சாம் ஆண்டர்சன்
Appearance
சாம் ஆன்டர்சன் | |
---|---|
இயற் பெயர் | ஆன்டர்சன் சாமுவேல் |
பிறப்பு | இந்தியா |
நடிப்புக் காலம் | 2007-இன்று |
சாம் ஆண்டர்சன் (இயற்பெயர் ஆன்டர்சன் சாமுவேல்[1]) என்பவர் 2007ல் வெளிவந்த யாருக்கு யாரோ என்னும் தமிழ்த் திரைப்படத்தில் நாயகனாக நடித்தவரும் இப்படத்தில் இவரின் நடனம் மற்றும் நடிப்பிற்காக இணையத்திலும், குறிப்பாக யூடியூப் முதலிய சமூக வலைத் தளங்களிலும் புகழ் பெற்றவரும் (internet celebrity) ஆவார்.[1]
இவர் ஈரோட்டில் பிறந்தவர். அங்கு இவர் ஐந்து ஊழியர்களைக்[2] கொண்ட ஒரு கூரியர் நிறுவனம்[1] நடத்தி வந்தார்.
2001ஆம் ஆண்டு வெளியான சாக்லேட் என்னும் தமிழ்த் திரைப்படத்தினால் தூண்டப்பட்டு திரை உலகிற்கு வந்ததாக கூறியுள்ளார். இவரின் முதல் திரைப்படமான யாருக்கு யாரோ என்னும் திரைப்படம், இவரின் மாமாவால் தயாரிக்கப்பட்டு, தமிழ்நாட்டில் நான்கு திரையரங்குகளில் 25 நாட்கள்[2] ஓடியது. இவர் திரை உலகில் நுழையும் போது தனது பெயரை சாம் ஆண்டர்சன் என மாற்றிக்கொண்டார்[1].
படங்கள்
[தொகு]ஆண்டு | படம் | பாத்திரம் | குறிப்புகள் |
---|---|---|---|
2007 | யாருக்கு யாரோ | டேவிட் | |
2007 | சென்னை 600028 | டேவிட் | |
2012 | சிரிப்பு வர்லனா, நாங்க பொறுப்பு இல்ல | ஞான பிரகாசம் | குறும்படம் |
2013 | நவீன சரஸ்வதி சபதம் | குமார் | சிறப்புத் தோற்றம் |
2013 | சொன்னா புரியாது | தான் | சிறப்புத் தோற்றம் |
2013 | தலைவா | தான் | சிறப்புத் தோற்றம் |
2013 | பிரியாணி | தான் | சிறப்புத் தோற்றம் |
2014 | கோலி சோடா | தான் | சிறப்புத் தோற்றம் |
2015 | எட்டுத்திக்கும் மதயானை | பொம்மை | |
2015 | 10 எண்றதுக்குள்ள | தாஸின் கையாள் |
சான்றுகள்
[தொகு]- ↑ 1.0 1.1 1.2 1.3 "Times Of India article". Archived from the original on 2013-07-29. பார்க்கப்பட்ட நாள் November 24, 2012.
{{cite web}}
: Unknown parameter|=
ignored (help) - ↑ 2.0 2.1 "Ananda Vikatan interview". பார்க்கப்பட்ட நாள் November 24, 2012.