உள்ளடக்கத்துக்குச் செல்

சிவ பிரசாத் பரூவா தேசிய விருது

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சிவ பிரசாத் பரூவா தேசிய விருது
Siva Prasad Barooah National Award
இதழியல் துறைக்கான பங்களிப்பிற்காக வழங்கப்படும் விருது
விருது வழங்குவதற்கான காரணம்இந்தியாவில் பத்திரிக்கையாளர் சிறந்த பங்களிப்பிற்காக தனிநபர்கள் மற்றும் குழுக்களுக்கு வழங்கப்படுகிறது
இதை வழங்குவோர்கமல் குமாரி அறக்கட்டளை]
நாடுஇந்தியா Edit on Wikidata
வெகுமதி(கள்)ரூ. 2 இலட்சம்
முதலில் வழங்கப்பட்டது1999
கடைசியாக வழங்கப்பட்டது2008
Highlights
Total awarded12
முதல் விருதாளர்அசாம் டிரிபியூன்
அண்மைய விருதாளர்அர்ணப் கோஸ்வாமி
இணையதளம்kkfindia.org

சிவ பிரசாத் பரூவா தேசிய விருது (Siva Prasad Barooah National Award) என்பது செய்தி ஊடக சிறப்பை மேம்படுத்துவதற்காக, பத்திரிகைத் துறையில் சிறந்த பங்களிப்பினை வழங்கும் இந்தியாவில் உள்ள தனிநபர்கள் மற்றும் குழுக்களுக்கு வழங்கப்படும் விருது ஆகும். இந்த விருதினை 1999ஆம் ஆண்டில் கமல் குமாரி அறக்கட்டளையினர் நிறுவினர். புகழ்பெற்ற தேயிலை தோட்டக்காரர், பரோபகாரர், அரசியல்வாதி, மனிதநேய வாதி மற்றும் அசாமின் முதல் அசாமிய நாளிதழான படோரியின் வெளியீட்டாளரான சிவ பிரசாத் பரூவாவின் நினைவாக வழங்கப்படுகிறது. இவர் அசாம் மாநிலம் தெங்கலில் உள்ள புகழ்பெற்ற கோங்கிய பரூவா குடும்பத்தைச் சேர்ந்தவர். முதல் விருது அசாம் டிரிபியூனுக்கு வழங்கப்பட்டது. இந்த விருது பெறுபவருக்கு இந்திய ரூபாயில் 2 இலட்சமும், கோப்பையும், சாதர் (பொன்னாடை) மற்றும் சான்றிதழ் வழங்கப்படும்.

விருது பெற்றவர்களின் பட்டியல்[தொகு]

ஆண்டு விருது பெற்றவர் நிறுவனம் குறிப்பு
1999 அசாம் ட்ரிப்யூன்
1999 டி. ஜி. பாருவா
1999 பி. ஜி. பருவா
2000 சஞ்சய் அசாரிகா
2001 திரேந்திர நாத் பெசுபோருவா
2002 தீசுதா செதால்வத்
2003 பிரணாய் ராய்
2004 அருப் குமார் தத்தா
2005
2006 பிரபுல்ல சந்திர பருவா நிர்வாக அறங்காவலர்,
மீடியா டிரஸ்ட், அசாம்
[1]
2007 பாட்ரிசியா முகிம் ஆசிரியர், ஷில்லாங் டைம்ஸ் [1]
2008 அர்ணாப் கோஸ்வாமி தலைமை ஆசிரியர்,
டைம்ஸ் நவ்
[1]
2009 ராதிகா மோகன் பாகுபலி [2]
2011 எம்.எஸ்.பிரபாகர [3]

மேலும் பார்க்கவும்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 "Syam Sharma selected for Kamal Kumari Award : 21st apr09 ~ E-Pao! Headlines". www.e-pao.net. Hueiyen News Service (Manipur Information Centre). 20 April 2009. பார்க்கப்பட்ட நாள் 2021-06-03.{{cite web}}: CS1 maint: others (link)
  2. Staff Reporter (2010-09-15). "Kamal Kumari awards function today". Assam Tribune (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-06-03.
  3. "M.S. Prabhakara receives Siva Prasad Barooah Award". 2012-11-25. https://www.thehindu.com/news/national/M.S.-Prabhakara-receives-Siva-Prasad-Barooah-Award/article15618053.ece. 

வெளி இணைப்புகள்[தொகு]

வார்ப்புரு:Indian journalism awards