த டென் கமண்ட்மெண்ட்ஸ் (1956 திரைப்படம்)
த டென் கமண்ட்மெண்ட்ஸ் | |
---|---|
மக்காரியோ கோமேஸ் குயிபஸின் அசல் திரையரங்க வெளியீட்டு சுவரொட்டி[1] | |
இயக்கம் | செசில் பி டிமில்லே |
தயாரிப்பு | செசில் பி. டிமில்லே |
மூலக்கதை | டோரோத்தி கிளார்க் வில்சன் எழுதிய "பிரின்ஸ் ஆஃப் எகிப்து" ஜே. ஹெச். இன்கிரகாம் எழுதிய "பில்லர் ஆப் பயர்" ஏ. இ. சவுத்தன் எழுதிய "ஆன் ஈகிள்'ஸ் விங்ஸ்" விடுதலைப் பயணம் (நூல்) |
திரைக்கதை | ஏனியஸ் மெக்கன்சி ஜெஸ்ஸி எல். லஸ்கி ஜூனியர் ஜாக் கேரிஸ் பிரெடரிக் எம். பிராங்க் |
கதைசொல்லி | செசில் பி. டிமில்லே |
இசை | எல்மெர் பெர்ன்ஸ்டைன் |
நடிப்பு | சார்ல்டன் ஹெஸ்டன் யோல் பிரைன்னர் அன்னே பாக்ஸ்டர் எட்வர்டு ஜி. ராபின்சன் இவோன் டி கார்லோ டெப்ரா பஜட் ஜான் டெரக் |
ஒளிப்பதிவு | லோயல் கிரிக்ஸ் |
படத்தொகுப்பு | அன்னே பவுச்சன்ஸ் |
கலையகம் | செசில் பி. டிமில்லே புரோடக்சன் |
விநியோகம் | பாராமவுண்ட் பிக்சர்ஸ் |
வெளியீடு | நவம்பர் 8, 1956(US) |
ஓட்டம் | 3:40 மணி நேரம்[2] இடைவெளியுடன் |
நாடு | ஐக்கிய அமெரிக்கா |
மொழி | ஆங்கிலம் |
ஆக்கச்செலவு | ஐஅ$13 மில்லியன் (₹93 கோடி)[3] |
மொத்த வருவாய் | ஐஅ$122.7 மில்லியன் (₹877.5 கோடி)</ref>[4] (ஆரம்ப வெளியீடு) |
த டென் கமண்ட்மெண்ட்ஸ் என்பது 1956 ஆம் ஆண்டு வெளிவந்த அமெரிக்க மத காவிய நாடக திரைப்படமாகும். இதை செசில் பி. டிமில்லே என்பவர் இயக்கி தொகுத்து வழங்கினார். இந்த திரைப்படத்தை பாரமவுண்ட் பிக்சர்ஸ் வெளியிட்டது. இது டோரோத்தி கிளார்க் வில்சன் எழுதிய பிரின்ஸ் ஆப் எகிப்து, ஜே. எச். இன்கிரகாம் எழுதிய பில்லர் ஆப் பயர், எ. இ. சவுத்தன் எழுதிய ஆன் ஈகில்ஸ் விங்ஸ், மற்றும் த புக் ஆப் எக்சோடஸ் ஆகிய நூல்களை அடிப்படையாகக் கொண்டதாகும். த டென் கமண்ட்மெண்ட்ஸ் திரைப்படமானது விவிலியம் கதையான மோசசின் வாழ்க்கையை நாடக வடிவில் கூறியது. மோசஸ் ஒரு தத்தெடுக்கப்பட்ட எகிப்திய இளவரசர் ஆவார். அடிமைப்படுத்தப்பட்ட எபிரேயர்களை எகிப்தியர்களிடமிருந்து காப்பாற்றி சினாய் மலைக்கு தலைமையேற்று செல்கிறார். அங்கு கடவுளிடமிருந்து பத்து கட்டளைகளை பெறுகிறார். இந்த திரைப்படத்தின் கதாநாயகனாக சார்ல்டன் ஹெஸ்டன் நடித்தார். யோல் பிரின்னர் ரமேசசாகவும், அன்னே பாக்ஸ்டர் நெப்ரெத்திரியாகவும், எட்வர்டு ஜி. ராபின்சன் டதனாகவும், இவோன் டி கார்லோ சிப்போராவாகவும், டெப்ரா பஜட் லிலியாவாகவும், ஜான் டெரக் ஜோசுவாவாகவும், சர் செட்ரிக் ஹாட்விகே சேத்தியாகவும், நினா போச் பிதியாவாகவும், மார்த்தா ஸ்காட் யோசபெலாகவும், ஜூடித் ஆண்டர்சன் மெம்னெட்டாகவும் மற்றும் வின்சன்ட் பிரைஸ் பகாவாகவும் நடித்திருந்தனர்.
இந்த திரைப்படம் எகிப்து, சினாய் மலை மற்றும் சினாய் தீபகற்பம் ஆகிய இடங்களில் எடுக்கப்பட்டது. இது டிமில்லேயின் கடைசி மற்றும் மிக வெற்றிகரமான வேலைப்பாடாகும். இதே பெயரில் 1923 ஆம் ஆண்டில் வெளிவந்த படத்தின் பகுதி மறு ஆக்கமாக இந்த திரைப்படம் இருந்தது. ஒரு படத்திற்கான எக்காலத்திலும் உருவாக்கப்பட்ட மிகப்பெரிய செட் இந்த படத்திற்கு அமைக்கப்பட்டது. இந்த திரைப்படம் ஐக்கிய அமெரிக்காவில் நவம்பர் 8, 1956 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது. இந்தத் திரைப்படம் வெளியான நேரத்தில் இது தான் அதிக பொருட்செலவில் எடுக்கப்பட்ட திரைப்படமாக இருந்தது.
உசாத்துணை
[தொகு]- ↑ "Muere Mac, el mítico cartelista de 'Doctor Zhivago' y 'Psicosis'". El Periódico de Catalunya. July 21, 2018 இம் மூலத்தில் இருந்து July 27, 2018 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20180727181224/https://www.elperiodico.com/es/ocio-y-cultura/20180721/muere-mac-macario-gomez-cartelista-doctor-zhivago-quo-vadis-6955323. பார்த்த நாள்: August 18, 2018.
- ↑ Louvish 2008, ப. 481.
- ↑ Reported budgets:
- Hall & Neale 2010, ப. 159. "... a record $13,266,491".
- Birchard 2004, ch. 70. The Ten Commandments. "$13,272,381".
- ↑ Block & Wilson 2010, ப. 327.