செவ்விறகுக் கொண்டைக் குயில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
செவ்விறகுக் கொண்டைக் குயில்
Chestnut-winged Cuckoo.jpg
உயிரியல் வகைப்பாடு
திணை: Animalia
தொகுதி: Chordata
வகுப்பு: Aves
வரிசை: Cuculiformes
குடும்பம்: Cuculidae
பேரினம்: Clamator
இனம்: C. coromandus
இருசொற் பெயரீடு
Clamator coromandus
(Linnaeus, 1766)

செவ்விறகுக் கொண்டைக் குயில் தென்கிழக்கு ஆசியா மற்றும் தெற்கு ஆசியாவில் காணப்படும் ஒரு சிற்றினம் ஆகும், இது கண்ணாடி போன்ற மேற்புற உடலமைப்பை கொண்டது.

பெயர்கள்[தொகு]

தமிழில் :செவ்விறகுக் கொண்டைக் குயில்

ஆங்கிலப்பெயர் :Red-winged Crested Cuckoo

அறிவியல் பெயர் :Clamator coromandus [2]

உடலமைப்பு[தொகு]

47 செ.மீ. - சுடலைக் குயிலினைப் போன்ற தோற்றம் உடைய இதன் இறக்கைகள் செம்பகத்தின் இறக்கைகளைப் போலச் செம்பழுப்பு நிறமானது. முதுகு பளபளப்பான கருப்பு, மோவாய், தொண்டை, மேல்மார்பு ஆகியன துருச் சிவப்பு: கீழ் மார்பும், வயிறு வெண்மை.

காணப்படும் பகுதிகள்[தொகு]

குளிர்காலத்தில் தமிழ்நாட்டுக்கு வலசை வருவது. கிழக்குக் கடற்கரை மாவட்டங்கள் வழியாக இலங்கைக்கு வலசை போகும் இதனைக் கோடிக்கரையில் கண்டதான குறிப்பு உள்ளது. காவிரி ஆற்றங்கரையில் காணப்பட்ட குறிப்பும் உள்ளது. இங்கு வலசை வரும்போது மௌனம் காப்பது இதன் வருகை மற்றும் காணப்படும் இடங்கள் ஆகியன பற்றிய முழுவிவரங்களும் முறையாகத் தொகுக்கப்படவில்லை.

உணவு[தொகு]

தனித்தும் சிறு குழுவாகவும் உயர்மரக் கிளைகளிடையே காணப்படும். கம்பளிப் பூச்சிகளைத் தேடி உணவாகக் கொள்ளும் இது தரைக்கு வருவதில்லை.

செவ்விறகுக் கொண்டைக் குயில்

[3]

படங்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Clamator coromandus". பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தின் செம்பட்டியல் பதிப்பு 2013.2. பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம் (2012). பார்த்த நாள் 26 November 2013.
  2. "Chestnut-winged_cuckoo செவ்விறகுக் கொண்டைக் குயில்". பார்த்த நாள் 9 அக்டோபர் 2017.
  3. தமிழ்நாட்டுப் பறவைகள் முனைவர் க.ரத்னம்-மெய்யப்பன் பதிப்பகம்,பக்கம் எண்:70