உள்ளடக்கத்துக்குச் செல்

ஜாலியா கைபர்தா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கைபர்தா (ஜாலியா)
கிழக்கு வங்காளத்தைச் சேர்ந்த ஒரு மீனவர், 1860கள்
குறிப்பிடத்தக்க மக்கள்தொகை கொண்ட பகுதிகள்
அசாம்5,81,559 (அண். 2001)
மொழி(கள்)
அசாமிய மொழிவங்காள மொழிஒடியா மொழி
சமயங்கள்
இந்து சமயம்பௌத்தம்

ஜாலியா கைபர்தா (Jalia Kaibarta) (அல்லது ஜாலியா கைபர்த்யா ) என்பது தாழ்த்தப்பட்ட மக்கள், மீனவர்களை உள்ளடக்கிய ஒரு சமூகமாகும். பின்னர் சமசுகிருதமயமாக்கம் மூலம் அவர்கள் பெரும்பான்மை இந்துக்களுக்குள் மரியாதைக்குரிய சாதி அடையாளங்களைப் பெற்றனர். இவர்கள் பாரம்பரியமாக மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்கள், அசாம், மேற்கு வங்காளம், ஒடிசா , கிழக்கு பீகார் மற்றும் வங்காளதேசம், நேபாளம், பூட்டான் ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள். கைபர்தாக்கள் ஆரம்பத்தில் ஹாலியா மற்றும் ஜாலியா கைபர்தா என இரண்டு குழுக்களாகப் பிரிக்கப்பட்ட ஒரே பழங்குடியினராகக் கருதப்பட்டனர்.இவர்களுக்குள் ஹாலியா கைபர்தா பிந்தையவர்களை விட உயர்ந்தவர்களாகக் கருதப்படுகிறார்கள்.[1] ஜாலியா கைபர்தாக்கள், கைபர்தா/ஜாலியா என்ற பெயரில் ஒரு பட்டியலிடப்பட்ட சாதியாக வகைப்படுத்தப்படுகிறார்கள். அசாமில் உள்ள 16 பட்டியலினத்தவர்களில் இரண்டாவது பெரிய சமூகமாகும். கரமூர் சத்ராதிகாரின் செல்வாக்கின் கீழ் பலர் தங்கள் பாரம்பரிய மீன்பிடித் தொழிலைக் கைவிட்டு தங்களைப் பிரித்துக்கொண்டனர். [2]

பிரம்ம வைவர்த்த புராணத்தில், ஒரு கைபர்தா ஒரு சத்திரிய தந்தைக்கும் வைசிய தாய்க்கும் பிறந்ததாகக் கூறப்படுகிறது. மற்றவர்கள் கைபர்தா என்பது பௌத்த ஜாதகக் கதைகளில் கூறப்படும் மீனவ வகுப்பைக் குறிக்கும் கேவட்டாவின் இந்துமயமாக்கப்பட்ட வார்த்தையாகக் கருதுகின்றனர். [3] [3]

முதல் அபகத்தக் கையெழுத்துப் பிரதி, சர்யாபத் வடிவில், திபெத்திய மொழியில் லூய்-பா என அழைக்கப்படும் ஒரு பௌத்தத் பிக்குவால் எழுதப்பட்டது. அவர் இடைக்கால காமரூபத்தின் மீனவர் சமூகத்தைச் சேர்ந்த மச்சேயந்திரநாதருடன் அடையாளம் காணப்பட்டார். இது பின்னர் கைபர்தாக்களாக மாறியது. [4] [5]

இடைக்கால ஒடிய கவிஞரும் வைணவ துறவியுமான அச்யுதானந்த தாசர் இந்த சமூகத்தின் தோற்றம், வளர்ச்சி, செயல்பாடுகள் மற்றும் பாத்திரங்களை விவரிக்கும் "கைபர்த கீதை" என்ற நூலை எழுயுள்ளார். [6]

குறிப்பிடத்தக்கவர்கள்[தொகு]

இதனையும் பார்க்கவும்[தொகு]

சான்றுகள்[தொகு]

  1. "In Lower Assam the Keots are divided into two main endogamous groups, halova and jalova Keots, or agriculturalists and fishermen, the former being held superior than the latter"(Cantile 1980)
  2. (Cantile 1980)
  3. 3.0 3.1 Dutta 1985, ப. 35.
  4. Dasgupta, Shashibhushan (1946). Obscure Religious Cults, Calcutta University Press, Calcutta, p. 384-385, Internet Archive copy; third edition: Firma KLM Private Limited, Calcutta 1960, Internet Archive copy; fifth edition: Firma KLM Private Limited, Calcutta 1995, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 81-7102-020-8
  5. Ayyappapanicker, K. & Akademi, Sahitya (1997). Medieval Indian literature: an anthology, Volume 3. Sahitya Akademi. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 81-260-0365-0, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-260-0365-5, (accessed: Friday March 5, 2010)
  6. "The Kaibartas of Odisha". Odisha News, Odisha Latest news, Odisha Daily - OrissaPOST (in அமெரிக்க ஆங்கிலம்). 2019-04-22. பார்க்கப்பட்ட நாள் 2022-11-17.
  7. 7.0 7.1 "Revolutionary Artist Dr. Bhupen Hazarika: Voicing the Silence of the Subaltern". Asian Journal of Humanities and Social Sciences: 9. https://ajhss.org/pdfs/Vol2Issue4/6.pdf. 

குறிப்புகள்[தொகு]

  • Dutta, Shristidhar (1985). The Mataks and their Kingdom. Allahabad: Chugh publication.
  • Cantile, Audrey (1980). CASTE AND SECT IN AN ASSAMESE VILLAGE (Ph.D.). University of London.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜாலியா_கைபர்தா&oldid=3710260" இலிருந்து மீள்விக்கப்பட்டது