நினைக்க தெரிந்த மனமே (திரைப்படம்)
நினைக்கத் தெரிந்த மனமே | |
---|---|
தலைப்பு அட்டை | |
இயக்கம் | சுரேசு |
தயாரிப்பு | சிவானந்தன் |
திரைக்கதை | கே. தினகர் |
இசை | இளையராஜா |
நடிப்பு | மோகன் சந்திரசேகர் ரூபினி (நடிகை) |
ஒளிப்பதிவு | இராஜராஜன் |
படத்தொகுப்பு | ஆர். ஜி. கோபி |
கலையகம் | சிவதாரணி மூவிசு |
வெளியீடு | 14 ஆகத்து 1987 |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
நினைக்க தெரிந்த மனமே (Ninaikka Therintha Maname) என்பது 1987 இல் வெளிவந்த இந்தியத் தமிழ் காதல் திரைப்படமாகும். கே. தினகர் எழுதிய இப்படத்தை சுரேஷ் இயக்கியிருந்தார். மணியன் எழுதிய வாழ்த்தும் நெஞ்சங்கள் நாவலை அடிப்படையாகக் கொண்ட,[1] இத்திரைப்படத்தில் மோகன், சந்திரசேகர், ரூபினி ஆகியோர் நடித்திருந்தனர். இத்திரைப்படம் 1987 ஆகத்து 14 அன்று வெளியிடப்பட்டது.
நடிகர்கள்
[தொகு]- மோகன்
- சந்திரசேகர்
- ரூபினி
- கல்லாப்பெட்டி சிங்காரம்
- லூசு மோகன்
- மாஸ்டர் ஹாஜா ஷெரிப்
- இடிச்சபுளி செல்வராசு
- என்னத்த கண்ணையா
- டைப்பிஸ்ட் கோபு
- குண்டு கல்யாணம்
- தயிர்வடை தேசிகன்
- ஓமக்குச்சி நரசிம்மன்
- குள்ளமணி
- கருப்பு சுப்பையா
- திடீர் கண்ணையா
பாடல்கள்
[தொகு]இத்திரைப்படத்திற்கு இளையராஜா இசையமைத்திருந்தார். பாடல் வரிகளை காமகோடியன் எழுதியிருந்தார்.[2][3] இப்படத்தில் இளையராஜாவின் மூத்த மகன் கார்த்திக் ராஜா, 13 வயதில், "கண்ணுக்கும் கண்ணுக்கும்" பாடலுக்கு இசைப்பலகை வாசித்தார்.[4]
பாடல்கள் | ||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|
# | பாடல் | பாடகர்(கள்) | நீளம் | |||||||
1. | "கண்ணுக்கும் கண்ணுக்கும் மோதல்" | கே. ஜே. யேசுதாஸ் | 4:37 | |||||||
2. | "இளமை ரதத்தில்" | கே. எஸ். சித்ரா | 4:22 | |||||||
3. | "எங்கெங்கு நீ சென்ற" | கே. ஜே. யேசுதாஸ், கே. எஸ். சித்ரா | 5:14 | |||||||
4. | "சின்ன சின்ன முத்து நீரிலே" | கே. ஜே. யேசுதாஸ், எஸ். ஜானகி | 4:37 | |||||||
5. | "எங்கெங்கு நீ சென்ற" (தனிப்பாடல்) | கே. ஜே. யேசுதாஸ் | 5:13 | |||||||
மொத்த நீளம்: |
24:03 |
வெளியீடும் வரவேற்பும்
[தொகு]நினைக்க தெரிந்த மனமே 1987 ஆகத்து 14 அன்று வெளியானது.[5] இந்தியன் எக்ஸ்பிரஸ் "இந்நாவல் திரைப்படத்தைச் சுருங்கச் சொன்னால் பாடல்களாலும் சண்டைகளாலும் நிறைந்துள்ளது. படம் சிறிதாகவும், அழகானதாகவும் இருந்திருந்தால் அது உதவியிருக்கலாம்". என்று எழுதியது.[6] கல்கியின் ஜெயமன்மதன், "இளையராஜாவின் இசையை மட்டுமே படத்தைக் காப்பாற்றும் கருணையாகக் கண்டேன்" என்று எழுதினார்.[7]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Manian, Aranthai (2020). Thiraipadangalana Ilakkiyangalum Naadgangalum. Pustaka Digital Media. p. 1917.
- ↑ "Ninaikka Therindha Maname Tamil Film LP Vinyl Record by Ilayaraja". Mossymart. Archived from the original on 18 January 2023. பார்க்கப்பட்ட நாள் 18 January 2023.
- ↑ "Ninaikka Therintha Maname (Original Motion Picture Soundtrack) – EP". Apple Music. Archived from the original on 19 January 2023. பார்க்கப்பட்ட நாள் 19 January 2023.
- ↑ ஜெயச்சந்திரன், காயத்திரி (29 June 2021). "சொல்லாத வார்த்தை இங்கு பூவாகும் - கார்த்திக் ராஜா க்ளிக்ஸ்..!". ABP Live. Archived from the original on 18 January 2023. பார்க்கப்பட்ட நாள் 18 January 2023.
- ↑ "Ninaikka Therintha Manamey / நினைக்க தெரிந்த மனமே". Screen4Screen (in ஆங்கிலம் and தமிழ்). Archived from the original on 12 December 2022. பார்க்கப்பட்ட நாள் 18 January 2023.
- ↑ "Threesome". இந்தியன் எக்சுபிரசு: pp. 5. 21 August 1987. https://news.google.com/newspapers?nid=P9oYG7HA76QC&dat=19870821&printsec=frontpage&hl=en.
- ↑ சுபா (எழுத்தாளர்கள்) (27 September 1987). "நினைக்க தெரிந்த மனமே..." கல்கி (in Tamil). p. 53. Archived from the original on 30 January 2023. பார்க்கப்பட்ட நாள் 18 January 2023.
{{cite magazine}}
: CS1 maint: unrecognized language (link)