தினேசு கோசுவாமி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தினேசு கோசுவாமி (Dinesh Goswami, மே 27, 1935 - ஜூன் 3, 1991[1] ) என்பவர் இந்திய அரசியல்வாதி. 1989 ஆம் ஆண்டில் வி. பி. சிங் தலைமையில் நடுவணரசில் சட்ட அமைச்சராக இருந்தவர். அசாம் மாநிலத்தைச் சேர்ந்த இவர் 1985 இல் குவகாத்தி தொகுதியிலிருந்து இந்திய மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். மாநிலங்களவையிலும் உறுப்பினராக இருந்தார். தேர்தல் சீர்திருத்தங்கள் தொடர்பாகப் பரிந்துரை செய்ய தினேசு கோசுவாமி தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டது. தேர்தல் சீர்திருத்தங்கள் அறிக்கையும் இவரது குழுவினால் தயாரிக்கப்பட்டு 1990 இல் அளிக்கப்பட்டது.[2] தினேசு கோசுவாமி தமது 56 ஆம் வயதில் மகிழுந்து விபத்தில் அடிபட்டுக் காலமானார்.[3]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=தினேசு_கோசுவாமி&oldid=2230292" இருந்து மீள்விக்கப்பட்டது