மாநில சட்டமன்றச் சட்டத்தின் கீழ் தோற்றுவிக்கப்பட்ட நிறுவனங்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மாநில சட்டமன்றச் சட்டத்தின் கீழ் தோற்றுவிக்கப்பட்ட நிறுவனங்கள் (Institute under State Legislature Act) என்பன இந்தியாவில் உள்ள பல்கலைக்கழக அளவிலான நிறுவனங்களாகும். இவை மாநில சட்டமன்றச் சட்டத்தால் நிறுவப்பட்டு அல்லது இணைக்கப்பட்டுள்ளன.[1] இத்தகைய நிறுவனங்கள் மாநிலத்தின் உயர்கல்வித் துறையின் கீழ் வரவில்லை என்றாலும் வேறு துறையால் நடத்தப்பட்டு நிதியளிக்கப்பட்டாலும், இவையும் மாநிலப் பல்கலைக்கழகங்கள் போன்று கல்வி நிலை மற்றும் பிற சலுகைகளையும் அனுபவிக்கின்றன.  மத்திய பல்கலைக்கழகம், மாநிலப் பல்கலைக்கழகம், தனியார் பல்கலைக்கழகம், நிகர்நிலை பல்கலைக்கழகம் உட்பட இந்தியாவில் உள்ள பல்கலைக்கழக அளவிலான பிற வகை நிறுவனங்கள் ஆகும்.[1]

பல்கலைக்கழக மானியக் குழு சட்டம்[தொகு]

பல்கலைக்கழக மானியக் குழு சட்டம், 1956-ன் கீழ், "பல்கலைக்கழகம்" என்பது மத்திய சட்டம், மாகாணச் சட்டம் அல்லது மாநிலச் சட்டத்தின் கீழ் நிறுவப்பட்ட அல்லது இணைக்கப்பட்ட பல்கலைக்கழகம் என்று பொருள்படும். இந்தச் சட்டத்தின் கீழ் இதற்காக உருவாக்கப்பட்ட விதிமுறைகளின்படி ஆணையத்தால் இந்தப் பல்கலைக்கழகங்கள் அங்கீகரிக்கப்பட வேண்டும்.[2]

மாநில சட்டமன்ற சட்டத்தின் கீழ் உள்ள நிறுவனங்களின் பட்டியல்[தொகு]

இந்தியாவில் மாநில சட்டமன்றச் சட்டத்தின் கீழ் 6 நிறுவனங்கள் உள்ளன:

நிறுவனம் அமைவிடம் மாநிலம் நிறுவிய ஆண்டு மேற்கோள்
நிஜாமின் மருத்துவ அறிவியல் நிறுவனம் ஐதராபாத்து தெலங்காணா 1980 [3]
ஷெர்-இ-காஷ்மீர் மருத்துவ அறிவியல் நிறுவனம் சிறிநகர் சம்மு காசுமீர் 1983 [4]
சஞ்சய் காந்தி முதுநிலை மருத்துவ அறிவியல் நிறுவனம் இலக்னோ உத்தரப் பிரதேசம் 1987 [5]
இந்திரா காந்தி மருத்துவ அறிவியல் நிறுவனம் பட்னா பீகார் 1992 [6]
சிறீ வெங்கடேஸ்வரா மருத்துவ அறிவியல் நிறுவனம் திருப்பதி ஆந்திரப் பிரதேசம் 1993 [7]
டாக்டர் ராம் மனோகர் லோஹியா மருத்துவ அறிவியல் நிறுவனம் இலக்னோ உத்தரப் பிரதேசம் 2006 [8]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 "Department of Higher Education | Government of India, Ministry of Education".
  2. "Institution Established Under State Legislature Act".
  3. "Nizam's Institute of Medical Sciences". www.nims.edu.in. 29 July 2016 அன்று பார்க்கப்பட்டது.
  4. "Sher-i-Kashmir Institute of Medical Sciences". skims.ac.in. 29 July 2016 அன்று பார்க்கப்பட்டது.
  5. "Sanjay Gandhi Postgraduate Institute of Medical Sciences". www.sgpgi.ac.in. 29 July 2016 அன்று பார்க்கப்பட்டது.
  6. "Indira Gandhi Institute of Medical Sciences". www.igims.org. 29 July 2016 அன்று பார்க்கப்பட்டது.
  7. "Sri Venkateswara Institute of Medical Sciences". www.svimstpt.ap.nic.in. 29 ஜூலை 2016 அன்று மூலம் பரணிடப்பட்டது. 29 July 2016 அன்று பார்க்கப்பட்டது.
  8. "Dr. Ram Manohar Lohia Institute of Medical Sciences". www.drrmlims.ac.in. 29 July 2016 அன்று பார்க்கப்பட்டது.