உள்ளடக்கத்துக்குச் செல்

ஜெப்ரி வான்டர்சே

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஜெப்ரி டெக்சுடர் பிரான்சிசு வான்டர்சே (Jeffrey Dexter Francis Vandersay, பொதுவாக ஜெப்ரி வான்டர்சே (பிறப்பு:5 பெப்ரவரி ,1990) என்பவர் இலங்கைதத் துடுப்பாட்ட அணியின் வீரர் மற்றும் முன்னாள் உவெசுலி கல்லூரி, கொழும்பு மாணவர் ஆவார்.[1]

உள்ளூர்ப் போட்டிகள்[தொகு]

2017-18 நான்கு மாகாணங்களுக்கு இடையே நடைபெற்ற துடுப்பாட்டத் தொடரில் இவர் தம்புல்லா அணி சார்பாக விளையாடினார்.[2] 2018 ஆம் ஆண்டில் மாகாணங்களுக்கு இடையேயான சூப்பர் ஒருநாள் துடுப்பாட்டத் தொடரில் தம்புலா அணி சார்பாக விளையாடினார்.[3] 2018 ஆம் ஆண்டில் இலங்கை சூப்பர் லீக் தொடரில் காலி அணி சார்பாக விளையாட உள்ளார்.[4]

சர்வதேச போட்டிகள்[தொகு]

2015 ஆம் ஆண்டில் இலங்கைத் துடுப்பாட்ட அணி பாக்கித்தானில் சுற்றுப் பயணம் செய்து விளையாடியது. பாக்கித்தான் அணிக்கு எதிரான போட்டியில் இவர் இலங்கை லெவன் அணி சார்பாக விளையாடினார்.[5]

அதே ஆண்டில் இலங்கைத் துடுப்பாட்ட அணிக்கு எதிரான போட்டியில் இவர் பன்னாட்டு இருபது20 போட்டியில் இவர் அறிமுகமானார். இந்தப் போட்டியில் 4 ஓவர்கள் வீசி 25 ஓட்டங்கள் விட்டுக் கொடுத்தார். ஆனால் இலக்கினைக் கைப்பற்ற இயலவில்லை.[6]

டிசம்பர் 25, 2015 இல் நியூசிலாந்து துடுப்பாட்ட அணிக்கு எதிரான ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டியில் இவர் அறிமுகமானார். 167 வீரராக ஒருநாள் போட்டிகளில் இவர் அறிமுகமானார். இந்தப் போட்டியில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் 7 ஓட்டங்கள் எடுத்தார். பின் பந்துவீச்சில் 2 ஓவர்கள் வீசி 34 ஓட்டங்களை விட்டுக் கொடுத்தார். ஆனால் இலக்கினைக் கைப்பற்றவில்லை. இந்தப் போட்டியில் இலங்கை அணி 10 இலக்குகளில் வெற்றி பெற்றது. பின் ஓவலில் நடைபெற்ற மூன்றாவது ஒருநாள் போட்டியில் 42 ஓட்டங்கள் விட்டுக் கொடுத்தார். ஓர் இலக்கினைக் கைப்பற்றினார்.[7]

பே ஓவலில் நியூசிலாந்துத் துடுப்பாட்ட அணிக்கு எதிராக நடைபெற்ற பன்னாட்டு இருபது20 போட்டியில் இவர் அறிமுகமானார். தனது முதல் இலக்காக கோரி ஆன்டர்சன் இலக்கினை வீழ்த்தினார். பின் 2016 ஐசிசி உலக இருபது20 போட்டித் தொடரில் இவருக்கு அணியில் இடம் கிடைத்தது. நியூசிலாந்து மற்றும் பாக்கித்தான் அணிக்கு எதிரான தொடர்களில் சிறப்பாக விளையாடததால் உலகக் கோப்பைத் தொடரில் இவருக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. ஆனால் லசித் மாலிங்கா காயம் காரணமாக விலகியதால் இவருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது.[8]

2017 ஆம் ஆண்டில் தென்னாபிரிக்கத் துடுப்பாட்ட அணிக்கு எதிரான துடுப்பாட்டத் தொடரில் இவருக்கு வாய்ப்பு வழங்கபட்டது.[9]

நவம்பர் , 2017 இல் இந்தியத் துடுப்பாட்ட அணிக்கு எதிரான தேர்வுத் துடுப்பாட்டத் தொடரில் இவருக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. ஆனால் ரங்கன ஹேரத் காயம் காரணமாக விலகியதால் இவருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது. ஆனால் இவர் விளையாடும் அணியில் இடம் பெறவில்லை.[10] பின் மே ,2018 இல் மேற்கிந்தியத்தீவுகள் துடுப்பாட்ட அணிக்கு எதிரான தேர்வுத் தொடரில் இடம் பெற்றார். ஆனால் இவர் எந்தப் போட்டியிலும் விளையாடவில்லை. பின் மூன்றாவது மற்றும் இறுதிப் போட்டியில் இவரின் தவறான நடத்தைக்காக இவர் நாடு திரும்பினார்.[11]

மே, 2018 இல் ஆகஸ்டு 2018 இல் இலங்கைத் துடுப்பாட்ட வாரியம் இவர் உட்பட முப்பத்து மூன்று வீரர்களுக்கு 2018-19 ஆம் ஆண்டிற்கான மத்திய ஒப்பந்த விருதினை வழங்கியது இவர் உட்பட முப்பத்து மூன்று வீரர்களுக்கு 2018-19 ஆம் ஆண்டிற்கான மத்திய ஒப்பந்த விருதினை வழங்கியது.[12][13]

சான்றுகள்[தொகு]

 1. "Jeffrey Vandersay". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 13 June 2015.
 2. "All you need to know about the SL Super Provincial Tournament". Daily Sports. 26 March 2018 இம் மூலத்தில் இருந்து 27 மார்ச் 2018 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20180327213128/https://dailysports.lk/all-you-need-to-know-about-the-sl-super-provincial-tournament/. பார்த்த நாள்: 27 March 2018. 
 3. "SLC Super Provincial 50 over tournament squads and fixtures". The Papare. http://www.thepapare.com/slc-super-provincial-50-tournament-squads-fixtures/. பார்த்த நாள்: 27 April 2018. 
 4. "SLC T20 League 2018 squads finalized". The Papare. http://www.thepapare.com/slc-t20-league-2018-squads-finalized/. பார்த்த நாள்: 16 August 2018. 
 5. "Pakistan tour of Sri Lanka, Tour Match: Sri Lanka Board President's XI v Pakistanis at Colombo (Colts), Jun 11-13, 2015". ESPNCricinfo. பார்க்கப்பட்ட நாள் 13 June 2015.
 6. "Pakistan tour of Sri Lanka, 1st T20I: Sri Lanka v Pakistan at Colombo (RPS), Jul 30, 2015". ESPNcricinfo. ESPN Sports Media. 30 July 2015. பார்க்கப்பட்ட நாள் 30 July 2015.
 7. "Sri Lanka tour of New Zealand, 2nd ODI: Sri Lanka v New Zealand at Hagley Oval, Dec 28, 2015". ESPNcricinfo. ESPN Cricinfo. 28 December 2015. பார்க்கப்பட்ட நாள் 28 December 2015.
 8. "Vandersay replaces Malinga in SL squad". ESPNcricinfo. 19 March 2016. பார்க்கப்பட்ட நாள் 19 March 2016.
 9. "Kumara, Sanjaya, Vandersay added to SL ODI squad". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 27 January 2017.
 10. "India vs Sri Lanka: Jeffrey Vandersay comes in as cover for Rangana Herath". Indian Express. 28 November 2017. பார்க்கப்பட்ட நாள் 28 November 2017.
 11. "Sri Lanka's Vandersay sent home from the West Indies". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 23 June 2018.
 12. "Sri Lanka assign 33 national contracts with pay hike". International Cricket Council. பார்க்கப்பட்ட நாள் 22 May 2018.
 13. "Sri Lankan players to receive pay hike". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 22 May 2018.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜெப்ரி_வான்டர்சே&oldid=3348456" இலிருந்து மீள்விக்கப்பட்டது