உள்ளடக்கத்துக்குச் செல்

சித்தபூர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சித்தபூர்
சித்பூர்
நகரம்
உருத்ர மகாலய கோயிலின் இடிபாடுகள்
நாடு இந்தியா
மாநிலம்குசராத்து
மாவட்டம்பதான்
பெயர்ச்சூட்டுஜெயசிம்ம சித்தராஜா
மக்கள்தொகை
 (2011)
 • மொத்தம்61,867
மொழிகள்
 • அலுவல்குஜராத்தி, இந்தி
நேர வலயம்ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்)
அஞ்சல் குறியீட்டு எண்
384151
தொலைபேசிக் குறியீடு எண்02767
வாகனப் பதிவுஜிஜே-24

சித்தபூர் (Siddhpur), சித்பூர் எனவும் அறியப்படும் இது இந்திய மாநிலமான குசராத்தின் பதான் மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு நகராட்சி ஆகும். இது இருக்கு வேதத்தில் குறிப்பிடப்பட்டிருக்கும் கண்ணுக்குப் புலனாகாத சரசுவதி ஆறங்கரையில் அமைந்துள்ள ஒரு வரலாற்று இடமாகும். [1] இது பண்டைய சரசுவதி ஆற்றின் எஞ்சியிருக்கும் பகுதியாகக் கருதப்படுகிறது.

வரலாறு

[தொகு]

சித்தபூர் வரலாற்று ரீதியாக 'சிறிஸ்தல்' என்று அழைக்கப்பட்டது. [2] அதாவது "ஒரு பக்தியுள்ள இடம்" என்பதாகும்.

பத்தாம் நூற்றாண்டில் (கி.பி 943), சோலாங்கி வம்சத்தின் நிறுவனர் மூலராஜா, உருத்ரா மகாலய கோயிலைக் கட்டத் தொடங்கினார். [2] கோவிலின் கட்டுமானத்தின் மீதியிருந்தப் பகுதிகளை, கி.பி 1140 இல், ஜெயசிம்ம சித்தராஜா அதை முடித்து, நகரத்தை தனது தலைநகராக நிறுவினார். இவர் அதன் பெயரை சித்தபூர் என்று மாற்றினார். அதாவது சித்தராஜின் நகரம்.[2] 1298-99ல் அலாவுதீன் கில்சி அல்மாஸ் பேக் ( உலுக் கான் ) மற்றும் நுஸ்ரத் கான் ஆகியோரின் கீழ் அனுப்பிய இராணுவம் இக்கோயிலை அழித்தது. [2]

குசராத் சுல்தானகத்தின் போது இந்த நகரம் பாலன்பூரிலிருந்து ஆட்சி செய்த உள்ளூர் வம்சத்தின் ஆட்சியின் கீழ் இருந்தது. 15ஆம் நூற்றாண்டில், அக்பரால் இந்த நகரம் முகலாய ஆட்சியின் கீழ் கொண்டுவரப்பட்டது. முகலாய ஆட்சியின் கீழ் நகரத்தின் இந்துப் பாரம்பரியம் மேலும் மோசமடைந்து. உருத்ர மகாலய கோயிலும் இடிந்து விழுந்தது.

பாரம்பரிய நாட்டுப்புற நாடக வடிவமான பவாயின் தோற்றத்திற்கு காரணமான அசைதா தாக்கர், 14 ஆம் நூற்றாண்டில், சித்தபூரில் வாழ்ந்தார். [3]

புள்ளிவிவரங்கள்

[தொகு]

2001 ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, [4] சித்தபூரில் 53,581 மக்கள் தொகை இருந்தது. அவர்களில் 52% ஆண்களும் 48% பெண்களும் இருந்தனர். சித்தபூரின் சராசரி கல்வியறிவு விகிதம் 71% ஆகும். இது தேசிய சராசரியான 59.5% ஐ விட அதிகமாகும்: ஆண் கல்வியறிவு 77%, ,பெண் கல்வியறிவு 64%. சித்தபூரில், மக்கள் தொகையில் 12% 6 வயதுக்குட்பட்டவர்கள்.

ஆர்வமுள்ள இடங்கள்

[தொகு]
 • இந்தியத் தொல்லியல் துறையின் கீழ் இங்கு இரண்டு பாதுகாக்கப்பட்ட தேசிய நினைவுச்சின்னங்கள் உள்ளது.உருத்ரா மகாலய கோயிலின் இடிபாடுகளும், அதன் மேற்குப்பகுதியில் கட்டப்பட்டுள்ள ஒரு பள்ளிவாசல். [5]
 • பிந்து சரோவர்: இது ஒரு சிறிய செயற்கைக் குளமாகும். இதைப்பற்றியக் குறிப்புகள் இருக்கு வேதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் இது இந்துக்களால் பக்தியுள்ளதாகக் கருதப்படுகிறது. இந்து இறையியலின் படி, ஐந்து புனித ஏரிகள் உள்ளன; கூட்டாக பஞ்ச்-சரோவர் (ஐந்து ஏரிகள்) என்று அழைக்கப்படுகிறது; மானசரோவர், பிந்து சரோவர், நாராயணன் சரோவர், பம்பா சரோவர் மற்றும் புஷ்கர் சரோவர்ஆகியன. பாகவத புராணத்திலும் இவைகளைப் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளன. [6] இந்து நாட்காட்டியின் கார்த்திகை மாதத்தில், இறந்த தாய்மார்களுக்கான சடங்குகளைச் செய்வதற்காக ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கான மக்கள் இங்கு வருகை தருகிறார்கள், இதனால் தாய்மார்களுக்கான சிரார்த்தம் செய்யப்படுகிறது.
 • ஐரோப்பிய செல்வாக்குமிக்க கட்டிடக்கலைகளில் உள்ள போரா அவேலிகள் (மாளிகைகள்) பெரும்பாலும் தாவூதி போரா வர்த்தக சமூகத்தைச் சேர்ந்தவை, மேலும் 18 மொஹல்லாக்கள் அல்லது நஜாம்புரா மற்றும் ஹசன்புராவில் உள்ள பகுதிகளில் அமைந்துள்ளன். [7] அவர்கள் மர கட்டிடக்கலை மற்றும் உள்துறை அலங்காரத்திற்கு பெயர் பெற்றவர்கள் ஆவர். [8] [9]
 • அர்வதேசுவர் சிவன் கோயில்: நாத சம்பிரதாயத்தின் ஒரு பழங்கால இடமாகும்.
 • முகமது அலி கோபுரம்: கடிகார கோபுரம், போரா தொழிலதிபர் முகமது அலி என்பரல் ரூ. 15000 செலவில் கட்டப்பட்டு, பரோடா ஆட்சியின் போது 1915 ஏப்ரல் 4 அன்று திறக்கப்பட்டது.
 • சிறீஸ்தல் சங்கராலே (சித்தபூர் அருங்காட்சியகம்)

மேற்கோள்கள்

[தொகு]
 1. "Saraswati River". guj-nwrws.gujarat.gov.in, குஜராத் அரசு. பார்க்கப்பட்ட நாள் 13 March 2012.
 2. 2.0 2.1 2.2 2.3 Burgess; Murray (1874). "The Rudra Mala at Siddhpur". Photographs of Architecture and Scenery in Gujarat and Rajputana. Bourne and Shepherd. p. 19. பார்க்கப்பட்ட நாள் 23 July 2016. இந்தக் கட்டுரை பொது உரிமையில் உள்ள மூலத்திலிருந்து உரையைக் கொண்டுள்ளது.
 3. Amaresh Datta (1987). Encyclopaedia of Indian Literature: A-Devo. Sahitya Akademi. p. 236. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-260-1803-1.
 4. "Census of India 2001: Data from the 2001 Census, including cities, villages and towns (Provisional)". Census Commission of India. Archived from the original on 2004-06-16. பார்க்கப்பட்ட நாள் 2008-11-01.
 5. Alphabetical List of Monuments - Gujarat. Rudra Mahalaya Temple is a unique place to visit to see the spectacular crafts on sandstones but as the issue is pending in court about the religious authority, the entry is restricted in the area of Rudra Mahalay. Archaeological Survey of India.
 6. [1] Encyclopaedia of tourism resources in India, Volume 2 By Manohar Sajnani
 7. Burte, Himanshu (2014-08-26). "Bohra ghost towns of Gujarat". Outlook Traveller. பார்க்கப்பட்ட நாள் 2019-10-21.
 8. Saumya, Ancheri (2015-03-20). "In Photos: The Magnificent Mansions of the Bohras of Sidhpur". National Geographic Traveller India. Archived from the original on 2020-02-26. பார்க்கப்பட்ட நாள் 2019-10-21.
 9. https://www.business-standard.com/article/specials/photo-exhibition-wonder-world-of-sidhpur-s-bohra-mansions-115040200805_1.html

வெளி இணைப்புகள்

[தொகு]


"https://ta.wikipedia.org/w/index.php?title=சித்தபூர்&oldid=3584032" இலிருந்து மீள்விக்கப்பட்டது