டும் இல்லாது எழுதப்பட்டால் அது முதன்மைப் பெயர்வெளி எனப்படும். பயனர்: மாயவரத்தான் என்பது பயனர்வெளி எனப்படும் பெயர்வெளியில் (Namespace) பயனர்கள் தங்களைப் பற்றி சுயதம்பட்டம் அடித்துக் கொள்ளும் பக்கம். மாயவரத்தான் என்பவர் நன்கு அறியப்பட்டு, அவரைக் குறித்த தகவல்கள் பொதுமக்களுக்கு தேவையெனில் (அறியப்பட்டால் அவரது உண்மைப் பெயருடன்) வாழ்க்கை வரலாற்றை முதன்மை பெயர்வெளியில் எழுதலாம் :) தமிழ்க்குரிசில் பயனர்வெளியில் உள்ள கட்டுரையே. --மணியன் (பேச்சு) 14:05, 21 மார்ச் 2013 (UTC)
நன்றி. என்ன காரணத்தினால் மாயவரத்தான் என்ற விக்கி பக்கம் எழுதவியலாது என்ற முன்முடிவெடுத்தீர்கள் என்று அறியலாமா? (1) நான் மாயவரத்தான் என்ற பெயரில் விக்கி பக்கம் எழுதவிருக்கிறேன் என்று சொன்னேனா? எனக்கு பயனர் பக்கத்திலேயே என்னைப் பற்றிய குறிப்பை எழுத விருப்பமில்லை. (2) மாயவரத்தான் என்ற பெயர் நன்கு அறியப்படாதது என்று நீங்களே முன் முடிவெடுத்து விட்டீர்களா? (3) ஓரிரு புத்தகங்கள் எழுதிய ‘எழுத்தாளர்கள்’ என்ற பெயரில் சிலரின் விக்கி பக்கங்களைக் காணுகிறேன். அவர்களெல்லாம் நன்கு அறியப்பட்டு, அவர்களைப் பற்றிய குறிப்புகள் பொதுமக்களுக்கு தேவைப்படும் என்று எப்படிக் கருதுகிறீர்கள்? (4) முன்கூட்டிய முடிவெடுத்து அடுத்தவருக்கு அறிவுரை செய்யும் பழக்கத்தை விட்டொழியுங்கள். புரிந்துணர்வுக்கு நன்றி. --பயனர்:மாயவரத்தான்
என்னை பிரச்சனையில் மாட்டிவிடாதீர்கள் மாயவரத்தான்! என் பயனர் பக்கத்தில் என்னைப் பற்றி பெருமையாக எழுதி இருப்பேன். அதை கண்டுக்காதீங்க! (என்னைப் பத்தி எழுதினால் அந்த பக்கம் நீக்கப்படும்.)

மாயவரத்தான் என்ற பெயரில் ஒருவர், எழுத்தாளரோ, கவிஞரோ, குறிப்பிடத்தக்க கட்டுரைகளை, கவிதைகளை, நூல்களை எழுதியிருந்தாலோ, விருதுகள் வாங்கியிருந்தாலோ, மாவட்ட அளவில் புகழ் பெற்றிருந்தாலோ அவரைப் பற்றிய கட்டுரையை எழுதலாம். அவர் தொடர்பான தகவல்களுக்கு செய்தித்தாள், இணையதளங்களில் இருந்து ஆதாரம் சேர்க்கலாம். ஒருவேளை இது நீங்களாக இருந்தால், இக்கட்டுரையை உங்களைத் தவிர்த்த வேறு யாராவது தான் எழுத முடியும். சில தமிழ் எழுத்தாளர்கள் மாவட்ட அளவில் புகழ்பெற்றிருப்பார்கள். அவர்களைப் பற்றி இனையத்தில் கிடைக்காது. எனவே சிலர் அவர்களைப் பற்றி எழுதியிருப்பர். குறிப்பிடத் தக்க அளவில் பிரபலம் அடையாதவர் என்று ஒருவரை நினைத்தால் அவரைப் பற்றிய கட்டுரையை நீக்குமாறு கேட்கலாம். இங்கே பல பிழைகள் இருக்கலாம். கோபப்படாமல் திருத்துங்கள், பதில் அளியுங்கள். (நீங்கள் புதியவர் என்பதால் உங்களுக்கு தெரிந்திருக்காது என்று நினைத்து மணியன் ஐயா தன் கருத்தை கூறியிருந்தார். தவறாக எடுத்துக் கொள்ள வேண்டாம்.) :) மேற்கொண்டு உதவி தேவை என்றால் கேளுங்கள். நன்றி!-தமிழ்க்குரிசில் (பேச்சு) 15:19, 21 மார்ச் 2013 (UTC)

நன்றி பயனர்:தமிழ்க்குரிசில் ஐயா. ஒரு உதாரணத்துக்கு தான் உங்கள் பக்கத்தை எடுத்தாண்டேன். நான் ஏற்கனவே சொல்லியிருப்பது தான்.. என்னைப் பற்றிய பயனர் பக்கத்தில் கூட எழுத விரும்பாமல் பங்களிப்பு செய்து கொண்டிருக்கிறேன். இந்நிலையில் எடுத்த எடுப்பில் ’எழுதவியலாது’ என்று முன்முடிவெடுத்து அறிவுரை கூறியிருப்பது வருத்தமுறச் செய்தது! புரிந்துணர்வுக்கு நன்றி. புதியவர்கள் இணையும் போது பழைய பயனர்கள் அவர்களை ஊக்குவிக்கவும் உங்களைப் போல! நன்றி பயனர்:மாயவரத்தான்
மாயவரத்தான், எனது கருத்துக்கள் உங்களுக்கு ஒரு புதுப்பயனர் தவறாக தன்னைப் பற்றிய செய்திகளை முதன்மைப் பக்கத்தில் எழுதலாகாது என்பதற்காகவே. ஒரு வழிகாட்டலாகவே பயனர்வெளியில் எழுதவேண்டும் என்பதைக் குறிப்பிட்டேன். ஒரு பயனர் தன்னைப் பற்றிய விவரங்களை மாயவரத்தான் என்ற பக்கத்தில் இடலாகாது என்பதே நான் கூற வந்தது; இதில் குழப்பம் நேர்ந்திருந்தால் மன்னிக்கவும். அதற்கு முன்னாலிருக்கும் வரிகளுடன் படித்தால் context விளங்கும். உங்களை வரவேற்குமுகமாக அமைந்த செய்தி எதிர்மறையாக விளைந்ததில் எனக்கும் வருத்தமே. புரிந்துணர்விற்கு நன்றி.--மணியன் (பேச்சு) 03:09, 22 மார்ச் 2013 (UTC)
நன்றி ஐயா.. நானும் கொஞ்சம் அவசரப்பட்டு பதில் அளித்து விட்டேனோ?! சாப்பாட்டில் காரத்தைக் குறைக்கணும் போல! :)) மன்னிக்கவும். இத்தோடு இதை விடுவோம்! நன்றி - பயனர்:மாயவரத்தான்

வேண்டுகோள்[தொகு]

வணக்கம். நீங்கள் விஸ்வரூபம் பேச்சுப்பக்கத்தில் கூறியிருப்பதை வைத்து நீங்கள் தரக்கண்கானிப்பில் ஆர்வம் காட்டுவதாக தெரிகிறது. மேர்கோள் சேர்ப்பதையும், பகுப்புகலை இணைப்பதையும் முறையே விக்கிப்பீடியா:புரூவ் இட், விக்கிப்பீடியா:விரைவுப் பகுப்பி போன்ற கருவிகள் எளிதாக்கும். முயன்று பாருங்கள்.

மேலும் உங்களது துறை என்ன என்பதை பற்றியாவது பயனர் பக்கத்தில் கொடுக்கலாமே? ஏதாவது உங்கள் துறைசார் ஐயங்கலை உங்களிடம் கேட்கலாம்.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 17:03, 23 மார்ச் 2013 (UTC)

நன்றி. நான் கணினி அறிவியல் முடித்து BPO நடத்திக் கொண்டிருக்கிறேன். நானொரு “விகடன்” தயாரிப்பு! :) ‘மாயவரத்தான்’ என்ற பெயரில் கடந்த 1999-லிருந்து இணையத்தில் உலவிக் கொண்டிருக்கிறேன்.
பயனர் பக்கத்தை உருவாக்கியுள்ளேன். நன்றி! :) -- பயனர்:மாயவரத்தான் (பேச்சு) 08:53, 24 மார்ச் 2013 (IST)

விகடன் தயாரிப்பு![தொகு]

விகடன் தயாரிப்பு என்றால் என்ன? நீங்கள் விகடன் குழுமங்களில் பத்திரிக்கையாளராக உள்ளீர்களா?--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 04:03, 24 மார்ச் 2013 (UTC)

உங்கள் பயனர் பக்கத்தை பார்த்து புரிந்து கொண்டேன் நன்றி--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 04:05, 24 மார்ச் 2013 (UTC)

விகடன் மாணவப் பத்திரிகையாளராக 1991-ல் இணைந்து அதன் பிறகு சில ஆண்டுகள் சிறப்பு செய்தியாளராகவும் செயல்பட்டேன். பல ஆண்டுகளுக்கு விகடன் இதழ்களில் தொடர்ந்து எழுதி வந்தேன். நன்றி. --பயனர்:மாயவரத்தான் (பேச்சு) 10:25, 24 மார்ச் 2013 (IST)

தாய்லாந்தில் சில உதவிகள்[தொகு]

சந்திரபானு கட்டிய பௌத்த மதத் தூண், சையா மாவட்டம், சூரத்தாணி மாகாணம், தாய்லாந்து

உங்கள் பயனர் பக்கம் பார்த்ததில் நீங்கள் தாய்லாந்துக்கு அதிகம் போய் வருவதாக தெரிகிறது. சந்திரபானு மற்றும் சாவகன் மைந்தன் கட்டுரைகளை பார்க்கவும்.

மேலும் முதலாம் சடையவர்மன் சுந்தரபாண்டியன் கல்வெட்டு ஒன்றை பற்றி அப்பாத்துரையார் தன்னுடைய நூலில் குறிப்பிட்டிருக்கிறார். அது,

"சாய நாடு, ஜவா நாடு என்ற நாட்டுப் பெயர்கள், அமைந்த சாவக நாட்டுக் கல்வெட்டுக்கள் பல உண்டு. ஜய நகரம், சுந்தர பாண்டியன் என்ற பெயர்களை உட்கொண்ட கல்வெட்டும் ஒன்று உளது. ‘ஜய நகர சுந்தர பாண்டிய தேவாதீசுவர நாம ராஜாபிஷேக’ என்பது அதன் வாசகம் ஆகும். ‘பாண்டிய’ என்ற பெயருக்கேற்ப இந்தக் கல்வெட்டில் மீன் இலச்சினையும் காணப்படுகிறது. "

மேலுள்ள கல்வெட்டு சாவகம் அல்லது தாய்லாந்தில் இருப்பதற்கு வாய்ப்புகள் அதிகம். ஏனெனில் இக்கல்வெட்டு குறிக்கும் வாசகம் சாவகன் மைந்தன் படையை சுந்தரபாண்டியன் வெற்றி கொண்டதையே குறிப்பதாகலாம். இக்கல்வெட்டு மட்டும் மீண்டும் கண்டறிய படுமெனில் தாய்லாந்து முதலாம் சடையவர்மன் சுந்தரபாண்டியன் கீழிருந்ததாக நிறுவப்படும். சந்திரபானுவின் புத்த ஸ்தூபியில் ஏதாவது கிட்ட வாய்ப்புண்டு (படம்). இது பற்றிய செய்தியை தாய்லாந்தில் உள்ள தமிழ் வரலாற்றாய்வளர்களின்/ஆர்வலர்களின் காதில் போட்டு வையுங்கள்.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 04:37, 24 மார்ச் 2013 (UTC)

படித்தேன். கண்டிப்பாக முயல்கிறேன். --பயனர்:மாயவரத்தான் (பேச்சு) 10:31, 24 மார்ச் 2013 (IST)

வணக்கம். மாயவரத்தாரே. நான் ஏற்கனவே கூரிய கல்வெட்டுச் செய்தி சுந்தர பாண்டியன் என பெயர் பெற்ற சாவக மன்னனான செயநேகரன் என்பவனுடையது. அதனால் இக்கல்வெட்டு தாய்லாந்தில் இல்லை. அங்கே தேட வேண்டாம். சாவகத் தமிழ் கல்வெட்டுகள் எல்லாம் ஆவணப்படுத்தப்பட்டுளதால் எப்படியும் நூல்களில் இருந்து கண்டறிந்துவிடுவேன். மேலதிக தகவல்களுக்கு அப்பாத்துரையார் கொடுத்த தவறான தகவல் பக்கத்துக்கு வரவும்.

ஆனால் இதில் நான் கற்றுக்கொண்டது என்னவெனில் வெவ்வேறு நாடுகளில் உள்ள பல்கலைக்கழகங்களில் வரலாறு தொல்லியல் படிக்கும் தமிழ் மாணவர்களை முகநூல் மூலம் ஒன்றிணைக்க வேண்டும். இத்தகவலை தேடவே எனக்கு மூன்று மாதங்களுக்கும் மேல் ஆகிவிட்டது. இதுவே அந்நாட்டின் தமிழ் மாணவர்களிடம் கேட்டிருந்தால் தகவல் எளிதாக வந்திருக்கும். நீங்கள் உங்களுக்குத் தெரிந்த தாய்லாந்து தொல்லியல் தமிழ் ஆர்வலர்களை முகநூலில் என்னை தொடர்பு கொள்ளச் சொன்னால் நலம். நேரம் கிடைக்கும் போது முயற்சிக்கவும்.[1]. அப்படியே உங்கள் முகநூல் முகவரியையும் த்ந்தால் நன்று. நன்றி.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 12:28, 29 சூன் 2013 (UTC)

கையொப்பம்[தொகு]

{கட்டுரை/பயனர்) பேச்சுப் பக்கங்களில் உரையாடும் போது கையொப்பம் இட மறக்காதீர்கள். கருத்தின் முடிவில், கையொப்பம் இட ~~~~ என்று இட்டால் போதும். நன்றி!-தமிழ்க்குரிசில் (பேச்சு) 07:14, 26 மார்ச் 2013 (UTC)

மாதம் 100 தொகுப்புகள் மைல்கல்[தொகு]

வணக்கம், மாயவரத்தான்!

100 sculpture.jpg

நீங்கள் கடந்த மாதம் 100 தொகுப்புகளுக்கு மேல் பங்களித்துள்ளதற்கு என் மகிழ்ச்சியையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன். தொடர்ந்து இவ்வாறு பங்களித்து தமிழ் விக்கிப்பீடியாவின் முனைப்பான பங்களிப்பாளர் எண்ணிக்கையைக் கூட்ட உதவுமாறு விக்கித்திட்டம் 100 சார்பாக கேட்டுக் கொள்கிறேன். அடுத்து 250 தொகுப்புகளைத் தாண்டும் போது மீண்டும் உங்கள் பேச்சுப் பக்கத்துக்கு வருவேன் :)

குறிப்பு: வெறும் தொகுப்பு / கட்டுரை எண்ணிக்கையைக் கருத்திற் கொண்டு நாம் தமிழ் விக்கிப்பீடியாவின் தரத்தை நோக்குவதில்லை. ஆயினும், முனைப்பான பங்களிப்பாளர்களை இனங்காண உள்ள முக்கிய வழிகளில் தொகுப்பு எண்ணிக்கையும் ஒன்று. எனவே, வழமை போலவே எண்ணிக்கையைக் கருத்தில் கொள்ளாமல் பயன் கருதி மட்டும் பங்களிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். நன்றி.

--இரவி (பேச்சு) 06:45, 2 ஏப்ரல் 2013 (UTC)

நன்றி :) --பயனர்:மாயவரத்தான் (பேச்சு) 17:45, 3 ஏப்ரல் 2013 (UTC)

தமிழ் விக்கிப்பீடியர்கள் சந்திப்பு[தொகு]

தமிழ் விக்கிப்பீடியா தொடங்கப்பட்டு பத்தாண்டுகள் முடிவடைவதையொட்டி சென்னையில் தமிழ் விக்கிப்பீடியர்கள் சந்திப்பு நிகழ்வு சென்னையில் இரு நாட்கள் நடைபெற உள்ளன. தாங்களும் இந்நிகழ்வில் கலந்து கொள்ள வேண்டுகிறேன். இந்நிகழ்வில் கலந்து கொள்வது குறித்த விருப்பத்தை இங்கு பதிவு செய்திட வேண்டுகிறேன்.--தேனி. மு. சுப்பிரமணி./உரையாடுக. 01:57, 5 சூலை 2013 (UTC)

எனக்கு உறுதியாகத் தெரியவில்லை. நான் கோவையில் இருந்து கிளம்புவதற்கு வாய்ப்பு அதிகம் உள்ளதால் மாநாட்டுக்கு ஒரு வாரத்துக்கு முன்னர் சொல்கிறேன்.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 14:11, 17 சூலை 2013 (UTC)

சட்டை (டிசர்ட்) தயாரிப்புக்கு உதவி[தொகு]

வணக்கம் நண்பரே, தாங்கள் [விக்கிப்பீடியா பத்தாண்டுகள்] பக்கத்தில் சட்டை தயாரிப்பு பணியில் தங்களுக்கு உள்ள அனுபவம் மற்றும், சட்டைகள் தைத்துக் கொடுப்பதில் முன்வந்து விருப்பத்தையும் தெரிவித்துள்ளீர்கள். அதற்கு தங்களுக்கு மிகவும் நன்றி. தற்போது சட்டைகள் தயாரிப்பு பணியினை துவங்க உள்ளோம். முதற்கட்டமாக சட்டை வடிவமைப்பு பணிகளை நண்பர்கள் தாரிக் மற்றும் ஆன்டன் கவனித்துக் கொண்டிருக்கின்றார்கள். இம்மாதம் 5 ம் தேதிக்குப் பிறகு சட்டைகளை அச்சடிக்கும் பணிக்கு சில நிறுவனங்களை அனுகலாம் என்று இருக்கிறோம். அவற்றுக்கு தங்களுடைய உதவியும் தேவைப்படுகிறது.

சட்டையினைப் பற்றி குறிப்புகள்-

1) வெள்ளை நிறத்தில் காலர் வைத்த சட்டை. (பாக்கெட்டுடன் இருந்தால் சிறப்பு). துணியின் தன்மை பருத்தியாக இருந்தால் நல்லது. 2) அளவுகள் 100க்கு எனும் பொழுது small 5%, medium 20%, large 40% extra large 30%, XXL 5% என்ற அளவுகளில் தேவை. எண்ணிக்கை தற்போது 50 என்ற அளவில் வைத்து விக்கிமீடியா அறக்கட்டளைக்கு அனுப்பியுள்ளமையால் small 3 , medium 10, large 20, extra large 15, XXL 2 என்ற அளவில் தேவைப்படும்.

இச்செய்தி தங்களுடைய பார்வைக்கு வரும் பொழுது என்னுடைய பேச்சுப் பக்கத்திலோ அல்லது 9566157066 என்ற கைப்பேசி எண்ணிலோ தொடர்புகொள்ளுங்கள். --சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 12:16, 2 செப்டம்பர் 2013 (UTC)

நன்றி நண்பரே. பணிச்சூழல் காரணமாக கடந்த சில தினங்களாக விக்கி பக்கம் ஒதுங்க இயலவில்லை. இப்போது தான் இந்தத் தகவலைப் பார்க்க நேரிட்டது. இந்நேரம் இந்தப் பணி முடிவடைந்திருக்கும் என்று எண்ணுகிறேன். தாமதமான பதிலுக்கு வருத்தங்கள்! :( --மாயவரத்தான் (பேச்சு) 4:18, 23 செப்டம்பர் 2013 (UTC)

பண்பாட்டுச் சுற்றுலாவுக்கான அழைப்பு[தொகு]

வணக்கம். தமிழ் விக்கிப்பீடியா பத்தாண்டு கொண்டாட்டத்தின் ஒரு பகுதியான பண்பாட்டுச் சுற்றுலாவில் நீங்களும் கலந்து கொள்ள வேண்டும் என்று அன்புடன் அழைக்கிறேன். தங்கள் வருகையை திட்டப்பக்கத்தில் உறுதிப்படுத்தி விடுங்கள். இது "அழைப்புள்ளவர்களுக்கு மட்டும்" என்ற வகையில் ஏற்பாடு செய்யப்படும் சுற்றுலா. எனவே, உங்கள் நண்பர்கள், உறவினர்கள் முதலியோரை அழைத்து வருவதைத் தவிர்க்கலாம். நன்றி.--இரவி (பேச்சு) 20:12, 18 செப்டம்பர் 2013 (UTC)

நன்றி. தவிர்க்க இயலாக் காரணங்களினால் இந்த பத்தாண்டு கொண்டாட்டங்களில் கலந்து கொள்ள இயலவில்லை. அடுத்த கொண்டாட்டத்தின்போது கண்டிப்பாக கலந்து கொள்ள முயல்கிறேன். :-) --மாயவரத்தான் (பேச்சு) 4:22, 23 செப்டம்பர் 2013 (UTC)

விக்கித்திட்டம் 100, சனவரி 2015 அழைப்பு[தொகு]

அனைவரும் வருக

வணக்கம் மாயவரத்தான்!
தமிழ் விக்கிப்பீடியாவில் சிறப்பாக பங்களித்தமைக்கும், பங்களிக்கின்றமைக்கும் எனது நன்றிகள். தமிழ் விக்கிப்பீடியாவில் ஒரு மாதம் (சனவரி 2015) 100 தொகுப்புக்கள் செய்யும் 100 பயனர்களை உருவாக்கும் இலக்கைக் கொண்ட ஓர் அரிய திட்டம் துவங்கப்பட்டுள்ளது. வரும் சனவரி மாதம் 100 தொகுப்புக்கள் செய்யும் 100 பயனர்களுள் ஒருவராக பிரகாசிக்க தங்களை அன்புடன் அழைக்கிறேன். இலக்கை அடைபவர்களுக்கு பதக்கங்களும், முதல் நாளில் இலக்கை அடைபவர்களுக்கு சிறப்புப் பதக்கங்களும் வழங்கப்படும். :) :) . மேலதிக விபரங்களுக்கு திட்டப்பக்கம் வருக. நன்றி.

--♥ ஆதவன் ♥ 。◕‿◕。 ♀ பேச்சு ♀ 04:05, 30 திசம்பர் 2014 (UTC)