தொரந்தோ எரெக்டா
தொரந்தோ எரெக்டா | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
Unrecognized taxon (fix): | Duranta |
இனம்: | வார்ப்புரு:Taxonomy/DurantaD. erecta
|
இருசொற் பெயரீடு | |
Duranta erecta லி. | |
வேறு பெயர்கள் | |
Duranta repens L. |
தொரந்தோ எரெக்டா (Duranta erecta) என்பது மெக்சிகோவிலிருந்து தென் அமெரிக்கா மற்றும் கரீபியன் வரை உள்ள வெர்பெனாசியே குடும்பத்தைச் சேர்ந்த ஒரு பூக்கும் புதர் தாவரம் ஆகும். இது உலகெங்கிலும் உள்ள வெப்பமண்டல மற்றும் மிதவெப்ப மண்டல தோட்டங்களில் ஒரு அலங்கார தாவரமாக பரவலாக வளர்க்கப்படுகிறது. மேலும் பல இடங்களில் இயற்கையாக வளரும் தாவரமாக மாறியுள்ளது. இது கோல்டன் டியூ டிராப், பிஜியன் பெர்ரி, ஸ்கைஃப்ளவர் ஆகிய பொதுவான பெயர்களாலும் அழைக்கப்படுகிறது.
விளக்கம்
[தொகு]தொரந்தா எரெக்டா பரந்த அளவில் வளரும் புதர் அல்லது (அரிதாக) ஒரு சிறிய மரம் ஆகும். இது 6 m (20 அடி) உயரம் வரை வளரக்கூடியது. மேலும் அதே சம அகலத்திற்கு பரவக்கூடியது. இதன் இலைகள் வெளிர் பச்சை நிறமாகவும், நீள்வட்டத்திலிருந்து முட்டை வடிவமாகவும், எதிரெதிராகவும், 7.5 செமீ (3.0 அங்) நீளமும், 3.5 செமீ (1.4 அங்) அகலமும், 1.5 செமீ இலைக்காம்பு கொண்டதாகவும் இருக்கும்.
இதன் மலர்கள் இள நீலம் அல்லது சுகந்தி நிறத்தில், அடர்த்தியான கொத்துச் சரமாக வளைந்து அல்லது தொங்கியவாறு இருக்கும். இது கோடை காலத்தில் பூக்கும். இதன் பழமானது, 11 மிமீ (0.43 அங்குலம்) விட்டம் கொண்டதாகவும், பல விதைகளைக் கொண்ட சிறிய உருண்டையான மஞ்சள் அல்லது ஆரஞ்சு நிற கனியாக இருக்கும். [1]
வகைபிரித்தல்
[தொகு]பதினைந்தாம் நூற்றாண்டைச் சேர்ந்த இத்தாலிய தாவரவியலாளர் காஸ்டோர் தோரந்தோவின் நினைவாக இதன் பேரினப் பெயர் சூட்டப்பட்டது. [2] இதன் அறிவியல் பெயரில் உள்ள எரெக்டா என்ற குறிப்பிட்ட அடைமொழிக்கு லத்தின் மொழியில் "நிமிர்ந்து" என்று பொருள். இந்த தாவரம் லத்தீன் மொழியில் இருந்து "creeping" என்பதற்கு D. repens என்றும் அழைக்கப்படுகிறது. இதன் பிந்தைய பெயர் முதலில் சிறிய-இலைகள் கொண்ட இனங்களை அடையாளம் காண பயன்படுத்தப்பட்டது. [3]
சூழலியல்
[தொகு]தொரந்தா எரெக்டா அமெரிக்காவின் மெக்சிகோ மற்றும் கரீபியன் தெற்கில் பிரேசில் மற்றும் அர்ஜென்டினா வரை பூர்வீகமாக கொண்டது. புளோரிடா, லூசியானா, டெக்சஸ், அரிசோனா, கலிபோர்னியா ஆகிய இடங்களில் உள்ள இந்த தாவரம் தென் அமெரிக்காவைச் சேர்ந்ததா அல்லது கடல் மட்டத்திலிருந்து 40-1100 மீட்டர் உயரத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட இனமா என்பது குறித்து சில விவாதங்கள் உள்ளன. [4]
இது இயற்கையான நிலையில், பொதுவாக முழு சூரிய ஒளிமிக்க அல்லது ஈரமான, உள்நாட்டில் பாறை அல்லது மணல் நிறைந்த கடலோரப் பகுதிகளில் வளரும். முதிர்ச்சிக்கு முன், இத்தாவரமானது ஆண்டுக்கு அரை மீட்டர் வரை வளரும்.
சாகுபடி
[தொகு]இது வெப்பமண்டல மற்றும் சூடான மிதவெப்ப மண்டல பகுதிகள் முழுவதும் ஒரு அலங்கார தாவரமாக வளர்க்கப்படுகிறது.[5] இதன் அழகான பூக்கள் மற்றும் பழங்கள் தோட்டங்களில் விரும்பி வளர்க்கத்தக்கதாக மாற்றுகின்றது. இதன் பூக்கள் பட்டாம்பூச்சிகள் மற்றும் ஓசனிச்சிட்டு போன்றவற்றை ஈர்க்கின்றன. [5] 'ஆல்பா', 'ஆரியா', 'ஆஸி கோல்ட்', 'கோல்ட் மவுண்ட்', 'கெய்ஷா கேர்ள்', 'சபைர் ஷவர்ஸ்', மற்றும் 'வரிகேட்டா' உள்ளிட்ட பல்வேறு வகையான சாகுபடி வகைகள் உள்ளன.[6]
ஆக்கிரமிப்பு திறன்
[தொகு]ஆத்திரேலியா, தெற்காசியா, சீனா, தென்னாப்பிரிக்கா, ஹவாய், பிஜி, பிரெஞ்சு பொலினீசியா ஆகிய நாடுகளில் இந்த தாவரம் ஒரு ஆக்கிரமிப்பு இனமாக அடையாளம் காணப்பட்டுள்ளது. [7] [8] ஆனால் இது அறிமுகப்படுத்தபட்ட மற்ற வாழ்விடங்களில் ஆக்கிரமிப்பு இனமாகவில்லை.
பண்புகள்
[தொகு]இத்தாவரத்தின் இலைகள் மற்றும் பழுக்காத கனிகள் நச்சுத்தன்மையுடையது. மேலும் குழந்தைகள், நாய்கள், பூனைகளை கொன்றது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. [9] இருப்பினும், பாடும்பறவைகள் தீய விளைவுகள் இல்லாமல் இதன் பழங்களை சாப்பிடுகின்றன. [5]
காட்சியகம்
[தொகு]-
தொரந்தோ எரெக்டா
-
தொரந்தோ மலர்கள்
-
தொரந்தோ புதர்
-
'சஃபிர் ப்ளூ' சாகுபடி
-
பழங்களை உண்ணும் சுண்டெலிப் பறவை
-
ஒரு பெரிய புதர்
-
நெருக்கமான மலர்கள்
-
சிறிய வேலி
-
சிறிய மரமாக வளர்ந்தது
-
இந்தியாவில் ஒரு பரந்த புதர்
குறிப்புகள்
[தொகு]- ↑ Huxley, A., ed. (1992). New RHS Dictionary of Gardening 2: 117. Macmillan பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-333-47494-5.
- ↑ "Duranta erecta". Missouri Botanical Garden. பார்க்கப்பட்ட நாள் 2008-12-11.
- ↑ Culbert, D. F. "Add drops of Gold to Florida Yards". University of Florida Institute of Food and Agricultural Sciences. பார்க்கப்பட்ட நாள் 2008-12-11.
- ↑ Christman, Steve (October 26, 2003). "Floridata: Duranta erecta". Floridata. பார்க்கப்பட்ட நாள் 2008-12-11.
- ↑ 5.0 5.1 5.2 Francis, John K. "Duranta erecta" (PDF). United States Forest Service. பார்க்கப்பட்ட நாள் 2008-12-11.
- ↑ Culbert, D. F. "Duranta cultivars". University of Florida Institute of Food and Agricultural Sciences. பார்க்கப்பட்ட நாள் 2008-12-11.
- ↑ "Global Compendium of Weeds: Duranta repens". Hawaiian Ecosystems at Risk project. பார்க்கப்பட்ட நாள் 2008-12-11.
- ↑ "Pacific Islands Ecosystems at Risk: Duranta erecta". Hawaiian Ecosystems at Risk project. பார்க்கப்பட்ட நாள் 2008-12-11.
- ↑ Thompson, N (2007). Poisonous Plants in Australia: Enabling consumers to buy safe plants. WWF-Australia. பக். 10. http://awsassets.wwf.org.au/downloads/sp127_poisonous_and_invasive_plants_in_australia_1jul07.pdf. பார்த்த நாள்: 2008-12-11.