டோவ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
டோவ்
த காபிட்டு, த லோட் ஒவ் த ரிங்ஸ் கதை மாந்தர்

டோவ் அல்லது குள்ளர்கள் (ஆங்கில மொழி: Dwarf) என்பவர் ஆங்கில எழுத்தாளர் ஜே. ஆர். ஆர். டோல்கீன் என்பவரால் உருவாக்கப்பட்ட ஒரு கனவுருப்புனைவு கதாபாத்திரம் ஆகும். இவர்கள் புராண கடந்த காலத்தில் அர்டாவின் மத்திய கண்டமான மத்திய-பூமியில் வசிக்கும் இனமாகும். அவை ஜெர்மானிய புராணங்களின் குள்ளர்களை அடிப்படையாகக் கொண்டவை, அவர்கள் மலைகளில் வாழ்ந்த சிறிய மனித உருவங்கள், சுரங்கத் தொழில், உலோகவியல், கொல்லர் மற்றும் அணிகலன் ஆகிய கை கை வேலைப்பாடுகளில் சிறப்புத் தேர்ச்சி பெற்றவர்கள். இவர்கள் ஹொபிட்டுகளின் உயரமே இருப்பினும் இவர்களின் தாடியும் சற்றே பருமனான உடலும் இவர்களை வேறுபடுத்த உதவும்.

இந்த கதாபாத்திரத்திற்கு உயிர் கொடுக்குக்கும் விதமாக நடிகர்கள் ஜோன் ரைஸ்-டேவிஸ், கென் ஸ்டாட், அய்டன் துர்நேர், டீன் ஓகோர்மான், மார்க் ஹாட்லோ, ஆடம் பிரவுன், ஜான் காலன், ஜேம்ஸ் நெஸ்பிட் மற்றும் இடீபன் ஹண்டர் ஆகியோர் த லார்டு ஆப் த ரிங்ஸ்[1][2] மற்றும் த காபிட்டு போன்ற திரைப்படத் தொடர்களில் நடித்துள்ளார்கள்.[3]

சான்றுகள்[தொகு]


த லோட் ஒவ் த ரிங்ஸ் கற்பனை உயிரினங்கள் ஏனைய மோதிரங்களை ஆளும் மாய மோதிரம்
ஹொபிட் | ஓர்க் | எல்வ் | மனிதர் | என்ட் | டோவ் | துறோல் | விசார்ட்
"https://ta.wikipedia.org/w/index.php?title=டோவ்&oldid=3503866" இருந்து மீள்விக்கப்பட்டது