சுதா சந்திரன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சுதா சந்திரன்
இரவீந்திரநாத் தாகூரின் 150-வது பிறந்த நாள் விழாவையொட்டி நடைபெற்ற கலைநிகழ்ச்சியில் சுதா சந்திரன்.
பிறப்புசெப்டம்பர் 27, 1965 (1965-09-27) (அகவை 58)
மும்பை,
பணிபரதநாட்டியக் கலைஞர்
செயற்பாட்டுக்
காலம்
1971 - நடப்பு

சுதா சந்திரன் (பிறப்பு: செப்டம்பர் 27, 1965) ஒரு இந்திய பரதநாட்டியக் கலைஞர் மற்றும் நடிகை ஆவார்.

இந்திய மொழி திரைப்படங்களிலும், சின்னத் திரை தொடர்களிலும் இவர் நடித்துள்ளார்.

மும்பையிலுள்ள மித்பாய் கல்லூரியில் பி.ஏ. பட்டப்படிப்பையும், அதன் பிறகு எம்.ஏ. பொருளியல் படிப்பையும் முடித்து பட்டம் பெற்றார்.

1981-ம் ஆண்டு புனித யாத்திரை மேற்கொண்டபோது இவர் பயணம் செய்த வாகனம் திருச்சிராப்பள்ளி அருகே விபத்துக்குள்ளானது. காயமடைந்த சுதா சந்திரனின் வலது காலின் ஒரு பகுதி அறுவை சிகிச்சையின் மூலம் நீக்கம் செய்யப்பட வேண்டியிருந்தது. இருப்பினும் அவர் நடனக் கலையை கைவிடவில்லை. விபத்தைத் தொடர்ந்து காலினை இழந்த பின், ஜெய்பூர் செயற்கைக் காலை பொருத்திய பிறகு இவர் தொடர்ந்து நடன நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார். ஐரோப்பா, கனடா, மத்திய கிழக்கு ஆசிய நாடுகளில் நடன நிகழ்ச்சிகளை நடத்தியுள்ளார். உலகின் பல்வேறு நகரங்களுக்கு சென்று வந்திருந்தாலும் தன்னை கவர்ந்த அமைதியான நகரம் சென்னை என்றார் சுதா சந்திரன். ([1]).

திரைப்படத் துறையில் சுதா சந்திரன்[தொகு]

1984-ம் ஆண்டு வெளி வந்த மயூரி என்ற தெலுங்கு திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார். 1986-ம் ஆண்டு இந்த திரைப்படம் நாச்செ மயூரி என்ற பெயரில் இந்தி மொழியில் ரீ மேக் செய்யப்பட்டது. மயூரி திரைப்படத்திற்காக 1986-ம் ஆண்டு தேசிய திரைப்பட விருதுகளில் சிறப்பு ஜூரி விருதை பெற்றுள்ளார்.

தமிழில் 1986 ஆம் ஆண்டு வெளியான சர்வம் சக்திமயம் என்ற திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்தார். விஷால் நடித்த சத்யம் மற்றும் ஆதிபகவன் உட்பட பல்வேறு படங்களில் நடித்துள்ளார். இது தவிர பல்வேறு சின்னத் திரை தொடர்களிலும் நடித்துள்ளார். இவர் இந்தியில் புகழ்பெற்ற நாகின் என்ற தொடரில் யாமினி என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

மேற்கோள்கள்[தொகு]

  1. "அமைதியான அழகிய சென்னை நகரம்". Archived from the original on 2012-11-08. பார்க்கப்பட்ட நாள் 2013-01-31.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சுதா_சந்திரன்&oldid=3554987" இலிருந்து மீள்விக்கப்பட்டது