நாரா லோகேசு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நாரா லோகேசு
தெலுங்கு தேசம் கட்சி
பதவியில் உள்ளார்
பதவியில்
2014
பஞ்சாயத்து ராஜ், ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர், தகவல் தொழில்நுட்பம் மற்றும் தொடர்பு
ஆந்திரப் பிரதேச அரசு
பதவியில்
2 ஏப்ரல் 2017 – 30 மே 2019
ஆளுநர்ஈக்காடு சீனிவாசன் இலட்சுமி நரசிம்மன்
முதலமைச்சர்நா. சந்திரபாபு நாயுடு
சட்டமேலவை உறுப்பினர்
பதவியில்
28 மார்ச் 2017 – 29 மார்ச் 2023
அவைத் தலைவர்எனமாலா ராம கிருஷ்ணுடு
ஜங்கா கிருஷ்ணமூர்த்தி
முதலமைச்சர்நா. சந்திரபாபு நாயுடு
ஜெகன் மோகன் ரெட்டி
தலைவர்ஏ. சக்ரபாணி
நசியம் முகமது பரூக்
செரீப் முகமது அகமது
கொய்யே மோசனு ராஜு
முன்னையவர்பல்லே ரகுநாத ரெட்டி
பின்னவர்மேகபதி கௌதம் ரெட்டி
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு23 சனவரி 1983 (1983-01-23) (அகவை 41)[1]
ஐதராபாத்து, ஆந்திரப் பிரதேசம் (தற்போதைய தெலங்காணா), இந்தியா
அரசியல் கட்சிதெலுங்கு தேசம் கட்சி
துணைவர்நாரா பிராமணி
பிள்ளைகள்1 மகன்[2]
பெற்றோர்(s)நா. சந்திரபாபு நாயுடு (தந்தை)
நாரா புவனேசுவரி (தாயார்)
வாழிடம்(s)ஐதராபாத்து, இந்தியா
முன்னாள் கல்லூரிகார்னிகி மெல்லன் பல்கலைக்கழகம் (இளம் அறிவியல்)
இசுடான்போர்டு வணிகவியல் பள்ளி (முதுகலை வணிக மேலாண்மை)
வேலைதொழிலதிபர், அரசியல்வாதி
உடைமைத்திரட்டுதெலுங்கு தேசம் கட்சி
தேசியப் பொதுச் செயலாளர்
இணையத்தளம்http://www.naralokesh.in

நாரா லோகேசு (Nara Lokesh) (பிறப்பு 23 ஜனவரி 1983) ஓர் இந்திய அரசியல்வாதியாவார். இவர் தெலுங்கு தேசம் கட்சியின் தலைவர் நா. சந்திரபாபு நாயுடுவின் மகன் ஆவார். சட்டமேலவை உறுப்பினரான இவர் பஞ்சாயத்து ராஜ், ஊரக வளர்ச்சி மற்றும் தகவல் தொழில்நுட்பம் மற்றும் தகவல் தொடர்பு அமைச்சராகவும் பணியாற்றினார். [3] தேர்தலில் போட்டியிடாமல் தந்தை சந்திரபாபு நாயுடுவின் அமைச்சரவையில் அமைச்சரானதால் கடுமையாக விமர்சிக்கப்பட்டார். [4] [5] [6] எவ்வாறாயினும், எந்தத் தேர்தலிலும் போட்டியிடாததற்காக பெரும் விமர்சனங்களுக்குப் பிறகு, இவர் இறுதியாக மங்களகிரி சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு, 2019 ஆந்திரப் பிரதேச சட்டமன்றத் தேர்தலில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் அல்லா ராமகிருஷ்ண ரெட்டியிடம் தோல்வியடைந்தார். [7] [8]

அரசியல் பின்னணி[தொகு]

இவரும் இவரது தந்தையும் தெலுங்கு தேசம் கட்சியின் தலைவருமான சந்திரபாபு நாயுடு இருவரும் 2019 ஆந்திரப் பிரதேச சட்டப் பேரவைத் தேர்தலில் மொத்தமுள்ள 175 இடங்களில் 23 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்று பெரும் அரசியல் பின்னடைவைச் சந்தித்தனர். [9] இது தெலுங்கு தேசம் கட்சியின் வரலாற்றில் இல்லாத மோசமான தோல்வியாகும். [10] [11] இவரது மேலவை உறுப்பினர் பதவிக்காலமும் சமீபத்தில் 29 மார்ச் 2023 அன்று முடிவடைந்தது [12]

ஊழல் குற்றச்சாட்டு[தொகு]

ஆந்திரப் பிரதேசத்தில் சாலை அமைப்பதில் ஊழல் இருப்பதாக குற்றம் சாட்டப்பட்டு குற்றப் புலனாய்வுத் துறையினரின் விசாரணையில் உள்ளார். [13] இந்த வழக்கில் இவருடன் இவரது தந்தையும் சிக்கியுள்ளார். [14]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Nara Lokesh: Ideological, political heir to NT Rama Rao's legacy". India TV News (in ஆங்கிலம்). 2 April 2019. பார்க்கப்பட்ட நாள் 1 January 2021.
  2. "Nara Lokesh Son Name Devaansh". page3hyd.in. 28 May 2015. பார்க்கப்பட்ட நாள் 28 May 2015.[தொடர்பிழந்த இணைப்பு]
  3. "Chandrababu Naidu's son Nara Lokesh takes oath as MLC amid chanting of hymns". https://timesofindia.indiatimes.com/city/amaravati/chandrababu-naidus-son-nara-lokesh-takes-oath-as-mlc-amid-chanting-of-hymns/articleshow/57914425.cms. 
  4. "Lokesh reluctant to divulge plans for electoral debut". https://www.thehindu.com/news/national/andhra-pradesh/Lokesh-reluctant-to-divulgeplans-for-electoral-debut/article60364367.ece. 
  5. https://theprint.in/politics/why-tdps-a-party-in-trouble-demoralised-cadre-ageing-naidu-not-yet-ready-nara-lokesh/760832/. {{cite web}}: Missing or empty |title= (help)
  6. https://www.thequint.com/elections/chandrababu-naidu-son-nara-lokesh-reacts-to-trolls-pappu-andhra-pradesh. {{cite web}}: Missing or empty |title= (help)
  7. "There is no point in searching for a safe seat: Nara Lokesh". https://timesofindia.indiatimes.com/elections/assembly-elections/andhra-pradesh/there-is-no-point-in-searching-for-a-safe-seat-lokesh/articleshow/68768852.cms. 
  8. "Andhra Assembly polls: TDP's Nara Lokesh loses to YSR Congress's Ramakrishna Reddy".
  9. https://economictimes.indiatimes.com/news/elections/assembly-elections/andhra-pradesh-assembly-election-result-live/articleshow/69453786.cms. {{cite web}}: Missing or empty |title= (help)
  10. "N Chandrababu Naidu's TDP staring at worst defeat in Andhra assembly".
  11. "Andhra Pradesh election results 2019: Is it end of the road for Chandrababu Naidu?".
  12. "AP MLC Polls 2023 Under MLA Quota To Be Held On March 23".
  13. "Lokesh gets CID notice in IRR case". The Times of India. 2023-10-01. பன்னாட்டுத் தர தொடர் எண்:0971-8257. https://timesofindia.indiatimes.com/city/vijayawada/lokesh-gets-cid-notice-in-irr-case/articleshow/104078645.cms?from=mdr. 
  14. "Lokesh gets CID notice in IRR case". The Times of India. 2023-10-01. பன்னாட்டுத் தர தொடர் எண்:0971-8257. https://timesofindia.indiatimes.com/city/vijayawada/lokesh-gets-cid-notice-in-irr-case/articleshow/104078645.cms?from=mdr. 

வெளி இணைப்புகள்[தொகு]

விக்கிமீடியா பொதுவகத்தில்,
Nara Lokesh
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=நாரா_லோகேசு&oldid=3820689" இலிருந்து மீள்விக்கப்பட்டது