கமல் குமாரி பருவா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கமல் குமாரி பருவா
Kamal Kumari Barooah
பிறப்பு1899
போர்லெங்கி சட்ரா, அசாம்
இறப்பு1978 (அகவை 78–79)
அசாம்
தேசியம்இந்தியர்
மற்ற பெயர்கள்ஆயிட்டா
குடியுரிமைஇந்தியர்
அறியப்படுவதுதொழில் முனைவர், முன்னோடிப் பெண்
பெற்றோர்மகேந்திரநாத் மகந்தா (தந்தை)
சுவர்ணலதா மகந்தா (தாயார்)
வாழ்க்கைத்
துணை
சிவப்பிரசாத்து பருவா
பிள்ளைகள்ஏமேந்திர பிரசாத்து பருவா

கமல் குமாரி பரூவா (Kamal Kumari Barooah) இந்தியாவின் அசாம் மாநிலம் தெங்கலில் உள்ள கொங்கிய பரூவா குடும்பத்தின் தாய் ஆவார். மகேந்திரநாத் மகந்தா மற்றும் சுவர்ணலதா மகந்தா ஆகியோருக்கு போரேலேங்கி சத்ரா கிராமத்தில் பிறந்தார். 1917 ஆம் ஆண்டில், கோங்கிய பரூவா குடும்பத்தைச் சேர்ந்த சிவ பிரசாத் பரூவாவை திருமணம் செய்து கொண்டார். இந்த குடும்பம் அசாமிய நலன்கள், அசாமிய கலாச்சாரம் மற்றும் மரபுகளின் களஞ்சியமாகத் திகழ்ந்தது. புகழ்பெற்ற இந்திய தொழில்முனைவோர், தேயிலை தோட்டக்காரர் மற்றும் பரோபகாரர் ஹேமேந்திர பிரசாத் பரூவா கமல் குமாரியின் மகன் ஆவார்.[1]

1938 ஆம் ஆண்டு கணவரின் மரணத்திற்குப் பிறகு, பெரிய தெங்கல் குடும்பத்தை கமல் குமாரி தனியாகக் கையாள வேண்டியிருந்தது. தேயிலைத் தோட்டங்களை நடத்துவது தொடங்கி, தனது குழந்தைகளுக்கான குடும்ப சொத்துக்களை தக்கவைத்துக்கொள்வது வரை அனைத்தையும் கவனித்தார்.. தொழில்களை நடத்துவதற்காக, இவர் ஆங்கிலத்தையும் தேயிலை தொழிலையும் கற்றார். [2]

கே.கே அறக்கட்டளை[தொகு]

கமல் குமாரி அறக்கட்டளை இவரது நினைவாக 1990 ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. கலை, கலாச்சாரம் மற்றும் இலக்கியம் , அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையில் சிறந்த தனிநபர் அல்லது குழுவிற்கான பங்களிப்புகளுக்கு தேசிய விருதை அறக்கட்டளை 1991 ஆம் ஆண்டு முதல் வழங்கிவருகிறது. இந்த அறக்கட்டளை வழங்கும் மற்றுமொரு விருது சிவ பிரசாத் பரூவா பத்திரிகைக்கான தேசிய விருது ஆகும். [3]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Online Assam". Online Assam. 2014. பார்க்கப்பட்ட நாள் October 21, 2014.
  2. Deka, Meeta (2013) (in en). Women's Agency and Social Change: Assam and Beyond. SAGE Publications India. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9788132116547. https://books.google.com/books?id=OZb-AAAAQBAJ&q=Kamal+Kumari+Barooah+hasband&pg=PA71. பார்த்த நாள்: 30 October 2017. 
  3. "Call to keep alive Hemen Barooah's ideals". The Assam Tribune இம் மூலத்தில் இருந்து 7 நவம்பர் 2017 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20171107023612/http://www.assamtribune.com/scripts/detailsnew.asp?id=aug3013%2Fat094. பார்த்த நாள்: 30 October 2017. 

புற இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கமல்_குமாரி_பருவா&oldid=3594265" இலிருந்து மீள்விக்கப்பட்டது