இந்திய மருத்துவக் கழகம்
![]() | |
சுருக்கம் | MCI |
---|---|
பின்னோர் | தேசிய மருத்துவ ஆணையம் |
உருவாக்கம் | 1933 |
கலைக்கப்பட்டது | 25 செப்டம்பர் 2020[1] |
சட்ட நிலை | கலைக்கப்பட்டது |
தலைமையகம் | புது தில்லி |
மைய அமைப்பு | குழுமம் |
சார்புகள் | சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம் (இந்தியா) |
இந்திய மருத்துவக் கழகம் (Medical Council of India) என்பது இந்தியாவில் சீரான தரமிக்க மருத்துவக்கல்வியை வழங்குவதற்காக ஏற்படுத்தப்பட்ட அமைப்பாகும்.[2] இந்த அமைப்பு இந்தியாவில் மருத்துவக்கல்வியை ஒழுங்கு படுத்துதல்,மருத்துவப்பல்கலைகழகங்களுக்கு அங்கீகாரம் அளித்தல், மருத்துவ பட்டம் வழங்குதல், மருத்துவர்களுக்கு அங்கீகாரம் அளித்தல், மருத்துவ பணிகளை ஒழுங்கு படுத்துதல் முதலிய பணிகளை செய்து வருகிறது.
வளர்ச்சி[தொகு]
இந்த அமைப்பானது மருத்துவக்கழக சட்டம் 1933ன் படி, 1934ல் நிறுவப்பட்ட தன்னாட்சி அதிகாரம் கொண்ட அமைப்பாகும். இந்த அமைப்பானது மருத்துவக்கழக சட்டம் 1956ன் படி, மறுவரையரை செய்யப்பட்டது.
இந்திய மருத்துவ கழகத்தினை, தேசிய மருத்துவ ஆணையமாக மாற்ற நிதி ஆயோக் பரிந்துரைத்துள்ளது. இந்த முடிவு பெரும்பாலான மாநிலங்களால் அங்கீகரிக்கப்பட்டது மற்றும் பிரதம மந்திரி தேசிய மருத்துவ ஆணைய மசோதாவின் ஒப்புதலுக்குப் பிறகு பாராளுமன்றத்தால் நிறைவேற்றப்பட்டது. ஆகத்து 8, 2019 அன்று இந்தியக் குடியரசுத் தலைவரால் அங்கீகரிக்கப்பட்டது.[3][4][5]
2020ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் தேசிய மருத்துவ ஆணையம் உருவானவுடன், இந்திய மருத்துவக் கழகம் தானாகவே கலைக்கப்பட்டது. கிட்டத்தட்ட 63 ஆண்டுகால இந்திய மருத்துவ கழக சட்டம் ரத்து செய்யப்பட்டது.
முக்கியப்பணிகள்[தொகு]
- தரமிக்க மருத்துவ இளநிலை படிப்புகளை வழங்குதல்
- தரமிக்க மருத்துவ முதுநிலை படிப்புகளை வழங்குதல்
- இந்தியாவிலுள்ள மருத்துவ பல்கலைகழகங்கள் வழங்கும் பட்டங்களின் தரத்தினை உறுதிப்படுத்துதல்
- அயல்நாட்டிலுள்ள மருத்துவ பல்கலைகழகங்கள் வழங்கும் பட்டங்களின் தரத்தினை உறுதிப்படுத்துதல்
- மருத்துவ கல்லூரிகளுக்கு அங்கீகாரம் அளித்தல்
- மருத்துவ சேவையில் ஈடுபட அனுமதி அளித்தல்
- அங்கீகரிக்கப்பட்ட மருத்துவர்களின் பட்டியலை நிர்வகித்தல்
வெளி இணைப்புகள்[தொகு]
- இந்திய மருத்துவக் கழக இணையதளம் பரணிடப்பட்டது 2009-11-03 at the வந்தவழி இயந்திரம்
- மத்திய சுகாதார மற்றும் குடும்ப நல மேம்பாட்டு அமைச்சக இணையதளம் பரணிடப்பட்டது 2008-10-09 at the வந்தவழி இயந்திரம்
மேற்கோள்கள்[தொகு]
- ↑ https://www.aninews.in/news/national/general-news/nmc-comes-into-force-from-today-repeals-indian-medical-council-act20200925002735/
- ↑ https://www.aninews.in/news/national/general-news/nmc-comes-into-force-from-today-repeals-indian-medical-council-act20200925002735/
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". 2020-01-16 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2022-01-28 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ https://www.firstpost.com/india/president-gives-assent-to-national-medical-commission-bill-panel-to-replace-mci-will-be-formed-within-six-months-7134191.html
- ↑ "Medical Council of India is soon to be National Medical Commission". teluguglobal.in. 1 அக்டோபர் 2016 அன்று மூலம் பரணிடப்பட்டது. 28 Sep 2016 அன்று பார்க்கப்பட்டது.