நிலநேர்க்கோட்டு வட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
புவியின் நிலப்படம்
நிலநிரைக்கோடு (λ)
நிலநிரைக் கோடுகள் இங்கே வளை கோடுகளாகத் தெரிகின்றன. உண்மையில் இவை பெரு வட்டத்தின் அரைப் பகுதிகளாகும்.
நிலநேர்க்கோடு (φ)
இங்கே நிலநேர்க்கோடுகள் கிடைக் கோடுகளாகத் தெரிகின்றன. உண்மையில் இவை வெவேறு விட்டங்களைக் கொண்ட வட்டங்களாகும்.
நிலநடுக்கோடு புவிக் கோளத்தை வட அரைக்கோளம், தென் அரைக்கோளம் என இரண்டாகப் பிரிக்கின்றது. இதன் அளவு 0°.
புவிவடிவவியல்
 
அடிப்படைகள்
புவிவடிவவியல் · புவியியக்கவியல்
Geomatics · புவிப்படக்கலை
கோட்பாடுகள்
தாழ்தளம் · தொலைவு · புவிவடு
புவிவடிவம் · புவிக்கோளுரு அமைப்பு
புவியியல் ஆயத் திட்டம்
கிடைநிலை சார்பீடு
நிலநேர்க்கோடு/நிலநிரைக்கோடு · வரைபடக்கோட்டுச் சட்டம்
நோக்கீட்டு நீள்கோளம் · செய்மதி புவிவடிவவியல்
பரவெளி குறிப்பீட்டு அமைப்பு
நுட்பங்கள்
புஇசெக · புஇக · GLONASS · IRNSS
செந்தரங்கள்
ED50 · ETRS89 · GRS 80
NAD83 · NAVD88 · SAD69
SRID · UTM · WGS84
வரலாறு
புவிவடிவவியல் வரலாறு
NAVD29
மெர்காதோர் வீழல் மூலம் வரையப்பட்ட உலக நிலப்படம். உயர்ந்த நிலநேர்க்கோடுகளில், முனையங்களுக்கு அண்மையில், கோணங்கள் மெய்யாக இல்லை. புவியின் கோள வடிவமே உண்மையான உலக நிலப்படத்தைத் தரவல்லது. மெர்காதோர் வீழல் இந்தக் கோளத்தை ஓர் உருளைக்குள் அடக்கும்போது விழும் வீழலாம்.
மெர்காதோர் வீழலும் அதன் பயன்பாடும். இந்த நுட்பம் 16ஆம் நூற்றாண்டில் நெதர்லாந்தில் உருவானது.

நில நேர்க்கோட்டு வட்டம் (circle of latitude) புவியின் மேல் ஒரே நிலநேர்க்கோடு கோணமுடைய (உயர அளவீடு கவனிக்காது) அனைத்துப் புள்ளிகளையும் இணைக்கும் கிழக்குமேற்கான கருத்தியலான வட்டமாகும்.

நிலநேர்க்கோட்டு வட்டங்கள் ஒன்றுக்கொன்று இணையாக இருப்பதால் பெரும்பாலான நேரங்களில் இணைகள் எனவும் குறிப்பிடப்படுகின்றன. அதாவது இரு வட்டங்கள் ஒன்றுக்கொன்று ஒரே தொலைவில் இருக்கும். இந்த வட்டத்தில் உள்ள ஓரிடத்தின் அமைவிடம் அதன் நிலநிரைக்கோடால் பெறப்படும். நிலநேர்க்கோட்டு வட்டங்களும் நிலநிரைக்கோடு வட்டங்களும் வேறுபடுகின்றன; நிலநிரைக்கோட்டு வட்டங்கள் அனைத்தும் புவி மையத்தை நடுவில் கொண்ட பெருவட்டங்களாகும். ஆனால் நிலநேர்க்கோட்டு வட்டங்கள் ஒன்றுக்கொன்று அளவில் மாறுபடுபவை. நிலநடுக்கோட்டிலிருந்து விலகி தள்ளிச் செல்லச் செல்ல இவை சிறியதாகிக் கொண்டு செல்கின்றன. இவற்றின் பரிதி நீளங்களை பொது சைன் அல்லது முக்கோணவியல் சார்புகள் மூலம் எளிதில் கணக்கிட முடியும். 60வது வடக்கு இணையும் 60வது தெற்கு இணையும் ஒரே அளவிலானவை; இவை புவிநடுக்கோட்டு வட்டத்தை விட (புவியின் கோளம் சிறிய தட்டையாக்கலைக் கொண்டுள்ளதை (0.3%) புறக்கணித்து) கிட்டத்தட்ட பாதியளவிலானவை. நிலநேர்க்கோட்டு வட்டங்கள் எப்போதும் நெடுவரைகளுக்கு செங்குத்தானவை.

வட்டத்தின் அகலாங்கு கிட்டத்தட்ட புவிநடுக்கோட்டிற்கும் அந்த வட்டத்திற்குமிடையே உள்ள கோணமாகும்; இக்கோணத்தின் உச்சி புவியின் மையத்தில் இருக்கும். புவிநடுக்கோடு 0°பாகையில் உள்ளது. வடதுருவமும் தென்துருவமும் முறையே 90° வடக்கிலும் 90° தெற்கிலும் உள்ளன. புவிநடுக்கோடே மிகவும் நீளமான நிலநேர்க்கோட்டு வட்டமாகும். இது ஒன்று மட்டுமே பெருவட்டமுமான நிலநேர்க்கோட்டு வட்டமாகும்.

ஒவ்வொரு அரைக்கோளத்திலும் துருவத்திற்கும் நிலநடுக்கோட்டிற்கும் இடையே 89 முழுவெண்ணுள்ள (முழுப் பாகை) வட்டங்கள் உள்ளன; இவற்றை இன்னமும் கூடத் துல்லியமாக பிரிக்கலாம். பொதுவாக இவை பதின்ம பாகையாகக் குறிப்பிடப்படுகின்றன (காட்டாக 34.637°). சிலநேரங்களில் பாகைகள் கலை, விகலைகளாகவும் குறிப்பிடப்படுகின்றன (காட்டாக 22°14'26"தெ) இவ்வாறு எத்தனைத் துல்லியமாக அகலாங்கு அளவிடப்படலாம் என்பதற்கு எல்லையேதுமில்லை. எனவே புவியின் மீதுள்ள அகலாங்கு வட்டங்கள் அல்லது நிலநேர்க்கோட்டு வட்டங்களின் எண்ணிக்கை முடிவிலி ஆகும்.

ஓர் இரு பரிமாண நிலப்படத்தில் நிலநேர்க்கோட்டு வட்டங்கள் இணையாகவோ இல்லாமலோ இருக்கலாம். அவர்களிடையேயான இடைவெளியும் சீராக இல்லாதிருக்கலாம். இவை எவ்வித வீழ்ச்சி நுட்பத்தை பயன்படுத்தி சம மட்டத்தில் நிலப்படம் உருவாக்கப்பட்டது என்பதைச் சார்ந்தது. நிலநடுக்கோட்டை மையமாகக் கொண்ட சமச்செவ்வக வீழலில் நிலநேர்க்கோட்டு வட்டங்கள் கிடையாகவும், இணையாகவும், சமமான இடைவெளி கொண்டும் காணப்படும். அதேவேளை உருளைசார் அல்லது உருளைசார் போன்ற வீழல்களில் நிலநேர்க்கோட்டு வட்டங்கள் கிடையாகவும் இணையாகவும் இருந்தபோதும் சமமான இடைவெளிகளில் இருக்காது. காட்டாக மெர்காதோர் வீழலில் நிலநேர்க்கோட்டு வட்டங்கள் துருவங்களுக்கு அண்மையில் அவ்விடத்து நிலப்பட அளவுகோல்களையும் நிலப்பரப்பு வடிவங்களை சரியாகக் காட்டவும் கூடுதல் இடைவெளியோடு இருக்கும். கால்-பீட்டர்சு வீழலில் நிலநேர்க்கோட்டு வட்டங்கள் துருவங்களுக்கு அண்மையில் குறைந்த இடைவெளிகளுடன் காட்டப்படும்; இதனால் நிலப்பரப்புகளின் பரப்பளவுகள் ஒப்புநோக்கத்தக்கதாக இருக்கும். பெரும்பாலான உருளைசார்ந்தில்லாத வீழல்களில் நிலநேர்க்கோட்டு வட்டங்கள் நேராகவும் இருப்பதில்லை, இணையாகவும் இருப்பதில்லை.

இயற்கையான புவியியல் எல்லைகள் இல்லாத (பாலைவனம், கடல்) நிலப்பரப்புகளில் நாடுகளின் (அல்லது நிலப்பகுதிகளின்) எல்லைகளைக் குறிப்பிட நிலநேர்க்கோட்டு வட்டங்களின் வட்டவிற்கள் பயன்படுத்தப்படுகின்றன. 1884இல் பெர்லின் மாநாட்டில் செயற்கையாக ஆபிரிக்க நாட்டெல்லைகள் பெருமளவில் பரிமாற்றப்பட்டு நிலப்படங்களில் குறிக்கப்பட்டபோது இவ்வாறு குறிப்பிடப்பட்டது. காட்டாக வடக்கு கொலராடோவின் வடக்கு எல்லை 41°இலும் தெற்கு எல்லை 37°யிலும் வரையறுக்கப்பட்டுள்ளது. ஐக்கிய அமெரிக்காவிற்கும் கனடாவிற்கும் இடையேயான எல்லையில் கிட்டத்தட்ட பாதி 49° நிலநேர்க்கோட்டில் அமைந்துள்ளது.

முதன்மையான ஐந்து நிலநேர்க்கோட்டு வட்டங்கள் - புவியின் சம செவ்வக வீழலில் இவை வரையப்பட்டுள்ளன.

முதன்மையான நிலநேர்க்கோட்டு வட்டங்கள்[தொகு]

முதன்மையான நிலநேர்க்கோட்டு வட்டங்களாக ஐந்து அடையாளபடுத்தப்படுகின்றன. வடக்கிலிருந்து தெற்காக இவை கீழே பட்டியலிடப்பட்டுள்ளன. நிலநடுக்கோட்டின் அமைவிடம் நிலையானது; புவியின் சுழல் அச்சிலிருந்து 90 பாகைகள். ஆனால் மற்ற நிலநேர்கோட்டு வட்டங்களின் அமைவிடம் புவியின் சுற்றுப்பாதை யுடன் இந்த அச்சின் சாய்வை பொறுத்தது. எனவே இவை நிலையானவை அல்ல. கீழே கொடுக்கப்பட்டுள்ள மதிப்புகள் ஏப்ரல் 30, 2018 அன்று நிலவுவன:[1]

இந்த நிலநேர்க்கோட்டுவட்டங்கள், நிலநடுக்கோட்டைத் தவிர, ஐந்து முதன்மை புவி வெப்ப மண்டலங்களைப் பிரிப்பவனவாகவும் உள்ளன.

மேற்கோள்கள்[தொகு]

  1. "''Trópico en movimiento'' (in Spanish)". Groups.google.com. பார்க்கப்பட்ட நாள் 2014-05-13.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=நிலநேர்க்கோட்டு_வட்டம்&oldid=3268110" இலிருந்து மீள்விக்கப்பட்டது