சிறீ வெங்கடேசுவரா மருத்துவ அறிவியல் நிறுவனம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சிறீ வெங்கடேசுவரா மருத்துவ அறிவியல் நிறுவனம்
வகைமாநில சட்டமன்றச் சட்டத்தின் கீழ் தோற்றுவிக்கப்பட்ட நிறுவனம்
உருவாக்கம்1993
பணிப்பாளர்மருத்துவர் பி. வெங்கம்மா
அமைவிடம், ,
சுருக்கப் பெயர்SVIMS
சேர்ப்புபல்கலைக்கழக மானியக் குழு
இந்திய மருத்துவக் கழகம்
இணையதளம்http://svimstpt.ap.nic.in/

சிறீ வெங்கடேசுவரா மருத்துவ அறிவியல் நிறுவனம் (Sri Venkateswara Institute of Medical Sciences) என்பது ஆந்திர மாநில சட்டமன்றச் சட்டத்தின் கீழ் ஒரு மருத்துவ நிறுவனம் ஆகும்.

விளக்கம்[தொகு]

சிறீ வெங்கடேசுவரா மருத்துவ அறிவியல் நிறுவனமானது இந்தியாவின் ஆந்திரப் பிரதேசம், திருப்பதியில் உள்ள ஒரு சிறப்பு மருத்துவமனை ஆகும். இந்நிறுவனமானதுஅனைத்திந்திய மருத்துவ அறிவியல் கழகத்தின் படி உருவாக்கப்பட்டது. மேலும் இது ஆந்திரப் பிரதேச மாநில சட்டமன்றத்தின் சட்டத்தால் உருவாக்கப்பட்டது. 1986ஆம் ஆண்டு ஏப்ரல் 18ஆம் தேதி அப்போதைய ஆந்திர முதல்வராக இருந்த என். டி. ராமராவ் அடிக்கல் நாட்டினார். இந்த மருத்துவமனை பிப்ரவரி 2, 1993 முதல் செயல்படத் தொடங்கியது. பின்னர் 1995-ல் மாநில சட்டமன்றச் சட்டத்தின் கீழ் மருத்துவ நிறுவனமாக மாறியது. இந்நிறுவனத்தின் தற்போதைய இயக்குநர் மருத்துவர் பி. வெங்கம்மா ஆவார்.[1][2]

கல்வி திட்டம்[தொகு]

இக்கல்லூரியில் 4+12 ஆண்டு எம். பி. பி. எஸ். படிப்பினையும், ஒரு வருடக் கட்டாய மருத்துவ பயிற்சியுடன் வழங்குகிறது. இதற்கான மாணவர் சேர்க்கை நீட் தேர்வு மூலம் 175 இடங்கள் நிரப்பப்படுகின்றன. 

முதுகலை மற்றும் முனைவர் படிப்புகள்[தொகு]

சிறீ வெங்கடேசுவரா மருத்துவ அறிவியல் நிறுவனம் அறுவை சிகிச்சை, மருத்துவம் போன்ற அனைத்து சிறப்பு மருத்துவ பாடங்களிலும் முதுநிலை படிப்புகளை வழங்குகிறது. இதேபோல், எம்சிஎச் ஐ நரம்பியல் அறுவை, இதய அறுவை சிகிச்சை உள்ளிட்ட பல்வேறு முனைவர் பட்ட படிப்புகள் மற்றும் இதயவியல், நரம்பியல் போன்றவற்றில் டி. எம் . நிலையில் 28க்கும் மேற்பட்ட முதுநிலை மற்றும் முனைவர் பட்ட படிப்புகள் உள்ளன. 

தரவரிசை[தொகு]

தேசிய கல்வி நிறுவனங்களுக்கான தரவரிசை கட்டமைப்பில் சிறீ வெங்கடேசுவரா மருத்துவ அறிவியல் நிறுவனம் 2019-ல் இந்தியாவில் 72வது இடத்தையும்[3] 2019ஆம் ஆண்டில் பல்கலைக்கழகங்களில் 77வது இடத்தையும்[4] மற்றும் மருத்துவ தரவரிசையில் 29வது இடத்தையும் பெற்றுள்ளது.[5]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Archived copy". Archived from the original on 10 November 2012. பார்க்கப்பட்ட நாள் 26 September 2011.{{cite web}}: CS1 maint: archived copy as title (link)
  2. "ISRO official dies of accident injuries". தி இந்து. 2007-09-03. Archived from the original on 2012-11-10.
  3. ""National Institutional Ranking Framework 2019 (Overall)"". National Institutional Ranking Framework. Ministry of Human Resource Development. 2019. பார்க்கப்பட்ட நாள் July 17, 2019.
  4. ""National Institutional Ranking Framework 2019 (Universities)"". National Institutional Ranking Framework. Ministry of Human Resource Development. 2019. பார்க்கப்பட்ட நாள் July 17, 2019.
  5. ""National Institutional Ranking Framework 2019 (Medical)"". National Institutional Ranking Framework. Ministry of Human Resource Development. 2019. பார்க்கப்பட்ட நாள் July 17, 2019.

வெளி இணைப்புகள்[தொகு]