சியாங் ராய், தாய்லாந்து
சியாங் ராய்
เชียงราย | |
---|---|
நகராட்சி | |
เทศบาลนครเชียงราย | |
தாய்லாந்தின் வடக்கில் சியாங் ராய் நகரத்தின் அமைவிடம் | |
ஆள்கூறுகள்: 19°54′34″N 99°49′39″E / 19.90944°N 99.82750°E | |
நாடு | தாய்லாந்து |
மாகாணம் | சியாங் ராய் மாகாணம் |
மாவட்டம் | முயியாங் சியாங் ராய் மாவட்டம் |
தோற்றுவித்தவர் | மன்னர் மாங்ராய் |
அரசு | |
• வகை | நகராட்சி |
• மேயர் | வங்சாய் சோன்சுத்தமணி |
பரப்பளவு | |
• மொத்தம் | 60.85 km2 (23.49 sq mi) |
ஏற்றம் | 390 m (1,280 ft) |
மக்கள்தொகை (2012) | |
• மொத்தம் | 69,888 |
• அடர்த்தி | 1,100/km2 (3,000/sq mi) |
நேர வலயம் | ஒசநே+7 (தாய்லாந்து சீர் நேரம்) |
தொலைபேசி குறியீடு எண் | (+66) 53 |
புவிசார் குறியீடு | 5100 |
இணையதளம் | chiangraicity |
சியாங் ராய் (Chiang Rai) (தாய் மொழி: เมืองเชียงราย, தாய்லாந்து நாட்டின் வடகோடியில் உள்ள சியாங் ராய் மாகாணாத்தின் தலைநகரமும், முயியாங் சியாங் ராய் மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிடமும் ஆகும். இந்நகரத்தை மன்னர் மங்ராய் கிபி 1262ல் நிறுவினார். [1]:208 உலகில் அதிக அளவில் அபின் உற்பத்தியாகும் தங்க முக்கோணத்தில் அமைந்துள்ள நகரங்களில் ஒன்றாகும்.
வரலாறு
[தொகு]மங்ராய் வம்ச மன்னர்களின் தலைநகராக சியாங் ராய் நகரம் விளங்கியது. சியாங் ராய் நகரம் பின்னர் பர்மாவின் ஆட்சியில் பல நூற்றாண்டுகளாக இருந்தது. 1899ல் தாய்லாந்து மன்னர் சியாங் ராய் நகரத்தை கைப்பற்றி, 1933ல் சியாங் ராய் மாகாணத்தை நிறுவினார்.
புவியியல்
[தொகு]கோக் ஆற்றின் வண்டல் மண் சமவெளியில், கடல் மட்டத்திலிருந்து 390மீட்டர் உயரத்தில் உள்ள சியாங் ராய் நகரம், வடக்கில் தாயின் லாவோ மலைத்தொடருக்கும், தெற்கில் பி பான் நாம் மலைத்தொடருக்கும் நடுவில் அமைந்துள்ளது. லாவோ ஆறு சியாங் ராய் நகரத்தின் தெற்கில் பாய்கிறது.
சியாங் ராய் நகரம், பாங்காக் நகரத்திற்கு வடக்கில் 860 கிமீ தொலைவிலும், சியாங் மாய் நகரத்திற்கு வடகிழக்கில் 200 கிமீ தொலைவிலும், மியான்மர் எல்லைக்கு தென்மேற்கில் 62 கிமீ தொலைவிலும் உள்ளது. தங்க முக்கோணத்தில் அமைந்துள்ள நகரஙகளில் ஒன்றாகும்.
மக்கள்தொகை பரம்பல்
[தொகு]60.85 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட சியாங் ராய் நகரத்தின், 2012ம் ஆண்டின் மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, சியாங் ராய் நகர மக்கள்தொகை 69,888 ஆகும். சியாங் ராய் நகர மக்கள்தொகையில் 12.5% தாய்லாந்து மலைவாழ் பழங்குடி மக்கள் ஆவார்.
தட்பவெப்பம்
[தொகு]சியாங் ராய் நகரம் வெப்பமண்டல ஈரமான மற்றும் வறண்ட காலநிலை கொண்டது. (கோப்பென் காலநிலை வகைப்பாடு Aw).
குளிர்காலம் வறட்சியாகவும், சிறிது வெப்பமாகவும் இருக்கும். கோடைக்கால சராசரி வெப்பம் 34.9°C ஆகும். ஏப்ரல் முதல் அக்டோபர் வரை பலத்த பருவமழை பெய்கிறது.
தட்பவெப்ப நிலைத் தகவல், சியாங் ராய் (1981–2010) | |||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
மாதம் | சன | பிப் | மார் | ஏப் | மே | சூன் | சூலை | ஆக | செப் | அக் | நவ | திச | ஆண்டு |
பதியப்பட்ட உயர்ந்த °C (°F) | 34.3 (93.7) |
37.0 (98.6) |
39.3 (102.7) |
40.5 (104.9) |
39.6 (103.3) |
39.6 (103.3) |
36.2 (97.2) |
35.6 (96.1) |
35.0 (95) |
34.3 (93.7) |
34.9 (94.8) |
33.5 (92.3) |
40.5 (104.9) |
உயர் சராசரி °C (°F) | 28.6 (83.5) |
31.3 (88.3) |
33.8 (92.8) |
34.8 (94.6) |
33.1 (91.6) |
32.1 (89.8) |
31.1 (88) |
30.9 (87.6) |
31.1 (88) |
30.5 (86.9) |
28.8 (83.8) |
27.2 (81) |
31.1 (88) |
தினசரி சராசரி °C (°F) | 19.7 (67.5) |
21.6 (70.9) |
24.6 (76.3) |
27.1 (80.8) |
27.1 (80.8) |
27.2 (81) |
26.7 (80.1) |
26.5 (79.7) |
26.2 (79.2) |
25.1 (77.2) |
22.2 (72) |
19.4 (66.9) |
24.4 (75.9) |
தாழ் சராசரி °C (°F) | 12.8 (55) |
13.7 (56.7) |
16.9 (62.4) |
20.6 (69.1) |
22.5 (72.5) |
23.6 (74.5) |
23.4 (74.1) |
23.3 (73.9) |
22.7 (72.9) |
21.1 (70) |
17.3 (63.1) |
13.5 (56.3) |
19.3 (66.7) |
பதியப்பட்ட தாழ் °C (°F) | 6.0 (42.8) |
7.0 (44.6) |
6.0 (42.8) |
14.7 (58.5) |
17.1 (62.8) |
20.6 (69.1) |
20.6 (69.1) |
20.7 (69.3) |
17.0 (62.6) |
12.7 (54.9) |
5.2 (41.4) |
1.5 (34.7) |
1.5 (34.7) |
மழைப்பொழிவுmm (inches) | 7.5 (0.295) |
13.8 (0.543) |
28.2 (1.11) |
97.9 (3.854) |
213.4 (8.402) |
178.4 (7.024) |
310.9 (12.24) |
358.4 (14.11) |
283.9 (11.177) |
124.9 (4.917) |
59.2 (2.331) |
14.0 (0.551) |
1,690.5 (66.555) |
% ஈரப்பதம் | 75 | 67 | 62 | 66 | 76 | 80 | 82 | 84 | 83 | 82 | 79 | 77 | 76 |
சராசரி மழை நாட்கள் | 1.4 | 1.8 | 3.7 | 10.8 | 18.4 | 19.5 | 23.1 | 23.7 | 17.3 | 11.4 | 5.0 | 1.8 | 137.9 |
சூரியஒளி நேரம் | 272.8 | 257.1 | 294.5 | 279.0 | 198.4 | 159.0 | 120.9 | 117.8 | 144.0 | 198.4 | 249.0 | 251.1 | 2,542.0 |
Source #1: Thai Meteorological Department[2] | |||||||||||||
Source #2: Office of Water Management and Hydrology, Royal Irrigation Department (sun and humidity)[3] |
தட்பவெப்பநிலை வரைபடம் Chiang Rai | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
ச | பெ | மா | ஏ | மே | ஜூ | ஜூ் | ஆ | செ | அ | ந | டி | ||||||||||||||||||||||||||||||||||||
7.5
29
13
|
13.8
31
14
|
28.2
34
17
|
97.9
35
21
|
213.4
33
23
|
178.4
32
24
|
310.9
31
23
|
358.4
31
23
|
283.9
31
23
|
124.9
31
21
|
59.2
29
17
|
14.0
27
14
|
||||||||||||||||||||||||||||||||||||
வெப்பநிலை (°C) மொத்த மழை/பனி பொழிவு (மிமீ) source: Thai Meteorological Department[4] | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||
Imperial conversion
|
இதனையும் காண்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ Coedès, George (1968). Walter F. Vella (ed.). The Indianized States of south-east Asia. trans.Susan Brown Cowing. University of Hawaii Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-8248-0368-1.
- ↑ "Climatological Data for the Period 1981–2010". Thai Meteorological Department. p. 1. பார்க்கப்பட்ட நாள் 31 July 2016.
- ↑ "ปริมาณการใช้น้ำของพืชอ้างอิงโดยวิธีของ Penman Monteith (Reference Crop Evapotranspiration by Penman Monteith)" (PDF) (in Thai). Office of Water Management and Hydrology, Royal Irrigation Department. p. 11. பார்க்கப்பட்ட நாள் 31 July 2016.
{{cite web}}
: CS1 maint: unrecognized language (link) - ↑ "www.tmd.go.th/province_stat.php?StationNumber=48303". Archived from the original on 2014-08-05. பார்க்கப்பட்ட நாள் 2018-07-11.
வெளி இணைப்புகள்
[தொகு]- விக்கிச்செலவில் செலவு வழிகாட்டி: Chiang Rai
- Chiang Rai Times Provincial and local news for Chiang Rai (English language)