லாசா மாவட்டம்

ஆள்கூறுகள்: 29°38′55″N 91°07′03″E / 29.6487°N 91.1174°E / 29.6487; 91.1174
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
லாசா
ཁྲིན་ཀོན་ཆུས་城关区
மாவட்டம்
மேலிருந்து இடமாக:ஜோகாங் விகாரையின் கூரை; நோர்புலிங்கா விகாரையின் முதன்மை நுழைவாயில்; பொட்டலா அரண்மனை; தர்மசக்கரம்] மற்றும் பிரார்த்தனைச் சக்கரம் மற்றும் (அடியில்) ஜோகாங்
மேலிருந்து இடமாக:ஜோகாங் விகாரையின் கூரை; நோர்புலிங்கா விகாரையின் முதன்மை நுழைவாயில்; பொட்டலா அரண்மனை; தர்மசக்கரம்] மற்றும் பிரார்த்தனைச் சக்கரம் மற்றும் (அடியில்) ஜோகாங்
Map
செங்க்குவான் மாவட்டம் எனும் லாசா மாவட்டத்தில் லாசா நகரம் (மஞ்சள் நிறம்)
செங்க்குவான் மாவட்டம் எனும் லாசா மாவட்டத்தில் லாசா நகரம் (மஞ்சள் நிறம்)
ஆள்கூறுகள் (நாடு கடந்த திபெத்த்யர்களின் அரசாங்கம்): 29°38′55″N 91°07′03″E / 29.6487°N 91.1174°E / 29.6487; 91.1174
நாடுசீனா
தன்னாட்சிப் பிரதேசம்திபெத் தன்னாட்சிப் பகுதி
தலமைமையிடம்லாசா
அரசு
 • வகைமாவட்டம்
பரப்பளவு
 • மாவட்டம்525 km2 (203 sq mi)
 • நகர்ப்புறம்168 km2 (65 sq mi)
ஏற்றம்
3,656 m (11,995 ft)
மக்கள்தொகை
 (2010)
 • மாவட்டம்2,79,074
 • அடர்த்தி531.6/km2 (1,377/sq mi)
 • நகர்ப்புறம்
 (2018)[2]
3,30,000
 • இனக் குழுக்கள்
திபெத்திய மக்கள்; ஹான் சீனர்; ஊய் மக்கள்
 • மொழிகள்
திபெத்திய மொழிமாண்டரின் மொழி
நேர வலயம்ஒசநே+8 (சீனா சீர் நேரம்)
அஞ்சல் சுட்டு எண்
850000
Area codeதொலைபேசி குறியீடு
இணையதளம்www.xzcgq.gov.cn

லாசா மாவட்டம் அல்லது செங்க்குவான் மாவட்டம் (Lhasa or Chengguan) சீனாவின் மேற்கில், இந்தியாவின் வடகிழக்கில், சீனாவின் தன்னாட்சிப் பிரதேசங்களில் ஒன்றான திபெத் தன்னாட்சிப் பகுதியின் மக்கள் தொகை மிக்க மாவட்டம் ஆகும். இதன் நிர்வாகத் தலைமையிடம் லாசா நகரம் ஆகும்.[3]லாசா நகரம், கடவுளர்களின் இருப்பிடமாக திபெத்தியர்கள் கருதுகின்றனர். லாசா மாவட்டம் கிழக்கு இமயமலையில் 3,650 மீட்டர்கள் (11,980 அடி) உயரத்தில், 525 சதுர கிலோமீட்டர்கள் (203 sq mi) பரப்பளவில் அமைந்துள்ளது. இம்மாவட்டத்தில் பிரம்மபுத்திரா ஆற்றின் கிளை ஆறான லாசா ஆறு பாய்கிறது.

திபெத்திய பீடபூமியில் சிஞ்சியாங் நகரத்திற்குப் பின அதிக மக்கள் தொகை கொண்ட பகுதியாக லாசா மாவட்டம் உள்ளது. கிபி 17-ஆம் நூற்றான்டிலிருந்து, லாசா மாவட்டத்தின் நிர்வாகத் தலமையிடமாகவும், ஆன்மிகத் தலைமையிடமாகவும் உள்ள லாசா நகரம் கடல் மட்டத்திலிருந்து 3,656 மீட்டர்கள் (11,990 அடி) உயரத்தில் உள்ளது. லாசா நகரம் உலகில் உயரமான இடத்தில் அமைந்த நகரங்களில் ஒன்றாக உள்ளது. லாசா மாவட்டத்தில் திபெத்திய பௌத்தம் பெரும்பான்மை சமயமாக உள்ளது. இம்மாவட்டத்தின் குறிப்பிடத்தக்க இடங்கள் பொட்டலா அரண்மனை, ஜோகாங் விகாரை மற்றும் நோர்புலிங்கா அரண்மனைகள் ஆகும்.

லாசா மாவட்டத்தில் திபெத்திய பல்கலைக்கழகம் உள்ளது.[4]525 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட லாசா மாவட்டத்தின், 2010-ஆம் ஆண்டின் மக்கள் தொகை 2,79,074 ஆகவுள்ளது. இம்மாவட்டத்தில் பெரும்பான்மையாக திபெத்தியர்களுடன் ஹான் சீனர்கள் மற்றும் ஊய் மக்கள் வாழ்கின்றனர். மேலும் இங்கு திபெத்திய மொழி மற்றும் சீனர்களின் மாண்டரின் மொழி பேசப்படுகிறது.

புவியியல்[தொகு]

திபெத்திய பீடபூமியில் லாசா மாவட்டம் கிழக்கு இமயமலையில் 3,650 மீட்டர்கள் (11,980 அடி) உயரத்தில், 525 சதுர கிலோமீட்டர்கள் (203 sq mi) பரப்பளவில் அமைந்துள்ளது. இம்மாவட்டத்தில் பிரம்மபுத்திரா ஆற்றின் கிளை ஆறான லாசா ஆறு பாய்கிறது. கடவுளர்களின் இருப்பிடமாக திபெத்தியர்கள் லாசா நகரத்தை கருதுகின்றனர்.

லாசா மாவட்ட நிர்வாகம்[தொகு]

லாசா மாவட்டம் 12 துணை-மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது.

தட்ப வெப்பம்[தொகு]

தட்பவெப்ப நிலைத் தகவல், Lhasa (1971−2000 normals, extremes 1951−2016)
மாதம் சன பிப் மார் ஏப் மே சூன் சூலை ஆக செப் அக் நவ திச ஆண்டு
பதியப்பட்ட உயர்ந்த °C (°F) 20.5
(68.9)
21.3
(70.3)
25.0
(77)
25.9
(78.6)
29.4
(84.9)
29.9
(85.8)
30.4
(86.7)
27.2
(81)
26.5
(79.7)
24.8
(76.6)
22.8
(73)
20.1
(68.2)
30.4
(86.7)
உயர் சராசரி °C (°F) 7.2
(45)
9.3
(48.7)
12.7
(54.9)
15.9
(60.6)
19.9
(67.8)
23.2
(73.8)
22.6
(72.7)
21.4
(70.5)
19.9
(67.8)
17.0
(62.6)
12.1
(53.8)
8.0
(46.4)
15.77
(60.38)
தாழ் சராசரி °C (°F) −9.0
(16)
−5.8
(21.6)
−2.1
(28.2)
1.5
(34.7)
5.6
(42.1)
9.8
(49.6)
10.4
(50.7)
9.7
(49.5)
7.7
(45.9)
2.0
(35.6)
−4.2
(24.4)
−8.2
(17.2)
1.5
(34.6)
பதியப்பட்ட தாழ் °C (°F) −16.5
(2.3)
−15.4
(4.3)
−13.6
(7.5)
−8.1
(17.4)
-2.7
(27.1)
2.0
(35.6)
4.5
(40.1)
3.3
(37.9)
0.3
(32.5)
-7.2
(19)
-11.2
(11.8)
−16.1
(3)
−16.5
(2.3)
பொழிவு mm (inches) .8
(0.031)
1.2
(0.047)
2.9
(0.114)
6.1
(0.24)
27.7
(1.091)
71.2
(2.803)
116.6
(4.591)
120.6
(4.748)
68.3
(2.689)
8.8
(0.346)
1.3
(0.051)
1.0
(0.039)
426.5
(16.791)
ஈரப்பதம் 28 26 27 37 44 51 62 66 64 49 38 34 43.8
சராசரி பொழிவு நாட்கள் (≥ 0.1 mm) .7 1.0 1.6 4.3 9.9 14.3 19.1 20.0 15.4 4.5 .7 .6 92.1
சூரியஒளி நேரம் 250.9 226.7 246.1 248.9 276.6 257.3 227.4 219.6 229.0 281.7 267.4 258.6 2,990.2
ஆதாரம்: China Meteorological Administration,[5] all-time extreme temperature[6]

மக்கள் தொகை பரம்பல்[தொகு]

திபெத்திய பீடபூமியில் 525 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட லாசா மாவட்டத்தின் 2010-ஆம் ஆண்டின் கணக்கெடுப்பின் படி, மக்கள் தொகை 2,79,074 ஆகவுள்ளது. இம்மாவட்டத்தில் பெரும்பான்மையாக திபெத்தியர்களுடன் ஹான் சீனர்கள் மற்றும் ஊய் மக்கள் வாழ்கின்றனர். மேலும் இங்கு திபெத்திய மொழி மற்றும் சீனர்களின் மாண்டரின் மொழி பேசப்படுகிறது. பெரும்பாலான மக்கள் திபெத்திய பௌத்த சமயத்தைப் பின்பற்றுகின்றனர்.


மேற்கோள்கள்[தொகு]

  1. "Lhasa City Master Plan". gov.cn. பார்க்கப்பட்ட நாள் 2017-08-07.
  2. 2.0 2.1 Cox, W (2018). Demographia World Urban Areas. 14th Annual Edition (PDF). St. Louis: Demographia. p. 84.
  3. "Illuminating China's Provinces, Municipalities and Autonomous Regions". China.org.cn. பார்க்கப்பட்ட நாள் 2014-05-17.
  4. "教育部 财政部 国家发展改革委 关于公布世界一流大学和一流学科建设高校及建设 学科名单的通知 (Notice from the Ministry of Education and other national governmental departments announcing the list of double first class universities and disciplines)".
  5. 中国地面国际交换站气候标准值月值数据集(1971-2000年) (in Chinese). China Meteorological Administration. Archived from the original on 2013-10-16. பார்க்கப்பட்ட நாள் 2010-05-04.{{cite web}}: CS1 maint: unrecognized language (link)
  6. "Extreme Temperatures Around the World". பார்க்கப்பட்ட நாள் 2013-02-21.

ஆதாரங்கள்[தொகு]

மேலும் படிக்க[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

விக்கிமீடியா பொதுவகத்தில்,
Lhasa
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Chengguan District, Lhasa
என்பதில் ஊடகங்கள் உள்ளன.

வரைபடங்களும், புகைப்படங்களும்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=லாசா_மாவட்டம்&oldid=3570161" இலிருந்து மீள்விக்கப்பட்டது