பனிசாகர்
பனிசாகர் Panisagar | |
---|---|
நகரம் | |
ஆள்கூறுகள்: 24°15′N 92°08′E / 24.25°N 92.14°E | |
நாடு | இந்தியா |
மாநிலம் | திரிபுரா |
மாவட்டம் | வடக்கு திரிப்புரா மாவட்டம் |
அரசு | |
• வகை | பேரூராட்சி |
• நிர்வாகம் | பனிசாகர் நகர் பஞ்சாயத்து |
• தலைவர் | அனுராதா தாசு (பாரதிய ஜனதா கட்சி) |
ஏற்றம் | 45 m (148 ft) |
மக்கள்தொகை (2001) | |
• மொத்தம் | 11,938 |
மொழிகள் | |
• அலுவல் மொழி | வங்காள மொழி, கொக்பரோக், ஆங்கிலம் |
நேர வலயம் | ஒசநே+5:30 (IST) |
PIN | 799260 |
தொலைபேசிக் குறியீடு | 03822 |
வாகனப் பதிவு | டி.ஆர் |
இணையதளம் | tripura |
பனிசாகர் (Panisagar) என்பது இந்தியாவின் திரிபுரா மாநிலத்தில் வடக்கு திரிபுரா மாவட்டத்தில் உள்ள ஒரு நகரமும் நகர பஞ்சாயத்துமாகும். இது பனிசாகர் தாலுகாவின் தலைமையகமாகவும் உள்ளது.
நிலவியல்
[தொகு]பனிசாகர் சராசரியாக கடல் மட்டத்திலிருந்து 45 மீட்டர் உயரத்தில் உள்ளது. இந்த நகரம் தர்மநகர் மற்றும் கைலாசகருடன் கற் சாலைகளால் இணைக்கப்பட்டுள்ளது. தலைநகர் அகர்தலாவிலிருந்து தர்மநகர் வழியாக பனிசாகரை அணுகலாம். [1] பனிசாகர் அகர்தலாவில் இருந்து 120 கி.மீ. தொலைவில் உள்ளது.
அரசியல்
[தொகு]2018 ஆம் ஆண்டு நடைபெற்ற திரிபுரா சட்டப் பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்ற பனிசாகர் தொகுதியின் தற்போதைய சட்டமன்ற உறுப்பினராக பினய் பூசன் தாசு உள்ளார். [2]
போக்குவரத்து
[தொகு]தேசிய நெடுஞ்சாலை 108 பனிசாகரில் இருந்து தொடங்கி மிசோரமில் உள்ள ஐசுவால் வரை நீண்டுள்ளது. அருகிலுள்ள விமான நிலையம் ஐசுவால் விமான நிலையம் ஆகும். இது 74 கிமீ தொலைவில் உள்ளது மற்றும் சில்சார்-சப்ரூம் பிரிவில் அமைந்துள்ள பனிசாகர் இரயில் நிலையம் உள்ளது. பனிசாகரில் இருந்து 101 கிமீ தொலைவில் உள்ள சில்சார் இரயில் நிலையம் ஒரு முக்கிய இரயில் நிலையம் ஆகும்.
கல்வி
[தொகு]- பிராந்திய உடற்கல்வி கல்லூரி, பனிசாகர்
- கேந்திரிய வித்யாலயா, பனிசாகர்
- ஓலி கிராசு பள்ளி, பனிசாகர்
- பனிசாகர் மேல்நிலைப் பள்ளி
மேலும் பார்க்கவும்
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Census of India 2001: Data from the 2001 Census, including cities, villages and towns (Provisional)". பார்க்கப்பட்ட நாள் 2008-11-01.
- ↑ "🗳️ Binay Bhushan das winner in Panisagar, Tripura Assembly Elections 2018: LIVE Results & Latest News: Election Dates, Polling Schedule, Election Results & Live Election Updates".