சி. டி. தேவல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சி.டி. தேவல்
சாவந்த் டான் தேவல்
இராசத்தான் சட்டப் பேரவை உறுப்பினர்
பதவியில்
2003–2008
பின்னவர்-
தொகுதிராய்ப்பூர் சட்டமன்ற தொகுதி
முன்னையவர்கிரா சிங் சவுகான்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு30-டிசம்பர்-1938 (வயது 84)
பாலி, இராசத்தான்
அரசியல் கட்சிஇந்திய தேசிய காங்கிரசு
பிள்ளைகள்சஞ்சய் தேவல் (மகன்)
பெற்றோர்பிருத்விராசு தேவல் (தந்தை)
கல்வி
முன்னாள் கல்லூரிஇராசத்தான் பல்கலைக்கழகம்
வேலை
  • அரசியல்வாதி
  • நிர்வாகி
  • சமூக செயற்பாட்டாளர்
இணையத்தளம்முகநூலில் சி. டி. தேவல்

சி.டி. தேவல் (C D Deval) (பிறப்பு : 30 டிசம்பர் 1938) இந்திய நாட்டினைச் சேர்ந்த அரசியல்வாதி, இந்திய தேசிய காங்கிரசு கட்சியின் தலைவர் மற்றும் இராசத்தானின் முன்னாள் இந்திய ஆட்சிப் பணி (ஐ.ஏ.எசு) அதிகாரி ஆவார். 2003 ஆம் ஆண்டு முதல் 2008 ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் சத்தீசுகர் மாநிலத்தின் ராய்ப்பூர் தொகுதியில் இருந்து இராசத்தான் சட்டப் பேரவை உறுப்பினராக பணியாற்றியுள்ளார். இவர் முதலில் ஒரு வட்டாட்சியராக நிர்வாக சேவையில் நுழைந்தார். 1963 ஆம் ஆண்டு இராசத்தான் நிர்வாக சேவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். 1984 ஆம் ஆண்டு இந்திய ஆட்சிப் பணி அதிகாரியாக பதவி உயர்வு பெற்றார். 1996 ஆம் ஆண்டு இந்திய ஆட்சிப் பணி அதிகாரியாக இருந்து ஓய்வு பெற்றார். [1] [2]

இவர் இந்திய ஆட்சிப் பணி அதிகாரியாக இருந்த காலத்தில், இரண்டு முறை இந்திய ஆட்சிப் பணி அதிகாரிகள் சங்கத்தின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். 2013 ஆம் ஆண்டு முதல், சரண் சமூகத்தின் சமூக அமைப்பான மார்வார் பிரந்தியா சரண் மகாசபாவை வழிநடத்தி வருகிறார். [3] [4] [5]

மேற்கோள்கள்[தொகு]

  1. Codingest (2020-10-21). "तीन साल में दो बार एपीओ रहे आशुतोष को सबसे धनी पालिका माउंट आबू की कमान, कार्यभार संभालने के 24 घंटों में देवल को हटाया" (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2023-03-06.
  2. "Home→Rajasthan 2008→Pali→Jaitaran→C. D. DEWAL(Criminal & Asset Declaration)". 2008.
  3. "देवल अध्यक्ष निर्वाचित". 2016. https://www.bhaskar.com/news/RAJ-OTH-MAT-latest-jaitaran-news-045003-1621961-NOR.html. 
  4. Rājasthāna vārshikī (in இந்தி). Pañcagaṅgā Prakāśana. 1991.
  5. "An attack, an unintended victim and two divided communities" (in ஆங்கிலம்). 2017-11-12.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சி._டி._தேவல்&oldid=3846794" இலிருந்து மீள்விக்கப்பட்டது