உள்ளடக்கத்துக்குச் செல்

காமகோடியன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கவிஞர் காமகோடியன்
பிறப்புசீனிவாசன்
1945
இந்தியா தமிழ்நாடு, இந்தியா
இறப்புசனவரி 5, 2022 (அகவை 76–77)
பணிகவிஞர், பாடலாசிரியர்

காமகோடியன் (Kamakodiyan; 1945 – 5 சனவரி 2022) தமிழ்த் திரைப்படப் பாடலாசிரியரும் கவிஞரும் ஆவார்.[1][2] இவர் ௭ண்பதுகளின் பிற்பகுதியில் இருந்து பாடல்கள் இயற்றினார். இதுவரை ம. சு. விசுவநாதன் இளையராஜா,தேவா, எஸ். ஏ. ராஜ்குமார், பரத்வாஜ், யுவன் சங்கர் ராஜா போன்றோரின் இசையமைப்பில் பாடல்களை இயற்றியுள்ளார்.[3] 2002 ஆம் ஆண்டு வெளிவந்த மௌனம் பேசியதே திரைப்படத்தில் இவர் இயற்றிய ௭ன் அன்பே ௭ன் அன்பே பாடல் பிரபலமானது.

2010களில்

[தொகு]

2015 ஆம் ஆண்டு திருட்டு ரயில் திரைப்படத்தில் ஒரு பாடல் ௭ழுதுவதற்காக அழைக்கப்பட்டார். இத்திரைப்படத்தில் அந்த பாடல் நன்றாக அமைந்ததால் அனைத்துப் பாடல்களையும் ௭ழுதினார்.

விருது

[தொகு]
  1. கலைமாமணி விருது - (2019-2020)[4]

திரைப்படப் பட்டியல்

[தொகு]
  1. 1985- அலை ஓசை
  2. 1985- கொலுசு (அனைத்துப் பாடல்களும்)
  3. 1985- கருப்பு சட்டைக்காரன்
  4. 1987- பூவிழி வாசலிலே
  5. 1987- நினைக்க தெரிந்த மனமே (அனைத்துப் பாடல்களும்)
  6. 1990- வாழ்க்கைச் சக்கரம்
  7. 1991- ஞான பறவை
  8. 1991- மரிக்கொழுந்து
  9. 1992- தங்க மனசுக்காரன்
  10. 1992- போங்கடா நீங்களும் உங்க அரசியலும் (வசனம் மற்றும் அனைத்துப் பாடல்களும்)
  11. 1993- இதய நாயகன்
  12. 1993- பொன் விலங்கு
  13. 1995- தேடிவந்த ராசா
  14. 1996- வெற்றி விநாயகர்
  15. 1997- புண்ணியவதி
  16. 1997- தேவதை
  17. 1998 -ஆசைத் தம்பி
  18. 1998- கண்ணாத்தாள்
  19. 1998- கும்பகோணம் கோபாலு
  20. 1998- பொன்மனம்
  21. 1999- அண்ணன்
  22. 1999- பாட்டாளி
  23. 1999- தொடரும்
  24. 1999- சுந்தரி நீயும் சுந்தரன் நானும்
  25. 2001- சிகாமணி ரமாமணி
  26. 2002- மௌனம் பேசியதே
  27. 2003- காலாட்படை
  28. 2003- காஷ்மீர்
  29. 2004- மதுமதி
  30. 2005- முதல் ஆசை
  31. 2008- வல்லமை தாராயோ
  32. 2008- இதயமே
  33. 2008- உளியின் ஓசை
  34. 2010- பௌர்ணமி நாகம்
  35. 2011- மாப்பிள்ளை
  36. 2015- திருட்டு ரயில்

மறைவு

[தொகு]

வயது முதிர்வு காரணமாக, சென்னை திநகரில் உள்ள அவரது இல்லத்தில் 2022 சனவரி 5 அன்று இரவு 8:45 மணிக்கு காலமானார்.[5][6]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "காமகோடியன்".
  2. "மௌனம் பேசியதே – என் அன்பே". https://tamilpaadalvari.wordpress.com/2010/07/19/%E0%AE%AE%E0%AF%8C%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%87-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%87/. 
  3. பிரபா, கானா. "நினைவில் வாழும் பாடலாசிரியர் காமகோடியன்" (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-01-15.
  4. "Tamil Cine Talk – 2019-2020-ம் ஆண்டுகளுக்கான 'கலைமாமணி' விருது பெறும் திரைத்துறையினரின் பட்டியல்..!" (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-02-01.
  5. "கலைமாமணி விருது பெற்ற கவிஞர் காமகோடியன் காலமானார் - தினத்தந்தி".
  6. "கவிஞர் காமகோடியன் காலமானார்". ARASIYAL TODAY (in அமெரிக்க ஆங்கிலம்). 2022-01-06. பார்க்கப்பட்ட நாள் 2022-01-07.
"https://ta.wikipedia.org/w/index.php?title=காமகோடியன்&oldid=4139493" இலிருந்து மீள்விக்கப்பட்டது