உள்ளடக்கத்துக்குச் செல்

த. எ. பாட்டீல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
த. எ. பாட்டீல்
மேற்கு வங்காள ஆளுநர்
(கூடுதல் பொறுப்பு)
பதவியில்
3 சூலை 2014  17 சூலை 2014
முன்னையவர்எம். கே. நாராயணன்
பின்னவர்கேசரிநாத் திரிபாதி
பீகார் ஆளுநர்
பதவியில்
22 மார்ச் 2013[1]  26 நவம்பர் 2014
முன்னையவர்தேவானந்த் கோன்வார்
பின்னவர்கேசரிநாத் திரிபாதி
திரிபுரா ஆளுநர்
பதவியில்
27 நவம்பர் 2009  21 மார்ச் 2013
முன்னையவர்கம்லா பெனிவால்
பின்னவர்தேவானந்த் கோன்வார்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு
தயாந்தியோ எசுவந்தராவ் பாட்டீல்

(1935-10-22)22 அக்டோபர் 1935
அம்பாப், கோல்ஹாப்பூர், பம்பாய் மாகாணம், பிரித்தானியாவின் இந்தியப் பேரரசு (தற்பொழுது மகராட்டிரம், இந்தியா)
இறப்பு4 ஆகத்து 2026(2026-08-04) (அகவை 90)
கோலாப்பூர், மகாராட்டிரம், இந்தியா
அரசியல் கட்சிதேசியவாத காங்கிரசு கட்சி
துணைவர்(கள்)சாந்தாதேவி, புசுபலதா
பிள்ளைகள்5 (விஜய் த . பாட்டீல், மருத்துவர் அஜென்கியா பாட்டீல், சட்டெஜ் பாட்டீல், நந்திதா பால்செக்தர், மருத்துவர் சஞ்சய் த. எ. பாட்டீல்)
முன்னாள் மாணவர்அல்போன்சா பள்ளி, கோல்ஹாப்பூர்
விருதுகள்பத்மசிறீ
இணையத்தளம்Official Website

தயாந்தியோ எசுவந்தராவ் பாட்டீல் (Dnyandeo Yashwantrao Patil, 22 அக்டோபர் 1935 – 4 ஆகத்து 2026) என்பவர் இந்திய அரசியல்வாதி ஆவார். இவர் 2012 மே 29 முதல் 2014 நவம்பர் 26 வரை கிழக்கு இந்தியாவின் பீகார் மாநிலத்தின் ஆளுநராக இருந்தார். இவர் ஒரு கல்வியாளரும் மகாராட்டிரா மாநில இந்தியத் தேசிய காங்கிரசின் தலைவராக இருந்தார். இவர் மேற்கு வங்க ஆளுநராக (கூடுதல் பொறுப்பு) நியமிக்கப்பட்டார்.[2]

தொடக்ககால வாழ்க்கை

[தொகு]

மகாராட்டிரா மாநிலம், கோல்ஹாப்பூர் மாவட்டத்தில் உள்ள அம்பாப் கிராமத்தில் 1935 அக்டோபர் 22 அன்று பிறந்தார்.[3]

கல்வி நிறுவனங்கள்

[தொகு]

பல கல்வி நிறுவனங்கள் த. எ. பாட்டீலால் நிறுவப்பட்டன, அவற்றில் ஒரு சில:

  • டாக்டர். த. எ. பாட்டீல் வித்யாபீத், புனே
  • பத்மசிறீ ரீ த. எ. பாட்டீல் வித்யாபீத், நவி மும்பை
  • டாக்டர் த. எ. பாட்டீல் மருத்துவக் கல்லூரி நவி மும்பை
  • த. எ..பாட்டீல் கல்விச் சங்கம், கோலாப்பூர்
  • டாக்டர் த. எ. பாட்டீல் விளையாட்டு அகாதமி
  • புனே, டாக்டர் த. எ. பாட்டீல் அறிவு நகரம்
  • டாக்டர். த. எ. பாட்டீல் பன்னாட்டுப் பள்ளி, மும்பை
  • டாக்டர் த. எ. பாட்டீல் சர்வதேச பள்ளி, காங்க்ரா (இமாச்சலப் பிரதேசம்)

விருது

[தொகு]

இவரது சமூகப் பணிக்காக இந்திய அரசு 1991-இல் பத்மசிறீ விருதினை வழங்கியது.[4]

அரசியல்

[தொகு]

பாட்டீல் 1957-இல் கோலாப்பூர் நகர்மன்ற காங்கிரசு வேட்பாளராகப் போட்டியிட்டுத் தேர்ந்தெடுக்கப்பட்டார். நகராட்சித் தலைவராக 1962 வரை பதவியிலிருந்தார். 1967 முதல் 1978 வரை மகாராட்டிர சட்டமன்ற உறுப்பினராகப் பதவி வகித்தார். 1967 மற்றும் 1972 ஆகிய இரண்டு தேர்தல்களிலும், இவர் பன்காலா சட்டப் பேரவை தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்றார்.[5][6] இவர் 2009 நவம்பர் 21 அன்று திரிபுரா மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டார்.[7] பின்னர் 2012 மார்ச் 9 அன்று பீகார் ஆளுநராக நியமிக்கப்பட்டார்.

இறப்பு

[தொகு]

பாட்டீல் நீண்ட காலமாக நோயினால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், 2026 ஆகத்து 4 அன்று தனது 90-ஆவது அகவையில் மகாராட்டிராவின் கோலாப்பூரில் உள்ள அவரது இல்லத்தில் காலமானார்.[8][9]

மேற்கோள்கள்

[தொகு]
  1. PTI (22 March 2013). "D.Y Patil sworn in as Governor of Bihar" (in en). The Hindu Business Line. http://www.thehindubusinessline.com/news/national/dy-patil-sworn-in-as-governor-of-bihar/article4538321.ece.
  2. PTI (3 July 2014). "Dr D Y Patil appointed West Bengal's acting Governor". The Economic Times. https://economictimes.indiatimes.com/news/politics-and-nation/dr-d-y-patil-appointed-west-bengals-acting-governor/articleshow/37718348.cms.
  3. "Biography of Padmashree Dr. D.Y. Patil". Padmashree Dr. D.Y. Patil University website. Archived from the original on 13 December 2009. Retrieved 25 November 2009.
  4. "Padma Awards" (PDF). Ministry of Home Affairs, Government of India. 2015. Archived from the original (PDF) on 15 November 2014. Retrieved 21 July 2015.
  5. "Statistical Report on General Election 1967 to the Legilsative Assembly of Maharashtra" (PDF). இந்தியத் தேர்தல் ஆணையம் website. p. 10. Retrieved 27 November 2009.
  6. "Key Highights of General Election 1972 to the Legilsative Assembly of Maharashtra" (PDF). Election Commission of India website. p. 10. Retrieved 25 November 2009.
  7. "President Appoints Governors". The President of India website. 21 November 2010. Retrieved 25 November 2009.
  8. "DY Patil: महाराष्ट्रातील 'ज्ञानदूत' हरपला; शिक्षण क्षेत्रात क्रांती घडवणारे 'पद्मश्री' डी. वाय. पाटील यांचं निधन". Lokmat (in மராத்தி). 2026-08-04. Retrieved 2026-08-04.
  9. "Former Bihar governor D Y Patil passes away at 90.". The Print. 4 August 2026. https://theprint.in/india/former-bihar-governor-d-y-patil-passes-away-at-90/3005017/.

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=த._எ._பாட்டீல்&oldid=4619380" இலிருந்து மீள்விக்கப்பட்டது