அனைத்திந்திய மருத்துவ அறிவியல் கழகம், புதுதில்லி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
அனைத்திந்திய மருத்துவ அறிவியல் கழகம், தில்லி
अखिल भारतीय आयुर्विज्ञान संस्थान दिल्ली
All India Institute of Medical Sciences (Logo).jpg
அலுவல்முறைச் சின்னம்
குறிக்கோளுரைசமக்கிருதம்: शरीरमाद्यं खलु धर्मसाधनम्
சரீர்மாத்யம் கலு தர்மசாதனம்
( காளிதாசனின் குமாரசம்பவத்திலிருந்து, [5.33])
ஆங்கிலத்தில் குறிக்கோளுரை
"தருமத்திற்கான' முதன்மையான கருவி உடலே யாகும்'."
வகைபொது
உருவாக்கம்1956
நிதிக் கொடைஆண்டுக்கு 11.24 பில்லியன்
(US$147.36 மில்லியன்)
தலைவர்சுகாதாரம் மற்றும் குடும்பநலத் துறை அமைச்சர், இந்திய அரசு
துறைத்தலைவர்மரு. பலராம் ஐரான்
பணிப்பாளர்மரு. எம். சி. மிச்ரா
கல்வி பணியாளர்
840 (ஏறத்தாழ 105 இடங்கள் வெறுமை)
பட்ட மாணவர்கள்72 (எம்பிபிஎசு) +19 (இளங்கலை பார்வையளவியல்)+10(கதிர்வரைவியல்/கதிரியக்க அறுதியிடல் உயர்கல்வி)
அமைவிடம்புது தில்லி, தில்லி, இந்தியா
28°33′54″N 77°12′36″E / 28.565°N 77.21°E / 28.565; 77.21
படுக்கைகள்1766
சேர்ப்புதேவையில்லை
இணையதளம்www.aiims.edu

அனைத்திந்திய மருத்துவ அறிவியல் கழகம் தில்லி (All India Institute of Medical Sciences Delhi, AIIMS Delhi) இந்தியாவின் தலைநகர் புதுதில்லியில் அமைந்துள்ள அரசு மருத்துவக் கல்லூரியும் மருத்துவ ஆய்வு பல்கலைக்கழகமும் ஆகும். 1956ஆம் ஆண்டு இந்த நிறுவனம் நிறுவப்பட்டது; தன்னாட்சி பெற்ற இந்த மருத்துவக் கழகம் இந்திய அரசின் சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகத்தின் நேரடி மேற்பார்வையில் இயங்குகின்றது.

அமைவிடம்[தொகு]

நடுவிலுள்ள புற்றரை, பின்னால் கற்பிப்பு வளாகங்கள்

ஏய்ம்சு தில்லியின் அன்சாரி நகரில் அமைந்துள்ளது. தென் விரிவாக்கம்-II சந்தைக்கு அருகே, அரவிந்தர் மார்க், வட்டச்சாலை சந்திப்பின் தென்கிழக்கு மூலையில் உள்ளது. ஏய்ம்சிற்கு நேரெதிரே சஃப்தர்ஜங் மருத்துவமனையும் அதனுடன் தொடர்புடைய வர்த்தமான் மகாவீர் மருத்துவக் கல்லூரியும் உள்ளன. இந்தியாவில் மருத்துவ ஆராய்ச்சிகளை ஒருங்கிணைத்து நிதி வழங்கும் இந்திய மருத்து ஆய்வுக் குழுமத்தின் (ICMR) தலைமையகமும் அருகிலேயே உள்ளது. இந்த வளாகங்களுக்கு அருகிலுள்ள இந்திய அரசின் மருத்துவச் சேவைகளின் தலைமை இயக்குநரின் கீழுள்ள தேசிய மருத்து நூலகத்தில் பல்லாயிரக்கணக்கான மருத்துவ, அறிவியல் இதழ்களின் தொகுப்புக்கள் சேகரிக்கப்பட்டுள்ளன.

ஏய்ம்சு-II[தொகு]

அரியானாவிலுள்ள ஏய்ம்சு II

2009ஆம் ஆண்டு சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சரும் ஏய்ம்சின் தலைவருமான மரு.அன்புமணி ராமதாஸ் மற்றும் ஏய்ம்சு இயக்குநர் பேரா.தீரத்தாசு டோக்ராவின் முனைப்பில் அனைத்திந்திய மருத்துவ இரண்டாம் வளாகம் (ஏய்ம்சு-II),அரியானாவின் ஜாஜர் மாவட்டத்தில் பத்சா சிற்றூரில் 330 ஏக்கர் நிலப்பரப்பில் திட்டமிடப்பட்டது. உலகின் உயர்சிறப்பு மருத்துவக் கல்விக்கான மையங்களில் மிகப் பெரியதாக ஏய்ம்சு-II முன்னெடுக்கப்பட்டது.[1] 2012ஆம் ஆண்டு மே 30 அன்று இத்திட்டத்திற்கு அடிக்கல் நாட்டப்பட்டது.[2] 10 பில்லியன்
(US$131.1 மில்லியன்)
செலவில் கட்டமைக்கப்பட்டு வருகின்றது.[3][4] இதன் வெளிப்புற நோயாளிப் பிரிவை சுகாதார அமைச்சர் குலாம் நபி ஆசாத் நவம்பர், 24, 2012இல் திறந்து வைத்தார்.[5][6] இந்த வளாகத்தில் தேசிய புற்றுநோய் கழகத்தையும் அமைக்க அரசு திட்டமிட்டுள்ளது.[7]

மேற்சான்றுகள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]