நசியம் முகமது பரூக்
நசியம் முகமது பரூக் | |
---|---|
சிறுபான்மை நலன் மற்றும் அதிகாரமளித்தல் துறை ஆந்திரப் பிரதேச அரசு | |
பதவியில் 10 நவம்பர் 2018 – 23 மே 2019 | |
பின்னவர் | அம்சத் பாசா சேக் பேபரி |
ஆந்திரப் பிரதேச சட்ட மேலவையின் 9வது தலைவர் | |
பதவியில் 15 நவம்பர் 2017 – 10 நவம்பர் 2018 | |
முன்னையவர் | ஏ. சக்ரபாணி |
பின்னவர் | செரீப் முகமது அகமது |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 15 May 1950 நந்தியால், கர்நூல் மாவட்டம் |
பிள்ளைகள் | 6 |
நசியம் முகமது பரூக் (Nasyam Mohammed Farooq) (பிறப்பு: மே 15, 1950) ஆந்திரப் பிரதேச சட்ட மேலவையின் 9வது தலைவராகப் பணியாற்றிய ஒரு இந்திய அரசியல்வாதி ஆவார். பரூக் ஆந்திர பிரதேச சட்ட மேலவையில் <a href="./தெலுங்கு_தேசம்_கட்சி" rel="mw:WikiLink">தெலுங்கு தேசம் கட்சி</a>யின் நியமன உறுப்பினராக உள்ளார்.
அரசியல் வாழ்க்கை
[தொகு]இவர் ஆந்திரப் பிரதேச அரசாங்கத்தில் சுகாதாரக் கல்வி மற்றும் சிறுபான்மை நலனுக்கான அமைச்சராக நவம்பர் 2018 முதல் மே 2019 வரை பணியாற்றினார் [1] [2]
1984ல் என். டி. ராமராவ் அமைச்சரவையில் சர்க்கரை, வக்ஃப் சிறுபான்மை நலன் மற்றும் உருது அகாதமி அமைச்சராகவும், 1994 முதல் 2004 வரை துணை சபாநாயகராகவும், நா. சந்திரபாபு நாயுடு அமைச்சரவையில் நகராட்சி நகர்ப்புற வளர்ச்சி சிறுபான்மை நலன் அமைச்சராகவும் மற்றும் உயர்கல்வித்துறை அமைச்சராகவும் பணியாற்றினார். [3] இவர் முன்பு நந்தியால் நகராட்சியின் உறுப்பினராகவும், துணைத் தலைவராகவும், ஆந்திரப் பிரதேச சட்டப் பேரவை உறுப்பினராகவும் பணியாற்றினார். 10 நவம்பர் 2018 அன்று, இவர் ஆந்திரப் பிரதேச சட்ட மேலவையின் தலைவராக கிட்டத்தட்ட ஒரு வருடம் பணியாற்றிய பிறகு, முதல்வர் சந்திரபாபு நாயுடுவால் அமைச்சரவையில் சேர்க்கப்பட்டார். அதன் பிறகு ஆந்திரப் பிரதேச அரசில் சுகாதாரம் மற்றும் சிறுபான்மையினர் அதிகாரமளித்தல் அமைச்சராகப் பணியாற்றினார்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Chronicle, Deccan (2017-09-05). "NMD Farooq chosen to chair Council" (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-08-21.
- ↑ "Naidu's move to woo Muslims with Council chairmanship for Farooq". பார்க்கப்பட்ட நாள் 2022-08-21.
- ↑ India, The Hans (2017-07-20). "In a bid to woo Muslims, Naidu makes Farooq MLC" (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-08-21.