நீரெலி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
AntonBot (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 04:01, 19 பெப்பிரவரி 2017 அன்றிருந்தவாரான திருத்தம் (→‎top: clean up, grammar correction, replaced: லின்னேயஸ்L)
நீரெலி
புதைப்படிவ காலம்:24–0 Ma
Late Miocene – Recent
North American beaver (Castor canadensis)
உயிரியல் வகைப்பாடு
திணை:
தொகுதி:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
பேரினம்:
Castor

இனம் (உயிரியல்)

C. fiber – Eurasian beaver
C. canadensis – North American beaver
C. californicus

Distribution of C. fiber.
Distribution of C. canadensis.
Fossils of C. californicus

நீரெலி என்பது ஒரு அரை-நீர்வாழ் (semi-aquatic) கொறியுயிர் (rodents) ஆகும். இது தென் அமெரிக்காவையும் ஐரோப்பாவையும் இயற்கை வசிப்பிடமாக கொண்டது.

பீவர்கள் ஆற்றில் அணைகட்டி குளம்போல அமைத்து அங்கு சிறு தடிகள் தாவரங்கள் போன்றவற்றை கொண்டு தங்களது வீடுகள் அமைத்து வாழும். இச்செயல்பாட்டில் அவை ஈடுபடும் நேர்த்தி, சுறுசுறுப்பு பீவர்கள் பலரை கவர காரணமாய் அமைந்துள்ளது.

உலகில் இரண்டாவது பெரிய கொறியுயிர் இதுவேயாகும். பீவர்கள் தங்கள் வாழ்க்கைக்காலம் முழுதும் வளர்கின்றன. முதிர்ந்த பீவர்கள் சுமார் 25 கிலோ வரை எடையுள்ளவை. பெண் பீவர்கள் ஆண்கள் அளவுக்கோ அல்லது அவற்றிலும் பெரிதாகவோ வளர்கின்றன. இது பொதுவாக வேறு பாலூட்டிகளில் காணப்படாத ஒரு தன்மையாகும்.

இனங்கள்

ஐரோப்பிய பீவர்கள் ஒரு நிலையில் அவற்றின் உரோமத்துக்காகவும், ஒருவகை வாசனைத்த் திரவியத்துக்காகவும், வேட்டையாடப்பட்டு அழியும் நிலையிலிருந்தன. எனினும் பின்னர் மீண்டும் ஐரோப்பா முழுவதும் கொண்டுவரப்பட்டுள்ளன. தற்பொழுது, எல்பே (Elbe), ரோன் (Rhone) ஆகிய இடங்களிலும், ஸ்கண்டினேவியாவின் பகுதிகளிலும், பீவர்கள் ஆயிரக்கணக்கில் வாழ்கின்றன. பவேரியா, நெதர்லாந்து ஆகிய இடங்களுக்கும் இவை புதிதாகக் கொண்டுவரப்பட்டுள்ளதுடன், அவை புதிய இடங்களுக்கும் பரவி வருகின்றன. ஐக்கிய இராச்சியத்தில், பீவர்கள், 17 ஆம் நூற்றாண்டளவில் அழிந்துவிட்டன.

அமெரிக்க பீவர், கனடாவின் தேசிய விலங்காகும். இது கனடாவின் ஐந்து சத நாணயத்தில் இடம் பெற்றுள்ளதுடன், அந் நாட்டின் முதலாவது தபால்தலையிலும் இடம் பெற்றிருந்தது. எனினும் நாட்டின் பல பகுதிகளில் இது தொல்லை கொடுக்கும் பிராணியாகக் கருதப்படுகின்றது.

வெளி இணைப்புகள்

விக்கியினங்கள் தளத்தில் பின்வரும் தலைப்பில் தகவல்கள் உள்ளன:
"https://ta.wikipedia.org/w/index.php?title=நீரெலி&oldid=2190234" இலிருந்து மீள்விக்கப்பட்டது