உள்ளடக்கத்துக்குச் செல்

பிரணாய் ராய்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பிரணாய் ராய்

பிரணாய் ராய் (15 அக்டோபர் 1949) என்பவர் செய்தியாளர், ஊடகவியலாளர், தேர்தல் கணிப்பாளர், பொருளியலாளர் எனப் பன்முகத் திறன் கொண்டவர். என்டிடிவி என்னும் தொலைக்காட்சியின் நிறுவனரும் தலைவரும் ஆவார்.

பிறப்பும் படிப்பும்

[தொகு]

வங்கத் தந்தைக்கும், ஐரீசு தாய்க்கும், மகனாக கொல்கத்தாவில் பிறந்த பிரணாய் ராய்; தேராதூன் பள்ளியில் பயின்றவர். பின்னர், லண்டன் பல்கலைக்கழக அரசி மேரிக் கல்லூரியில் பொருளியல் பயின்று பட்டம் பெற்று, தில்லி பொருளியல் பள்ளியில் முனைவர் பட்டமும் பெற்றார்.

பணிகள்

[தொகு]

1988-ம் ஆண்டு பிரணாய் ராய், தம் மனைவி ராதிகா ராயுடன் சேர்ந்து என்டிடிவி தொலைக்காட்சி சேவை நிறுவனத்தைத் தொடங்கினார். தூர்தர்சன், பிபிசி, ஆகியவற்றில் இந்தியத் தேர்தல்களைப் பற்றி திறனாய்வு செய்யும் பணியில் ஈடுபட்டார். பிரைஸ் வாட்டர் அவுஸ் கூப்பர்ஸ் என்னும் கணக்கியல் மற்றும் தணிக்கை செய்யும் பன்னாட்டு நிறுவனத்தில் அறிவுரையாளராகப் பொறுப்பேற்றார். இந்திய அரசின் நிதித் துறையின் ஆலோசகராகவும் பணி செய்தார். வாசிங்டனில் உள்ள வெளிநாட்டு உறவுகள் ஆலோசனை வாரியத்தில் இந்தியத் தொழில் அதிபர் முகேசு அம்பானி, பிரணாய் ராய் ஆகிய இரண்டு இந்தியர்கள் 2009-ம் ஆண்டில் இடம் பெற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது ஆகும்.

சான்றுகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=பிரணாய்_ராய்&oldid=3800154" இலிருந்து மீள்விக்கப்பட்டது