நாகினி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
நாகினி
நாகினி-4-தொடர்.jpg
நாகினி 4
வகைதிகில்
கற்பனை
காதல்
நாடகம்
உருவாக்கியவர்ஏக்தா கபூர்
Based onநாகின்
எழுதியவர்முக்தா தோன்ட்
நேஹா சிங்
ம்ரினல் ஜா
ஆர் எம் ஜோஷி
இயக்குனர்சாந்தாராம் வெர்மா
ரஞ்சன் குமார் சிங்
படைப்பு இயக்குனர்தனுஸ்ரி தாஸ்குப்தா
க்லோ ஃபெர்ன்ஸ்
காதர் காசி
நாடுஇந்தியா
இலங்கை
மொழிகள்தமிழ்
சீசன்கள்4
எபிசோடுகள் எண்ணிக்கை460
தயாரிப்பு
தயாரிப்பாளர்கள்
  • ஷோபா கபூர்
  • ஏக்தா கபூர்
திரைப்பிடிப்பு இடங்கள்மும்பை, மகாராஷ்ட்ரா
ஒளிப்பதிவாளர்சந்தோஷ் சூர்யவன்ஷி, சர்ஃபராஸ், அஜய்
ஓட்டம்15 -20 நிமிடங்கள் (நாகினி 1)
40-48 நிமிடங்கள் (நாகினி 2)
21-23 நிமிடங்கள் (நாகினி 3)
தயாரிப்பு நிறுவனங்கள்பாலாஜி டெலிபிலிம்ஸ்
ஒளிபரப்பு
சேனல்கலர்ஸ் தொலைக்காட்சி
ஒளிபரப்பான காலம்27 சூன் 2016 (2016-06-27)

நாகினி என்பது கலர்ஸ் தொலைக்காட்சியில் 1 நவம்பர் 2015 முதல் ஒளிபரப்பாகி வரும் நாகின் என்ற இந்தித் தொடரின் தமிழாக்கம் ஆகும். நினைத்த உருவிற்கு மாறும் பாம்புப் பெண்களின் வாழ்வை அடிப்படையாகக் கொண்ட இத்தொடரின் ஒவ்வொரு பருவத்திலும் பழிவாங்குதல் மற்றும் தீயோரிடமிருந்து நாகமணியைப் பாதுகாத்தல் ஆகிய இரண்டையும் மையமாகக் கொண்டு கதைக்களம் அமைந்துள்ளது.

முதல் பருவம் சன் தொலைக்காட்சியில் ஜூன் 27, 2016 முதல் ஜனவரி 21 2017 வரை திங்கள் முதல் சனிக்கிழமை வரை இரவு 10 மணிக்கு ஒளிபரப்பாகி 178 பகுதிகளுடன் நிறைவு பெற்றது. இதில் மௌனி ராய், அதா கான், அர்ஜுன் பிஜ்லானி, சுதா சந்திரன் ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.

2ஆம் பருவம் கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் பிப்ரவரி 20, 2018 அன்று தொடங்கியது. இது திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 7 மணி முதல் 8 மணி வரை ஒளிபரப்பப்பட்டு 76 பகுதிகளுடன் ஜுன் 5, 2018 ஆம் நாளன்று நிறைவு பெற்றது. இதில் மௌனி ராய், அதா கான், சுதா சந்திரன், கரண்வீர் போரா ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.[1]

3ஆம் பருவம் கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் ஜுன் 18, 2018 அன்று தொடங்கி திங்கள் முதல் வியாழன் வரை இரவு 08.30 மணிக்கு ஒளிபரப்பப்பட்டு ஜூன் 07, 2019 அன்று முடிவடைந்தது.[2] இதில் அனிதா ஹசனந்தனி, சுரபி ஜோதி, பியர்ல் V பூரி ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.

4ஆம் பருவம் கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் பிப்ரவரி 17, 2020 அன்று தொடங்கி திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 08.30 மணிக்கு ஒளிபரப்பப்படுகிறது. இதில் நியா ஷர்மா, விஜயேந்திர குமேரியா, ஜாஸ்மின் பசின், அனிதா ஹசனந்தனி ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இலங்கையில் உள்ள சக்தி தொலைக்காட்சியில் 'நீயா' என்ற பெயரில் மொழிமாற்றம் செய்யப்பட்டு சனி மற்றும் ஞாயிறு ஆகிய கிழமைகளில் இரவு 7 மணிக்கு ஒளிபரப்பானது

Overview[தொகு]

  • season 1 - 27 June 2016 - 21 January 2017 - 178 episodes
  • season 2 -20 February 2018- 3 June 2018-76 episodes
  • Season 3 -18 June 2018-7 June 2019 - 206 episodes
  • Season 4 - 17 February 2020 - Present


கதைச்சுருக்கம்[தொகு]

பருவம் 1[தொகு]

ஷிவன்யா மற்றும் அவரது ஒன்றுவிட்ட சகோதரி ஷ்ரேயா ஆகிய இருவரும் நினைத்த உருவிற்கு மாறும் இச்சாதாரி நாகங்கள் ஆவர். சக்தி வாய்ந்த நாகமணியின் இருப்பிடத்தைத் தெரிவிக்காததால் ஷிவன்யாவின் பெற்றோரை ஐந்து நபர்கள் சேர்ந்து கொன்றுவிடுகின்றனர். அவர்களில் ஹரீஷ், விவேக், கைலாஷ் ஆகிய மூன்று நபர்களை மட்டுமே தன் தாயின் கண்களில் ஷிவன்யாவால் காண முடிந்தது. அந்த ஐந்து கொலைகாரர்களையும் பழிவாங்குவதற்காக ஷிவன்யா ஹரீஷின் வீட்டிற்குள் வேலைக்காரியாக நுழைந்தார்.

ஹரீஷ்-யமுனா தம்பதியரின் மகனான கார்த்திக் ஷிவன்யாவின் மீது காதல் கொள்கிறார். பழிதீர்க்க ஹரீஷின் வீட்டில் நிரந்தரமாக இருக்க வேண்டும் என்பதால் ஷிவன்யா கார்த்திக்கைத் திருமணம் செய்து கொண்டார். ஆனால் நாளடைவில் அவர் கார்த்திக்கை விரும்ப ஆரம்பித்தார்.

ஷிவன்யா முதலில் விவேக்கைக் கொன்றார். பிறகு ஷ்ரேயா மூலம் நான்காவது கொலைகாரர்; ஹரீஷின் நண்பர் சூர்யா என்பதை அறிந்த அவர் ஷ்ரேயாவுடன் சேர்ந்து சூர்யாவைக் கொன்றார். பிறகு ஷிவன்யா தன் நாக ரூபத்தில் இருக்கும் போது அவரை ருத்ரம்மாவின் மாய கத்தியால் கார்த்திக் தாக்கினார். இதனால் ஷிவன்யா தன் சக்திகளை இழந்துவிட்டார். பிறகு கிருஷ்ண பூஜையின் பலனாக அதீத சக்திகளுடன் மீண்ட ஷிவன்யா கைலாஷைக் கொன்றார். பிறகு அந்த ஐந்தாவது கொலைகாரர் யமுனா என்ற உண்மை தெரிய வருகிறது. மேலும் அவர் கார்த்திக்கின் உண்மையான தந்தையாகிய சிவசங்கரனின் சகோதரி ஆவார்.

ஷ்ரேயா தன்னையறியாமல் கார்த்திக்கை விரும்ப ஆரம்பிக்கிறார். ஆனால் அது தவறு என்று உணர்ந்த அவர் தன்னைக் கட்டுப்படுத்திக் கொள்ள முயல்கிறார். இதை அறிந்த யமுனா, அவரை ஷிவன்யாவிற்கு எதிராகத் தூண்டிவிடுகிறார். இதனால் ஷ்ரேயா ஷிவன்யாவின் எதிரியாக மாறுகிறார். ருத்ரம்மா,சிவன்யாவை தன் சக்தியால் பனிக்கட்டுயில் அடைத்துவிடுகிறார் இதனால் சிவன்யா உரைந்துபோகிறார் சிவன்யாவை கார்த்திக் காப்பாற்றிவிடுகிறார் அப்போதும் சிவன்யா சுமயநினைவை இழந்துவிடுகிறார் கார்த்திக் அப்போது மேலாடையின்றி சிவன்யாவுடன் சேர்ந்துவிடுகிறார் ஷிவன்யா ஹரீஷைக் கொல்லும் போது கார்த்திக் பார்த்து விடுகிறார். இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் ஷிவன்யாவை வெறுக்கத் தொடங்கினார். யமுனாவின் உண்மை முகத்தை அறிந்த பிறகு கார்த்திக், ஷிவன்யாவிற்கு உறுதுணையாக இருந்தார். இருவரும் இணைந்து தங்கள் எதிரிகளிடம் இருந்து நாகமணியை மீட்கின்றனர்.

மகிழ்மதியைச் சேர்ந்தவர்கள் 25 ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டுமே நாகமணியைப் பெற முயற்சிக்க இயலும். எனவே அவர்கள் ஷ்ரேயாவின் உதவியைப் பெற வேண்டும் என்ற நோக்கத்தில் அவரை ஒரு சுவற்றில் அடைத்து வைத்தனர். ஷிவன்யா காளியின் அருளால் உருமாறி யமுனாவைக் கொன்று தன் பழியைத் தீர்க்கிறார். இவ்வாறு முதல் பருவம் நிறைவடைகிறது.

பருவம் 2[தொகு]

மூன்று மாதங்களுக்குப் பிறகு கார்த்திக்-சிவன்யா தம்பதியருக்கு சிவானி என்ற மகள் பிறக்கிறார். பிறகு கார்த்திக்‌ இறந்து விடுகிறார். 25 ஆண்டுகள் கடந்து சென்றன. தற்போது ஷிவன்யா ஒருவேளை தன் மகளும் ஒரு இச்சாதாரி நாகமாக மாறி தன்னைப்போல் துன்பப்படுவாரோ என்று பயப்படுகிறார். 25 வயது முழுமையடையும் முன்பு, ஷிவானிக்கு திருமணமாகி விட்டால் அவரால் நாகினியாக மாற இயலாது. ஆகவே ஷிவானியின் காதலன் ராக்கியுடன் அவரை திருமணம் செய்து வைத்துவிட ஷிவன்யா நினைக்கிறார். 25 ஆண்டுகள் கடந்துவிட்டதால் மகிழ்மதியினரும் ஷ்ரேயாவும் நாகமணியை அடையும் நோக்கத்துடன் மீண்டு வந்தனர். அவந்திகாவின் உதவியால் யமுனாவும் உயிருடன் இருந்தார். யமுனா, ராக்கியின் பெரியம்மா என்பதை ஷிவன்யா அறியவில்லை.

திருமண நாளன்று யமுனா, ஷ்ரேயா, அவந்திகா, கபாலிக்கா, மானவ், அமர், விக்ரம் மற்றும் நிதி ஆகியோர் சேர்ந்து ஷிவன்யாவைக் கொன்றுவிடுகின்றனர். இதனால் திருமணம் நின்றுவிடுகிறது. ஷிவானி அந்த 8 கொலைகாரர்களைப் பழிவாங்குவதற்க்காக இச்சாதாரி நாகினியாக மாறிவிடுகிறார்.சிவானி அமரை பத்ரகாளியம்மன் கோவிலுக்கு வரவலைத்து சிவானி அமரைக் கொன்றுவிடுகிறார்.அவளுக்கு உதவிசெய்ய ரூத்ரன் என்ற இச்சாதாரி நாகம் வருகிறார். பிறகு சிவானி ரூத்ரனின் உதவியுடன் சிவானி கபாலிக்காவை கொன்றுவிடுகிறார்.

ரூத்ரன் சிவானிக்கு மானவைக் கொள்ள உதவிச்செய்கிறார். ரூத்ரனின் உதவியுடன் சிவானி மானாவைக் கொன்றுவிடுகிறார்.

பிறகு சிவானி விக்ரமை கொள்ள முடிவெடுக்கிறார்.ரூத்ரனின் உதவியுடன் சிவானி விக்ரமை கொன்றுவிடுகிறார்.

அதன்பிறகு அவந்திகா ருத்ரனைக் கொன்றுவிடுகிறார். சிவானி அவந்திகாவை தன்னுடைய சக்திகளை இழக்கவைக்கிறார்.பிறகு சிவானி அவந்திகாவின் சாவின் ரகசியத்தை அறிந்துகொண்டு சிவானி அவந்திகாவைக் கொன்றுவிடுகிறார். அதன் பிறகு சிவானியின் சகோதரி கௌதமியை ராக்கியின் சித்தி நிதி கௌதமியைக் கொன்றுவிடுகிறார்.பிறகு சிவானி நிதியைக் கொன்றுவிடுகிறார்.தஷிக வம்சத்தின் நாகராணியான தக்ஷிகாவின் தலையைக்கொண்டு ஷ்ரேயாவை சிலையாக மாற்றி விடுகிறார். இறுதியாக யமுனாவையும் கொன்று விடுகிறார். அப்போது அதை நேரில் கண்டறிந்த ராக்கி அதிர்ச்சி அடைந்தார். அன்று முதல் அவர் ஷிவானியை வெறுக்கத் தொடங்கினார். ஒரு சாமியார் கொடுத்த மருந்தால் யமுனா உயிர் பிழைத்தார்.

பிறகு ராக்கி தக்ஷக் வம்சத்தைச் சேர்ந்த ஒரு இச்சாதாரி நாகம் என்று தெரிய வருகிறது. அவன் அந்த வம்சத்தின் ராஜாவாகவும் இருந்தான். இதனால் அவரது கை பட்டவுடன் சிலையாாக இருந்த ஷ்ரேயா உயிர் பெற்றார். பிறகு ஷ்ரேயா, தக்ஷிகாவைக் கொன்றுவிட்டு தக்ஷிக நாகராணியாக மாறினார். யமுனா, ராக்கியின் தந்தை மற்றும் அவரின் நண்பர்கள் ஆகியோர் கார்த்திக்கைக் கொன்றவர்கள் என்று அறிந்த பிறகு ஷிவானி அவர்களையும் பழிவாங்க முடிவெடுக்கிறார்.

பிறகு ராக்கி, ஷிவானியுடன் சேர்ந்து கொலைகாரர்களைப் பழிவாங்க உதவினார். ஆனால் இது ஷ்ரேயாவிற்குத் தெரியவில்லை. ராக்கியும் ஷ்ரேயாவின் பக்கம் இருப்பது போலவே நடித்து வந்தார். பிறகு ராக்கி மற்றும் ஷிவானி ஆகிய இருவரும் சேர்ந்து ஷ்ரேயா தவிர மற்ற கொலைகாரர்கள் அனைவரையும் கொன்றுவிட்டனர். இறுதியில் அவர்கள் அர்த்தநாரீஸ்வரர் உருவம் கொண்டு ஷ்ரேயாவையும் முழுமையாக அழித்து விட்டனர். பிறகு ராக்கி, திரிசூலத்தால் ஷிவானியைக் கொல்கிறார். அதன் காரணம் தெரியவில்லை. இவ்வாறு விடைதெரியா கேள்வியுடன் இரண்டாம் பருவம் நிறைவடைகிறது.

பருவம் 3[தொகு]

நாகங்களான ருஹியும் விக்ராந்தும் பல வருடங்கள் கழித்து மீண்டும் காதலர்களாக சந்தித்தனர். அப்போது பணக்கார சேகர் சகோதரர்களால் விக்ராந்த் கொல்லப்படுகிறார். அவர்களைப் பழிவாங்க ருஹி உறுதியேற்கிறார். பல மாதங்கள் கழித்து, விஷாகா கண்ணா என்ற நாகினி, பணக்கார முதலீட்டாளராக சேகர் வீட்டிற்குள் நுழைகிறார். அவர் சேகர் சகோதர்களில் ஒருவனைக் கொன்றுவிடுகிறார். மூத்த சகோதரர் மாஹிர், ருஹியின் மறுபிறவியான மீனாவை மணக்கிறார்.

நாகமணியைப் பெறுவதற்காக சதித்திட்டம் செய்து விக்ராந்த் தனது இறப்பைப் போலியாக நிகழ்த்தியது தெரியவருகிறது. சேகரின் மனைவியும் கொல்லப்பட்டு அவருக்கு பதிலாக விக்ராந்தின் தாய் சுமித்ரா என்ற நாகினி இருந்தார். விஷாகாவின் திட்டங்களை அறிந்த விக்ராந்த் அவரை திருமணம் செய்து கொண்டு அவருக்கு உதவ முடிவு செய்கிறார். சுமித்ராவின் நாகத் தீண்டலால் மாஹிர் தனது நினைவுகளை இழக்கிறார். பின்னர் சுமித்ரா மீனாவையும் அவருடைய கூட்டாளிகளையும் கொன்றுவிடுகிறார்.

பல மாதங்களுக்குப் பிறகு, மாஹிரின் அடுத்த திருமணத்திற்காக சுமித்ரா ஏற்பாடு செய்கிறார். இருப்பினும், மணமகள் மாறுவேடத்தில் மீனாவும் அவரது உறவினர்களாக விக்ராந்த் மற்றும் விஷ் ஆகியோரும் இருந்தது தெரியவருகிறது. ருஹியும் மாஹிரும் பின்னர் ஹுக்கும் மற்றும் விஷாகாவின் மகளான தாம்சியால் கொல்லப்படுகிறார்கள். சுமித்ரா நாகமணியைப் பெற்றார்; ஆனால் அது ஷிவாங்கியால் சபிக்கப்பட்டு இருந்ததால் தனது அனைத்து சக்திகளையும் இழந்திருந்தது.

25 வருடங்களுக்குப் பிறகு, மீனாவும் மாஹிரும் ஷ்ராவனி, மிஹிர் என்று மறுபிறவி எடுக்கின்றனர். ஷ்ராவனி நாக சக்திகளையும் தனது முந்தைய வாழ்க்கையைப் பற்றிய நினைவுகளையும் பெற்றதுடன் விக்ராந்த் மற்றும் விஷாகா ஆகியோருடன் இணைகிறாள். நாகமணியில் இருந்து சாபத்தை நீக்க சுமித்ராவும் தாம்சியும் திட்டமிட்டனர். எனவே ஷ்ராவனி நாகமணியைக் காக்க ஷிவானி வரவழைத்தார். ஷிவானி நாகமணியின் சக்திகளை மீட்டெடுத்தார். இரட்டை நாகினியான ஷ்ரேயா, ஷிவானியை கார்த்திக் மற்றும் ராக்கி வடிவத்தில் உருமாறி கொன்றார் என்று தெரியவருகிறது. பிறகு ஷிவானி ஷ்ரேயாவுடன் சண்டையிட்டு அவரை நிலத்தில் அடக்கம் செய்கிறார். கடைசியாக, ஷ்ரேயாவால் ஒரு அடித்தளத்தில் பூட்டப்பட்டிருந்த ராக்கி மற்றும் கார்த்திக் ஆகியோரை ஷிவானி மீட்கிறார். ஷிவன்யாவுடன் ஒன்றுசேர கார்த்திக் இறக்கிறார். பிறகு கார்த்திக் மற்றும் ஷிவன்யா இருவரும் சொர்க்கத்தில் இணைந்தனர். ஷிவாங்கி மற்றும் ராக்கி ஆகிய இருவரும் புதிய வாழ்வைத் தொடங்கினர். ஷ்ராவனி (மீனா), அதீத சக்திகளால் ஆசீர்வதிக்கப்பட்டு ஷ்ரேயா, தாம்சி. சுமித்ரா ஆகியோரைக் கொன்று, மாஹிரை மணக்கிறார்.

பருவம் 4[தொகு]

மானசா என்ற நாகினி தன் பெற்றோரின் எதிர்ப்பை மீறி கேஷவ் என்ற மனிதரை மணக்கிறார். இதனால் அவருக்குப் பிறக்கவுள்ள குழந்தையால் 25 வயது முழுமையடையும் வரை நாக சக்திகளைப் பெற இயலாது என்று அவரது தாய் சபிக்கிறார். பிறகு பாரீக் குடும்பத்தினரால் கேஷவ் கொல்லப்படுகிறார். அவர்களைப் பழிவாங்கும் நோக்கத்துடன் மானசா, தனது மகள் நந்திதாவை வளர்த்தார்.

தனது நாக சக்திகளைப் பெற 25 வயது முழுமையடையும் வரை நந்திதா காத்திருந்தார். ஆனால், நந்திதாவிற்கு பதிலாக பிருந்தா நாக சக்திகளைப் பெறுகிறார். பின்னர் மானசாவின் உண்மையான மகள் பிருந்தா என தெரியவருகிறது. அவர் பிறக்கும்போது நந்திதாவால் இடம் மாற்றபட்டார். பிருந்தா ஒரு நாகினி என்பதை அறிந்த நந்திதா அதை மானசாவிடம் தெரிவிக்காமல் மறைத்தார். மேலும் தனது தாயாருக்காக தான் மட்டுமே பழிவாங்க வேண்டும் என்று நினைத்த அவர் பிருந்தாவை கொலை செய்யவும் முயற்சித்தார், ஆனால் பிருந்தாவும் மானசாவும் சந்தித்து ஒன்றுசேர்ந்தனர். பிறகு பிருந்தா தேவ்வை மணந்தார்.

3ஆம் பருவத்திலிருந்து விஷாகா நாகமணியை அடையும் நோக்கத்துடன் நந்திதாவிற்கு உதவி செய்ய வருகிறார். பிருந்தாவை தேடி தேவ் சிகப்பு கொடி கோயிலுக்கு செல்ல நாகமணியை தேவ் தொட்டதால் அவன் நெற்றிக்குள் அது புகுந்துவிட்டது. விசாகா தேவின் வீட்டில் investor ஆக நுழைகிறார். நுழைந்து பல பிரச்சினைகள் கொண்டு வருகிறார். விசாக மானசாவை கொல்கிறார். தூணில் அடைக்கப்பட்ட நந்திதா வை ஷலாகாவாக மாற்றி தேவுக்கும் மணமுடிக்கிறார். பிருந்தவின் வளர்ப்பு தாயான ஸ்வரா பிருந்தவுக்கு உதவி செய்கிறார்

.

பருவம் 5[தொகு]

இக்கதை சிவன் கோயிலிருந்து தொடங்குகிறது....வில்லத்தனமான கழுகுகள் இறைவனிடம் மனிதனாய் உருமாறும் வரத்தை பெறுகின்றன.....பட்

கதாபாத்திரங்கள்[தொகு]

முன்னணி கதாபாத்திரங்கள்[தொகு]

நடிகர்/நடிகை கதாபாத்திரம் சுருக்கம் நிலை தோற்றங்கள்
பருவம் 1 பருவம் 2 பருவம் 3 பருவம் 4 பருவம் 5
மௌனி ராய் ஷிவன்யா கார்த்திக் சங்கரன் சேஷநாக வம்சத்தைச் சேர்ந்த நாகினி, கார்த்திக்கின் மனைவி, ஷிவானியின் தாய், ராக்கியின் மாமியார் இறப்பு முன்னணி துணை சிறப்பு
ஷிவானி ராக்கி பிரதாப் சிங் சேஷநாக வம்சத்தைச் சேர்ந்த நாகினி, பருவம்-3இல் மகாநாகராணி ஆனவர், ஷிவன்யா மற்றும் கார்த்திக்கின் மகள், ராக்கியின் மனைவி உயிருடன் முன்னணி சிறப்பு
அர்ஜூன் பிஜ்லானி கார்த்திக் சங்கரன் அரசன் சிவசங்கரனின் மகன், சூரியவம்ச இளவரசன், யமுனா மற்றும் ஹரீஷின் வளர்ப்பு மகன், ஷிவன்யாவின் கணவர், ஷிவானியின் தந்தை, ராக்கியின் மாமனார் இறப்பு முன்னணி சிறப்பு
அதா கான் ஷ்ரேயா சேஷநாக வம்சத்தைச் சேர்ந்த நாகினி, ஷிவன்யாவின் ஒன்றுவிட்ட சகோதரி, ஷிவாங்கியின் அத்தை. தக்ஷிக நாகராணியாகவும் (பருவம்-2) இரட்டை நாகினியாகவும் (பருவம்-3) இருந்தார். ஷிவன்யாவைக் கொன்ற 8 கொலைகாரர்களில் ஒருவர் (பருவம்-2) . இறப்பு முன்னணி சிறப்பு சிறப்பு
சுதா சந்திரன் யாமினி சங்கரன் ஜெயராஜ்
சிவசங்கரனின் தங்கை, சூரியவம்ச இளவரசி, ஹரீஷின் மனைவி, கார்த்திக்கின் அத்தையும் வளர்ப்புத் தாயும். ராக்கியின் பெரியம்மா. ஷிவன்யாவின் பெற்றோரைக் கொன்ற 5 கொலைகாரர்களில் ஒருவரும் (பருவம்-1) ஷிவன்யாவைக் கொன்ற 8 கொலைகாரர்களில் ஒருவரும் (பருவம்-2). இறப்பு முன்னணி சிறப்பு
கரண்வீர் போரா ராக்கி பிரதாப் சிங் தக்ஷிக வம்சத்தைச் சேர்ந்த நாகம், ஷிவானியின் கணவர், உயிருடன் முன்னணி சிறப்பு
கின்ஷுக் மஹாஜன் ருத்ரா சேஷநாக வம்சத்தைச் சேர்ந்த நாகம், ஷிவானியின் நண்பர் இறப்பு முன்னணி
சுர்பி ஜோதி மீனா மாஹிர் சேகர் சேஷநாக வம்சத்தின் நாகினியும் நாகராணியும், ருஹியின் மறுபிறவி, மாஹிரின் மனைவி இறப்பு முன்னணி
ஷ்ராவனி மிஹிர் சிப்பி சேஷநாக வம்சத்தின் நாகினியும் நாகராணியும், மீனாவின் மறுபிறவி, மாஹிரின் மனைவி உயிருடன் முன்னணி சிறப்பு
பியர்ல் வி பூரி மாஹிர் சேகர் ஆன்டி மற்றும் சுமித்ராவின் மகன், நாகினி சுமித்ராவின் வளர்ப்பு மகன், மீனாவின் கணவர் இறப்பு முன்னணி
மிஹிர் சிப்பி மாஹிரின் மறுபிறவி, ஷ்ராவனியின் கணவர் உயிருடன் முன்னணி
அனிதா ஹசனந்தனி விஷாகா என்ற விஷ் கால் குத் வம்சத்தைச் சேர்ந்த நாகினி, விக்ராந்தின் மனைவி, ருஹி/மீனா/ஷ்ராவனி ஆகியோரின் நண்பர் உயிருடன் முன்னணி
ரஜத் டோகஸ் விக்ராந்த் நிதோக் வம்ச நாகம், சுமித்ராவின் மகன், விஷாகாவின் கணவர் இறப்பு முன்னணி
ரக்ஷதா கான் சுமித்ரா நாகினியும் நிதோக் வம்சத்தின் நாகராணியும். விக்ராந்த் மற்றும் யுவராஜின் தாய், ஆன்டி சேகரின் போலி மனைவி, மாஹிரின் வளர்ப்புத் தாய் இறப்பு முன்னணி
சயந்தனி கோஷ் மானசா சேஷநாக வம்சத்தைச் சேர்ந்த நாக இளவரசி, பிருந்தாவின் தாய், நந்திதாவின் வளர்ப்புத் தாய் இறப்பு முன்னணி
நியா ஷர்மா பிருந்தா தேவ் பாரீக் சேஷநாக வம்சத்தைச் சேர்ந்த நாகினி, மானசா மற்றும் கேஷவ்வின் மகள், பண்டிதர் மற்றும் ஸ்வராவின் வளர்ப்பு மகள்,தேவ்வின் முதல் மனைவி உயிருடன் முன்னணி சிறப்பு
விஜயேந்திர குமேரியா தேவ் பாரீக் ஆகாஷ் மற்றும் விருஷாலியின் மகன், பிருந்தாவின் கணவர் உயிருடன் முன்னணி சிறப்பு
ஜாஸ்மின் பசின் நந்திதா மானசாவின் வளர்ப்பு மகள், விஷாகாவால் ஒரு தூனில் அடைக்கப்பட்டார் உயிருடன் சிறப்பு

ஆதாரங்கள்[தொகு]

  1. Voot"நாகினி 2 தொடரின் பகுதிகள்- வூட் செயலியில் காண்க", www.voot.com (in ஆங்கிலம்), 2018-05-29 அன்று பார்க்கப்பட்டது
  2. Voot, "நாகினி-3 தொடரின் பகுதிகள்- வூட் செயலியில் காண்க", www.voot.com (in ஆங்கிலம்), 2018-06-19 அன்று பார்க்கப்பட்டது
"https://ta.wikipedia.org/w/index.php?title=நாகினி&oldid=3059208" இருந்து மீள்விக்கப்பட்டது