அர்ணாப் கோஸ்வாமி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
அர்ணாப் கோஸ்வாமி
Arnab Goswami Times Now.jpg
விக்கி கருத்தரங்கு 2011-ல் அர்ணாப் கோஸ்வாமி
பிறப்பு9 அக்டோபர் 1973 (1973-10-09) (அகவை 47)
குவஹாத்தி, அஸ்ஸாம்
கல்விஇந்து கல்லூரி, டெல்லிப் பல்கலைக்கழகம்
புனித அந்தோணியார் கல்லூரி, ஆக்ஸ்ஃபோர்டு
பணிடைம்ஸ் நவ் தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளர் மற்றும் முதன்மை செய்தி ஆசிரியர்
செயல்பட்ட 
ஆண்டுகள்
1998 – தற்போதுவரை
தொலைக்காட்சிதி நியூஸ்ஹவர்(The Newshour), டைம்ஸ் நவ்

அர்ணாப் கோஸ்வாமி (அசாமிய மொழி: অৰ্ণৱ গোস্বামী) ஓர் இந்திய ஊடகவியலாளர் மற்றும் இந்திய செய்தி தொலைக்காட்சி நிறுவனமான டைம்ஸ் நவ்-ல் முதன்மை செய்தி ஆசிரியர் (Editor-in-Chief) ஆவார்[1][2]. நியூஸ் ஹவர் என்கிற பெயரில் இவர் தொகுத்து வழங்கும் ஒரு நேரடி விவாத நிகழ்ச்சி வாரநாட்களில் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகிறது. இத்துடன் இவர் ஃப்ராங்க்லி ஸ்பீக்கிங் வித் அர்ணாப் (Frankly Speaking with Arnab) என்கிற பெயரில் சிறப்பு நபர்களைக் கொண்டு ஒரு சிறப்பு நிகழ்ச்சியையும் நடத்தி வருகிறார் [3][4]. தன்னுடைய ஊடக ஆளுமைத்தன்மைக்காக பல விருதுகளைப் பெற்றுள்ள இவர் காம்பேட்டிங் டெரரிசம்: தி லீகல் சேலஞ்ச் (Combating Terrorism: The Legal Challenge) என்ற தலைப்பில் ஒரு புத்தகத்தையும் எழுதியுள்ளார்.

குடும்பமும் கல்வியும்[தொகு]

இவரது குடும்பம் அசாமின் பார்பேட்டா மாவட்டத்திலுள்ள கிராமத்தை சேர்ந்தவர்கள். அங்கிருந்து சில்லாங் வந்து பின் குவகாத்தியில் குடியேறினார்கள். இவரின் தந்தை வழி பாட்டனார் ரஞ்சனி கன்டா கோசுவாமி குவகாத்தி உயர் நீதிமன்றத்தில் [5] வழக்குரைநர். அர்ணாபின் பெரியப்பா தினேசு கோசுவாமி அரசியல்வாதி. வி. பி. சிங் அமைச்சரவையில் சட்ட அமைச்சராக இருந்தார்[5], அர்ணாபின் தந்தை மனோரஞ்சன் தில்லி பொறியியல் கல்லூரியில் படித்து இராணுவத்தில் பணியில் சேர்ந்தார். பணி காரணமாக அடிக்கடி இடம்மாற வேண்டி இருந்ததால் அர்ணாபின் பள்ளி கல்வி பல ஊர்களில் தொடர்ந்தது.[5]

அர்ணாபின் அக்கா மருத்துவராக பெங்களூருவில் வசிக்கிறார். அர்ணாபின் தாய் வழி பாட்டனார் கௌரிசங்கர் பட்டாச்சாரியா தீவிர பொதுவுடமைவாதி. அர்ணாப் தில்லி பல்கலைக்கழகத்தில் சமூகவியல் இளங்கலை பட்டம் பெற்று பின் பிரித்தனிலுள்ள ஆக்ஸ்ஃபோர்டில் சமூகமானிடவியலில் முதுகலைப்பட்டம் பெற்றார்.[5]

தொழில்[தொகு]

இலண்டனில் இருந்து வந்ததும் 1994இல் தி டெலிகிராப் இதழில் பணியில் சேர்ந்தார். அதற்கு இலண்டனில் பழக்கமான அவரின் நண்பர் சுரஞ்சன் தாசு உதவினார்.[5] 1995-இல் என்டிடிவியில் பணிக்குச் சேர்ந்தார். அங்கு அவர் ராஜ்தீப் தேசாயிக்குக் கீழ் பணியாற்றினார். ஏப்பிரல் 2004இல் அங்கிருந்து விலகி டைம்சு நவ் தொலைக்காட்சியில் பணியில் சேர்ந்தார்.[5] பின்னர் அர்ணாப் கோசுவாமி 2016-ஆம் ஆண்டு நவம்பர் முதல் தேதியில் டைம்ஸ் நவ் மற்றும் ஈ.டி.நவ் ஆகிய தொலைக்காட்சிகளின் முதன்மை ஆசிரியர் பொறுப்பிலிருந்து விலகினார்.[6]

ரிபப்ளிக் தொலைக்காட்சி[தொகு]

அர்னாப் கோஸ்வாமி, 6 மே 2017 அன்று துவக்கப்பட்ட ரிபப்ளிக் தொலைக்காட்சியின் தலைமை செய்தி ஆசிரியராகவும், அதன் பெரும் பங்குதாரர்களில் ஒருவராகவும் உள்ளார்.[7]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=அர்ணாப்_கோஸ்வாமி&oldid=2799267" இருந்து மீள்விக்கப்பட்டது