சோகன் அல்வா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

 

சோகன் அல்வா
வட்டவடிவ சோகன் அல்வா
பரிமாறப்படும் வெப்பநிலைஇனிப்பு
தொடங்கிய இடம்பழைய தில்லி, இந்தியா
பகுதிஇந்தியத் துணைக்கண்டம்
முக்கிய சேர்பொருட்கள்கேரமல், சீனி, பால் (பானம்), நீர்
வேறுபாடுகள்வாதுமை
பிற தகவல்கள்அல்வா

சோகன் அல்வா (ஆங்கிலம்:Sohan halwa; உருது سوہن حلوہ; [ ˈsoːɦən ˈɦəlʋaː ]) என்பது இந்தியாவின் பழைய தில்லியின் பாரம்பரிய முகலாய்[1] இனிப்பு ஆகும். இது இந்திய துணைக்கண்டத்தில் பிரபலமானது. முகலாய காலத்திலிருந்தே நெய் அல்வா சோகன் அல்வாவிற்குப் பிரபலமானது.

சராய்கி சோகன் அல்வா

சோகன் அலவா தண்ணீர், சர்க்கரை, பால் மற்றும் சோளமாவு கலந்து கெட்டியாகும் வரை கொதிக்க வைத்துத் தயாரிக்கப்படுகிறது. குங்குமப்பூ வாசனைக்காகப் பயன்படுத்தப்படுகிறது. கடாயில் ஒட்டாமல் இருக்க நெய் பயன்படுத்தப்படுகிறது. பாதாம், பிஸ்தா, ஏலக்காய் விதைகள் சேர்க்கப்படுகின்றன. இந்தியத் துணைக் கண்டத்தில் உள்ள மற்ற அல்வா உணவுகளைப் போலல்லாமல், இது மத்தியக் கிழக்கு நாடுகளில் தயார் செய்வதுபோன்று திடமானது.

வரலாறு[தொகு]

சோகன் அல்வா (மேல் அலமாரி) மற்றும் பிற பாரம்பரிய இந்திய இனிப்புகள் .

பழைய தில்லியில், 1790இல், முகலாயப் பேரரசர் ஷா ஆலம் II ஆட்சியின் போது நிறுவப்பட்ட கந்தேவாலா இனிப்புக் கடையில் சோகன் அல்வா செய்யப்பட்டது. இந்த இனிப்புக் கடை மக்களால் பிரபலமாக விரும்பப்பட்ட இனிப்பகமாக இருந்தது.[2] ஆனால் 2015- இல் லாபம் இல்லாததால் மூடப்பட்டது.

இந்த இனிப்பு முதலில் கரிபோலியில் (இந்தி) சோகன் என்று அழைக்கப்பட்டது. சோபன் என்ற சமசுகிருத வார்த்தையிலிருந்து சொற்பிறப்பியல் ரீதியாக இந்தப் பெயர் உருவானது. ஜான் டி. பிளாட்சின் உருது, பழைய இந்தி மற்றும் ஆங்கிலம் அகராதியின்படி, இந்த இனிப்புக்கு சோகன் லால் எனப் பெயரிடப்பட்டது.[3]

வணிக உற்பத்தி[தொகு]

சோகன் அல்வா பல தசாப்தங்களாகப் பாரம்பரிய மிட்டாய்களால் வணிக ரீதியாகத் தயாரிக்கப்படுகிறது. இது உடையக்கூடியது மற்றும் கேரமலால் ஆனது. பொதுவாக 5-6 மிமீ தடிமன் கொண்ட வட்டுகளாக அல்லது சதுர வடிவில் துண்டுகளாகத் தயாரிக்கப்படுகிறது. இது பொதுவாக நுணுக்கமாக வடிவமைக்கப்பட்ட உருளிகளில் பொதியிடப்படுகிறது. சமீபத்திய ஆண்டுகளில் பிற பொதிகளிலும் இடப்படுகிறது.[4]

மேலும் பார்க்கவும்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Not Butter Chicken, Delhi Was Once Renowned For Its Sohan Halwa, Brief History Of The Sweet". Slurrp. பார்க்கப்பட்ட நாள் 2022-03-27. The Mughals, who were of Persian descent, made this [Sohan].
  2. Planet, Lonely. "Restaurants in Delhi, India".
  3. "A Dictionary of Urdu, Classical Hindi, and English". 1884.
  4. Persian Cooking: A Table Of Exotic Delights. https://books.google.com/books?id=GOidnQOUco0C&dq=sohan+qum&pg=PA232. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=சோகன்_அல்வா&oldid=3891649" இலிருந்து மீள்விக்கப்பட்டது