திபெத்திய செம்மான்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
திபெத்திய செம்மான்
உயிரியல் வகைப்பாடு
உலகம்:
திணை:
பிரிவு:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
பேரினம்:
செர்வசு
இனம்:
செ. கனாடென்சிசு
துணையினம்:
வாலிச்சி
இருசொற் பெயரீடு
செர்வசு கனாடென்சிசு
வேறு பெயர்கள்
  • செர்வசு கனாடென்சிசு அபினிசு

திபெத்திய சிவப்பு மான் (Tibetan red deer-Cervus canadensis valichi) என்பது தெற்கு திபெத்திய மலைப்பகுதிகள் மற்றும் பூட்டானில் உள்ள காட்டுமான்/வாபிடியின் ஒரு துணையினமாகும். அழிந்துவிட்டதாக நம்பப்பட்ட இதன் எண்ணிக்கை 8,300க்கும் அதிகமாக அதிகரித்துள்ளது. இவற்றில் பெரும்பாலானவை 1993ஆம் ஆண்டில் சீனாவின் திபெத் தன்னாட்சி பிராந்தியத்தின் காம்டோ மாகாணத்தின் ரிவோக் கவுண்டி நிறுவப்பட்ட 120,000 ஹெக்டேர் இயற்கை காப்பகத்தில் வாழ்கின்றன.[1] சில 20ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் இலண்டனிலும், லாசா தெற்கே ஒரு சிறிய மிருகக்காட்சிசாலையிலும் இருந்தன.

விளக்கம்[தொகு]

திபெத்தியச் செம்மான் குறுகிய கால்களும் பெரிய, சதுர முகவாயினையும் கொண்டு ஒப்பீட்டளவில் மிகப்பெரிய அளவிலானது. குளிர்கால உரோமங்கள் சாம்பல் நிறத்திலும் முகத்தில் இவை வெளிர் மணல்-பழுப்பு நிறத்தில் காணப்படும். கோடைக் காலத்தில் தோலானது சாம்பல் நிறத்திலிருக்கும். குட்டையான வாலுடன், பிட்டத்தில் பெரிய வெள்ளை திட்டு காணப்படும். சிச்சுவான் மானில் காணப்படும் அடர் ஓரங்கள் இல்லை. கிழக்குப் பகுதியைச் சேர்ந்த மான்கள் அடர் முதுகெலும்பு தோலினைக் கொண்டுள்ளன.[2]

வரம்பு[தொகு]

திபெத்தியச் செம்மான், சிச்சுவான் மான் மற்றும் கன்சு செம்மான் ஆகியவை வாபிடியின் தெற்கு குழுவை உருவாக்குகிறது.[3] இவை வடக்கு பூட்டான் மற்றும் தெற்கு திபெத்தில் வாழ்கின்றன. இங்கு சிக்கிம் அருகே உள்ள சும்பி பள்ளத்தாக்கிலும் மானசரோவர் ஏரியில் இவை பதிவு செய்யப்பட்டுள்ளன. 1988ஆம் ஆண்டில் பூட்டான் மற்றும் தென்கிழக்கு திபெத்தில் எண்ணிக்கையிலான மான்கள் கூட்டம் கண்டுபிடிக்கப்படும் வரை இது முற்றிலும் அழிந்துவிட்டதாக நம்பப்பட்டது. இதனுடைய வரம்பு, இமயமலையின் வடக்கே பிரம்மபுத்திரா ஆற்றின் பல சிறிய பள்ளத்தாக்குகளை உள்ளடக்கியிருக்கலாம் (யார்லுங் சாங்போ நதி).[2] 1995ஆம் ஆண்டில் நடத்தப்பட்ட ஒரு கணக்கெடுப்பு, ஜென்கி கிராமத்திற்கு அருகில் யார்லுங் சாங்போ ஆற்றின் வடக்கே சுமார் 200 திபெத்தியச் செம்மான்கள் இருந்ததையும் அவை இன்றும் காணப்படுவதைத் தெரிவிக்கின்றது. இந்த மானின் ஒரே அறியப்பட்ட சாத்தியமான எண்ணிக்கை இவை என்பதால், இவற்றைப் பாதுகாக்க இங்கு ஒரு காப்பகம் அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. சுபன்சிரி ஆற்றைச் சுற்றி வேறு சில நினைவுச்சின்னங்களின் இம்மான்கள் வாழ்ந்ததற்கான சான்றுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.[4]

இவை இமயமலை ஓநாயால் வேட்டையாடப்படுகின்றன.[5]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Tibet sees growth in wildlife population". Xinhua News Agency. 2015-12-31. Archived from the original on January 1, 2019.
  2. 2.0 2.1 Valerius Geist: Deer of the World: Their Evolution, Behaviour, and Ecology, Stackpole Books, Mechanicsburg PA 1998, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-8117-0496-3
  3. Ludt, Christian J.; Wolf Schroeder; Oswald Rottmann; Ralph Kuehn (2004). "Mitochondrial DNA phylogeography of red deer (Cervus elaphus)" (PDF). Molecular Phylogenetics and Evolution (Elsevier) 31 (3): 1064–1083. doi:10.1016/j.ympev.2003.10.003. பப்மெட்:15120401. http://www.wzw.tum.de/wildbio/paper/cerphyl.pdf#search=%22Barbary%20red%20deer%22. பார்த்த நாள்: 2007-06-04. 
  4. George B. Schaller, Wulin Liua and Xiaoming Wang: Status of Tibet red deer. Oryx (1996), 30:269-274. online
  5. S. Balajeid Lyngdoh; B. Habib; S. Shrotriya. "Dietary spectrum in Himalayan wolves: comparative analysis of prey choice in conspecifics across high-elevation rangelands of Asia" (PDF). Journal of Zoology. பன்னாட்டுத் தர தொடர் எண்:0952-8369. https://cdn.downtoearth.org.in/library/0.69048700_1565775720_dietary-spectrum-in-himalayan-wolves.pdf. பார்த்த நாள்: 29 March 2022. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=திபெத்திய_செம்மான்&oldid=3922069" இலிருந்து மீள்விக்கப்பட்டது