நந்த் கர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நந்த் கர்
உருவாக்கம்2015
வகைஇலாப நோக்கற்ற அமைப்பு
தலைமையகம்புது தில்லி
தலைமையகம்
முக்கிய நபர்கள்
அனில் அகர்வால் (தலைவர், வேதாந்தாக் குழுமம்)
இரித்து ஜிங்கான் (முதன்மைச் செயல் அலுவலர்)
பிரியா அகர்வால் (நிர்வாகமற்ற இயக்குனர்)
தாய் அமைப்பு
அனில் அகர்வால் அறக்கட்டளை
வலைத்தளம்nandghar.org.in

நந்த் கர் (Nand Ghar) என்பது வேதாந்தா குழுமத்தின் தொண்டுப் பிரிவான அனில் அகர்வால் அறக்கட்டளையின் சமூக முயற்சியாகும்.[1] [2] [3] 13.7 லட்சம் அங்கன்வாடி மையங்களில் உள்ள 7 கோடி குழந்தைகள் மற்றும் 2 கோடி பெண்களின் வாழ்க்கையை மேம்படுத்துவதற்கு, இந்தியா முழுவதும் உள்ள பெண்களுக்கு இணையவழிக் கல்வி, ஆரம்ப சுகாதாரம், ஊட்டச்சத்து தேவைகள் மற்றும் பொருளாதார திறன் பயிற்சிகளை வழங்குவது என்பது இந்த திட்டத்தின் நோக்கமாக உள்ளது. [4] [5] [6] [7] ஒருங்கிணைந்த குழந்தைகள் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் செயல்படும் அங்கன்வாடிகளை நந்த் கர் திட்டம் நவீனமயமாக்குகிறது. இதில் உள்கட்டமைப்பு மேம்பாடுகளும் அடங்கும். [8] [9]

நந்த் கர் என்பது வேதாந்தா குழுமம் மற்றும் மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் [6] ஆகியவற்றிக்கிடையே பெண்கள் மற்றும் குழந்தைகளின் மேம்பாட்டிற்காக இந்தியா முழுவதும் 4000 நவீன அங்கன்வாடிகளை நந்த் கர்களாக உருவாக்குவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. [10] [8] [9]

முதல் நந்த் கர் ஏப்ரல் 2016 இல் வாரணாசியின் நாகேபூர் மாவட்டத்தில் நிறுவப்பட்டது.[11] [12] இந்த திட்டத்தின் கீழ் முதல் மையத்தை அப்போதைய ஜவுளித்துறை அமைச்சர் இசுமிருதி இரானி திறந்து வைத்தார்.[13]

வரலாறு[தொகு]

ஒருங்கிணைந்த குழந்தைகள் மேம்பாட்டு சேவைகள் திட்டம் உலகின் மிகப்பெரிய சமூகம் சார்ந்த திட்டமாகும். இது ஆறு வயது வரையிலான குழந்தைகள், கர்ப்பிணிகள் மற்றும் பாலூட்டும் தாய்மார்கள் மற்றும் பருவப் பெண்களுக்கு சேவை செய்கிறது. இது அக்டோபர் 2, 1975 இல் தொடங்கப்பட்டது. இது 47 ஆண்டுகள் செயல்பாட்டை நிறைவு செய்துள்ளது. 0-6 வயதுடைய குழந்தைகளின் ஊட்டச்சத்து மற்றும் சுகாதார நிலையை மேம்படுத்துவதும், சரியான உளவியல், உடல் மற்றும் சமூக வளர்ச்சிக்கான அடிப்படையை உருவாக்குவதும் இதன் நோக்கம் ஆகும். ஊட்டச்சத்து மற்றும் சுகாதாரக் கல்வி மூலம் தனது குழந்தையின் அடிப்படை உடல்நலம் மற்றும் ஊட்டச்சத்து தேவைகளைப் பராமரிப்பதற்கான தாயின் திறனை மேம்படுத்துவதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது. [14] [15]

கூட்டு முயற்சி[தொகு]

நந்த் கர் என்பது வேதாந்தா மற்றும் மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகத்தின் கூட்டு நிறுவனமாகும் பில் & மெலிண்டா கேட்சு அறக்கட்டளை பின்னர் கூட்டாண்மையில் நுழைந்தது. [16]

நந்த் கர் ஒரு முழுமையான அணுகுமுறை மற்றும் ஒட்டுமொத்த வளர்ச்சி வாய்ப்புகளுடன் குழந்தைகளுக்கு உதவவும் ஆதரவளிக்கவும் சர்வதேச தன்னார்வலர்களை அழைக்க உலகளாவிய தன்னார்வத் திட்டத்தையும் தொடங்கியது. இந்த உலகளாவிய தன்னார்வத் திட்டம் 22 ஜூலை 2022 அன்று ஏஐஐ குழுமம் மற்றும் நந்த் கர் இடையே கையெழுத்திடப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் விளைவாகும்.

இருப்பு மற்றும் அளவு[தொகு]

தற்போது, இராசத்தான், உத்தரப் பிரதேசம்,[17] மத்தியப் பிரதேசம், கருநாடகம், சத்தீசுகர், சார்க்கண்டு, [18] குசராத்து, கோவா, அசாம், இமாச்சலப் பிரதேசம், பஞ்சாப், அரியானா மற்றும் ஒடிசா [19] [20] [21] போன்ற இந்தியாவில் உள்ள 13 மாநிலங்களில் 3000க்கும் மேற்பட்ட நந்த் கர்கள் உள்ளன.

விருதுகள் மற்றும் அங்கீகாரம்[தொகு]

  • 2021இல் நடந்த இந்திய பெறுநிறுவனங்களில் சமூகப் பொறுப்புணர்வு உச்சிமாநாட்டில் ஆண்டின் விருது வழங்கப்பட்டது [22]
  • வேதாந்தா குழுமத்தின் முக்கிய சமூகப் பொறுப்புணர்வு முயற்சியான 'நந்த் கருக்கு' 2021 ஆம் ஆண்டில் குழந்தை வளர்ச்சிக்கான “பெறுநிறுவனங்களில் சமூகப் பொறுப்புணர்வு ஒளிரும் நட்சத்திரம் விருது” வழங்கப்பட்டது. [23]
  • இராஜஸ்தான் அரசு [24] 2021இல், இந்த நிறுவனத்தை, “இந்திரா மகிளா சக்தி ப்ரோட்சஹான் ஏவம் சம்மன் யோஜனா”வின் கீழ் சிறந்த சமூகப் பொறுப்பு (CSR) நிறுவன முயற்சியாக அங்கீகரித்துள்ளது.

2021, அனைத்துலக பெண்கள் நாளில், நந்த் கர் அதன் தொலை மருத்துவச் சேவை மாதிரியை அறிமுகப்படுத்தியது. இதை மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சர் இசுமிருதி இரானி திறந்து வைத்தார். [25]

தொழில்நுட்ப ஆதரவு மற்றும் தொலை மருத்துவச் சேவை சுகாதார மாதிரியின் உதவியுடன், இது இளநிலை மருத்துவர்கள் (இளநிலை மருத்துவம் மற்றும் அறுவையியல்) மற்றும் குழந்தை மருத்துவர்கள் மற்றும் மகளிர் மருத்துவ நிபுணர்கள் போன்ற நிபுணர்களை சமூக உறுப்பினர்களுடன் இணைத்தது. சிறப்பு ஆலோசனை, அடிப்படை ஆக்கிரமிப்பு அல்லாத சோதனைகள் மற்றும் சமூக உறுப்பினர்களுக்கு இலவச மருந்துகளுடன் நந்த் கர்களுக்குச் செல்லும் நடமாடும் மருத்துவ ஊர்திகளின் வசதியையும் இது வழங்கியது. [26]

தொற்றுநோய்களின் போது, நந்த் கர் வாட்சப்பில் உள்ளடக்கத்தை வெளியிடுவதன் மூலமும், கற்றலுக்கான மாற்று முறையாக ஊடாடும் குரல் பதிவு (IVRS) மூலமாகவும் குழந்தைகளுக்கு கல்வியை வழங்கியது. [27] [28] இந்த முயற்சிகள் மூலம், கிராமப்புறங்களில் உள்ள 55,000+ குழந்தைகளுக்கு நந்த் கர் மின்-கற்றல் உள்ளடக்கத்தை வழங்கியது. நந்த் கரின் மின் உள்ளடக்கம் இராசத்தானிலுள்ள 62000 அங்கன்வாடிகளால் ஏற்றுக்கொள்ளப்பட்டது.[29]

நந்த் கர் பெண்கள் 1.5 லட்சம் முகமூடிகளை தைத்தனர். அவை கோவிட்-19 பெருந்தொற்றிலிருந்து அவர்களைப் பாதுகாக்க சமூக உறுப்பினர்களிடையே விநியோகிக்கப்பட்டன. [30]

மேற்கோள்கள்[தொகு]

  1. "UP government & Vedanta join forces to wipe out malnourishment" (in ஆங்கிலம்). 2022-06-20. பார்க்கப்பட்ட நாள் 2022-09-28.
  2. "Nand Ghar To Combat Malnourishment Among 3k Children | Varanasi News - Times of India" (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-09-28.
  3. "CSR: Union Minister Anurag Thakur Inaugurated Vedanta's 2500th Nand Ghar At Hamirpur" (in அமெரிக்க ஆங்கிலம்). 2021-10-04. பார்க்கப்பட்ட நாள் 2022-09-28.
  4. "Vedanta Chairman's dream project Nand Ghar achieves a significant milestone, the 3000 Mark!" (in அமெரிக்க ஆங்கிலம்). 2022-01-14. பார்க்கப்பட்ட நாள் 2022-09-28.
  5. Dilipkumar. "Union minister Smriti Irani launches Vedanta's Telemedicine Program". https://economictimes.indiatimes.com/industry/healthcare/biotech/healthcare/union-minister-smriti-irani-launches-vedantas-telemedicine-program/articleshow/81513865.cms?from=mdr. 
  6. 6.0 6.1 "Anil Agarwal Foundation Ensure Education For Children During Pandemic" (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-09-28.
  7. "Corporate hand in Uttar Pradesh anganwadi upgrade". பார்க்கப்பட்ட நாள் 2021-11-25.
  8. 8.0 8.1 "Sector Report Women Child Development" (PDF).
  9. 9.0 9.1 "Nand Ghar project achieves a significant milestone, the 3000 Mark!" (in அமெரிக்க ஆங்கிலம்). 2022-01-14. பார்க்கப்பட்ட நாள் 2022-09-28.
  10. (in en-IN). 
  11. Manish, Sai (2022-03-07). "Perks, pitfalls of being Narendra Modi's adopted villages". www.business-standard.com (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-09-28.
  12. "Irani to attend Ambedkar event at village adopted by PM | Varanasi News - Times of India". The Times of India (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-09-28.
  13. Bhatia, Vimal. "Barmer to welcome 50 new-age Nand Ghars | India News - Times of India". The Times of India (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-09-28.
  14. "Sector Report Women Child Development" (PDF).
  15. "BEST PRACTICES IN ANGANWADI SERVICES SCHEME UNDER UMBRELLA ICDS" (PDF).
  16. Desk, India com News. "Project Nand Ghar: Anil Agarwal Foundation Partners With Bill & Melinda Gates Foundation to Improve Nutrition in India | India.com". www.india.com (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-11-25.
  17. "Corporate hand in Uttar Pradesh anganwadi upgrade". www.telegraphindia.com. பார்க்கப்பட்ட நாள் 2021-11-25.
  18. "Jharkhand CM Hemant Soren inaugurates 50 Nand Ghars in Bokaro". Free Press Journal (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-11-25.
  19. "Vedanta Chairman's dream project Nand Ghar achieves a significant milestone, the 3000 Mark!". India Education (in அமெரிக்க ஆங்கிலம்). 2022-01-14. பார்க்கப்பட்ட நாள் 2022-09-28.
  20. OdAdmin (2020-09-08). "Vedanta's Nand Ghar to collaborate with Govt. to promote 'Kuposhan mukt Bharat' which aims to fight malnutrition in children". Odisha News | Odisha Breaking News | Latest Odisha News (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-11-25.
  21. "Nand Ghar project achieves a significant milestone, the 3000 Mark!". India CSR (in அமெரிக்க ஆங்கிலம்). 2022-01-14. பார்க்கப்பட்ட நாள் 2022-09-28.
  22. "Vedanta Group Bags Top Awards At The India Csr Summit 2021". https://www.apnnews.com/vedanta-group-bags-top-awards-at-the-india-csr-summit-2021/. 
  23. "Vedanta Nand Ghar recognised for impact in community". India CSR (in அமெரிக்க ஆங்கிலம்). 2021-02-23. பார்க்கப்பட்ட நாள் 2022-09-28.
  24. "Vedanta Nandghar declared as a best CSR initiative by Rajasthan Govt". India CSR (in அமெரிக்க ஆங்கிலம்). 2021-04-01. பார்க்கப்பட்ட நாள் 2022-09-28.
  25. Dilipkumar, Bhavya. "Union minister Smriti Irani launches Vedanta's Telemedicine Program". The Economic Times. https://economictimes.indiatimes.com/industry/healthcare/biotech/healthcare/union-minister-smriti-irani-launches-vedantas-telemedicine-program/articleshow/81513865.cms?from=mdr. 
  26. "Response to COVID-19 by the Anganwadi ecosystem in India" (PDF).
  27. "Vedanta's Nand Ghar project rolls out digital e-learning modules for children in villages of Odisha, UP and Rajasthan". Odisha Diary (in அமெரிக்க ஆங்கிலம்). 2020-06-24. பார்க்கப்பட்ட நாள் 2022-09-28.
  28. "Anil Agarwal Foundation Ensure Education For Children During Pandemic". BW Education (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-09-28.
  29. "Response to COVID-19 by the Anganwadi ecosystem in India" (PDF).
  30. Imchen, Atula (2021-11-11). "Vedanta - Transforming Rural India Through Nand Ghar". CSR Mandate (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-09-28.
"https://ta.wikipedia.org/w/index.php?title=நந்த்_கர்&oldid=3915869" இலிருந்து மீள்விக்கப்பட்டது