துரை (திரைப்படம்)
தோற்றம்
| துரை Durai | |
|---|---|
250 px | |
| இயக்கம் | ஏ. வெங்கடேஷ் |
| தயாரிப்பு | பி. எல். தேனப்பன் |
| கதை | ஜி. கே. கோபிநாத் (வசனம்) |
| திரைக்கதை | அர்ஜூன் |
| இசை | டி. இமான் |
| நடிப்பு | அர்ஜூன் கீரத் பட்டால் காஜலா சுமா குகா விவேக் வின்சென்ட் அசோகன் |
| ஒளிப்பதிவு | வி. இலட்சுமிபதி |
| படத்தொகுப்பு | வி. டி. விஜயன் |
| கலையகம் | ஸ்ரீ இராஜலட்சுமி பிலிம் பிரைவெட் லிமிடெட் |
| விநியோகம் | ஐங்கரன் இண்டர்நேசனல் |
| வெளியீடு | 1 அக்டோபர் 2008 |
| ஓட்டம் | 151 நிமிடங்கள் |
| நாடு | இந்தியா |
| மொழி | தமிழ் |
துரை (Durai) என்பது 2008 இல் வெளியான இந்தியத் தமிழ் அதிரடித் திரைப்படமாகும். ஏ. வெங்கடேஷ் இயக்கியிருந்த இத்திரைப்படத்தில் அர்ஜுன் , கிராத் பட்டால் மற்றும் பலர் நடித்திருந்தனர்.[1]
நடிகர்கள்
[தொகு]- துரையாக (ராஜா) அர்ஜுன்
- அஞ்சலியாக கீரத் பட்டல்
- மீனாவாக காஜலா
- சந்தியாவாக சுமா குகா
- அறுசுவை அம்பியாக விவேக்
- தெய்வநாயகமாக கே. விஸ்வநாத்
- தர்மராக வின்சென்ட் அசோகன்
- சண்முகமாக அமித் தவான்
- வெண்ணிற ஆடை மூர்த்தி
- எஸ். என். லட்சுமி
- சண்முகராஜன்
- டிசி ஈஸ்வர பாண்டியனாக ஓ. ஏ. கே. சுந்தர்
- சுடண்ட் கோபால்
பாடல்கள்
[தொகு]இத்திரைப்படத்திற்கு டி. இமான் இசையமைத்திருந்தார். இந்த ஒலிப்பதிவில் இளையராஜா இசையமைத்த அக்னி நட்சத்திரம் திரைப்படத்தில் இடம்பெற்ற ராஜா ராஜாதி என்ற பாடல் மறுஆக்கம் செய்யப்பட்டது.[2]
| எண். | பாடல் | பாடகர்(கள்) | வரிகள் |
|---|---|---|---|
| 1 | அடி ஆத்தி | ஜாசி கிஃப்ட், திம்மி, ரம்யா என்.எஸ்.கே. | தபு சங்கர் |
| 2 | ஆயிரம் ஆயிரம் | எஸ். பி. பாலசுப்பிரமணியம் | |
| 3 | ராஜா ராஜாதி | கார்த்திக் | வாலி |
| 4 | உன்னை மாதிரி | உதித் நாராயண், சிரேயா கோசல் | தபு சங்கர் |
| 5 | வேட்டைக்கும் சொந்தக்காரன் | கார்த்திக், சலோனி |
விமர்சனம்
[தொகு]ஆனந்த விகடன் வார இதழில் வந்த விமர்சனத்தில் "பல படங்களின் 'ஃபாலோ-அப்'பாக. இந்தப் படத்தில் 'லிஃப்ட் கேட்போர் சங்கம்' ஆரம்பிக்கிறார் விவேக். போரடிக்குது... சங்கத்தைக் கலைச்சிருங்க பங்கு! எல்லா ஏரியாவிலும் பற்றாக்குறை. அதனாலேயே, கரை சேரவில்லை 'துரை'!" என்று எழுதி 37100 மதிப்பெண்களை வழங்கினர்.[3]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Stunts say it all - Durai". The Hindu. 10 October 2008. https://www.thehindu.com/todays-paper/tp-features/tp-fridayreview/Stunts-say-it-all-Durai/article15400315.ece.
- ↑ "Durai Songs - Imann - Durai Tamil Movie Songs - Oosai.com - A Sound of Tamil Music - An Online Tamil songs Portal , Carries more than 4600 Tamil Movie Songs Online". Archived from the original on 2008-10-08.
- ↑ "சினிமா விமர்சனம்: துரை". விகடன். 2008-10-22. Retrieved 2025-06-08.