டொனால்ட் பிரையன் டோ

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

டொனால்ட் பிரையன் டோ (Donald Brian Doe) (19 சூன் 1920 - 5 மே 2005) ஒரு பிரித்தானிய தொல்பொருள் ஆராய்ச்சியாளர் மற்றும் கட்டிடக் கலைஞர் ஆவார். முதலில் கட்டிடக் கலைஞராகப் பயிற்றுவிக்கப்பட்ட டோ, இரண்டாம் உலகப் போரில் வட ஆப்பிரிக்காவில் உள்ள ராயல் பொறியாளர்களுடன் பணியாற்றும் போது தொல்லியல் துறையில் ஆர்வத்தைப் பெற்றார். போருக்குப் பிறகு, அவர் ஏடனின் பிரித்தானிய குடியிருப்பில் (நவீன யெமனின் ஒரு பகுதி) தலைமை அரசாங்க கட்டிடக் கலைஞராக நியமிக்கப்பட்டார். பின்னர் அதன் பழங்காலத் துறையின் முதல் இயக்குநராக பணியாற்றினார். 1967 ஆம் ஆண்டு யெமனில் இருந்து பிரித்தானியர்கள் வெளியேறிய பிறகு, கேம்பிரிச்சுப் பல்கலைக்கழகத்தில் சேர்ந்தார். அங்கு தெற்கு அரேபியாவின் தொல்பொருள் மற்றும் கட்டிடக்கலை வரலாறு பற்றிய தனது ஆய்வுகளின் முடிவுகளை வெளியிடுவதில் பணியாற்றினார். 1970 ஆம் ஆண்டுகளில் ஓமானில் தொல்லியல் ஆய்வுகளையும் நடத்தினார். [1] [2]

மேற்கோள்கள்[தொகு]

  1. "D B Doe, MBE (Biographical details)". British Museum. பார்க்கப்பட்ட நாள் 2017-10-15.
  2. Beatrice de Cardi (2006). "Obituaries: D.B. DOE, MBE, PhD, FRIBA, FSA (1920 – 2005)". Bulletin of the Society for Arabian Studies 11: 28. பன்னாட்டுத் தர தொடர் எண்:1361-9144. https://www.thebfsa.org/files/bulletin_2006.pdf. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=டொனால்ட்_பிரையன்_டோ&oldid=3870854" இலிருந்து மீள்விக்கப்பட்டது