டார்ஜீலிங் மரங்கொத்தி
டார்ஜீலிங் மரங்கொத்தி | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
தொகுதி: | |
வகுப்பு: | |
வரிசை: | பிசிபார்மிசு
|
குடும்பம்: | |
சிற்றினம்: | டெண்ட்ரோபிசினி
|
பேரினம்: | டென்ட்ரோகோபோசு
|
இனம்: | லெ. டார்ஜெல்லென்சிசு
|
இருசொற் பெயரீடு | |
டென்ட்ரோகோபோசு டார்ஜெல்லென்சிசு (பிளைத், 1845) |
டார்ஜீலிங் மரங்கொத்தி (டென்ட்ரோகோபோசு டார்ஜெல்லென்சிசு) என்பது பிசிடே குடும்பத்தில் உள்ள ஒரு பறவை சிற்றினம் ஆகும். இது இந்தியத் துணைக்கண்டத்தின் வடக்குப் பகுதிகளிலும், முதன்மையாக இமயமலையிலும், அதை ஒட்டிய சில பகுதிகளிலும் காணப்படுகிறது.
விளக்கம்
[தொகு]டார்ஜீலிங் மரங்கொத்தி மஞ்சள் கழுத்து பக்கங்களைக் கொண்ட நடுத்தர அளவிலான மரங்கொத்திப் பறவையாகும். பெரிய வெள்ளை, தோள்பட்டை திட்டுகள் மற்றும் வெள்ளை பட்டைகளுடன் கூடிய இறகுகள் மற்றும் வால் பக்கங்களைக் கொண்ட கருப்பு மேல்பகுதியுடன் கூடியது. ஆண் மரங்கொத்தி சிவப்பு நிற பிடரியுடன் காணப்படும். வெள்ளை கன்னங்கள் மற்றும் மேல் மார்பகத்தில் நீண்ட கருப்பு மீசையுடன் செந்நிற குதத்தின் கீழ் மஞ்சள் நிறத் தோலுடன் காணப்படும்.
பரவல்
[தொகு]டார்ஜீலிங் மரங்கொத்தி, பூட்டான், இந்தியா, மியான்மர், நேபாளம் மற்றும் திபெத்தில் காணப்படுகிறது. இதன் இயற்கையான வாழ்விடங்கள் மிதவெப்பமண்டல அல்லது வெப்பமண்டல ஈரமான தாழ்நில காடுகள் மற்றும் மிதவெப்பமண்டல அல்லது வெப்பமண்டல ஈரமான மலைக் காடுகள் ஆகும்.
படங்கள்
[தொகு]-
டார்ஜிலிங் மரங்கொத்தி சிங்காலியா தேசியப் பூங்காவில் (மேற்கு வங்கம், இந்தியா)
மேற்கோள்கள்
[தொகு]- ↑ BirdLife International (2016). "Dendrocopos darjellensis". IUCN Red List of Threatened Species 2016: e.T22681111A92893224. doi:10.2305/IUCN.UK.2016-3.RLTS.T22681111A92893224.en. https://www.iucnredlist.org/species/22681111/92893224. பார்த்த நாள்: 12 November 2021.