சாம்பல் டுயூக்கர்
சாம்பல் டுயூக்கர் Common duiker | |
---|---|
![]() | |
![]() | |
பென்ட்ஜாரி தேசியப் பூங்காவில், வயது வந்த ஆண் மான் மற்றும் குருகர் தேசியப் பூங்காவில் வயதுவந்த பெண் மான் | |
உயிரியல் வகைப்பாடு ![]() | |
திணை: | விலங்கு |
Phylum: | முதுகுநாணி |
Class: | பாலூட்டி |
Order: | இரட்டைப் படைக்குளம்பி |
Family: | போவிடே |
Subfamily: | Duiker |
Genus: | Common duiker Ogilby, 1837 |
இனம்: | S. grimmia |
இருசொற் பெயரீடு | |
Sylvicapra grimmia (லின்னேயஸ், 1758) | |
வேறு பெயர்கள் | |
Capra grimmia Linnaeus, 1758 |
சாம்பல் டுயூக்கர் அல்லது புதர் டுயூக்கர் (common duiker also known as the grey or bush duiker) என்பது ஒரு சிறிய மறிமான் ஆகும். இது சில்விகாப்ரா பேரினத்தின் ஒரே உறுப்பினர் ஆகும். ஆப்பிரிக்காவின் கொம்பு மற்றும் கண்டத்தின் நடு மற்றும் மேற்குப் பகுதிகளின் மழைக்காடுகளைத் தவிர்த்து, சகாராவின் தெற்கே ஆப்பிரிக்காவில் எல்லா இடங்களிலும் இவை காணப்படுகின்றன. பொதுவாக, இவை மறைந்து கொள்ள ஏற்ற தாவரங்கள் கொண்ட வாழ்விடங்களில் - சவன்னா மற்றும் மலைப்பகுதிகள், மனித குடியிருப்புகளின் விளிம்புகள் உள்ளிட்ட பகுதிகளிலும் காணப்படுகின்றன. [2]
விளக்கம்[தொகு]
இந்த இனத்தின் நிறம் இவை வாழும் பரந்த புவியியல் பகுதிக்கு ஏற்ப மாறுபடுகிறது. இதில் 14 துணையினங்கள் விவரிக்கப்பட்டுள்ளன. [1] இவை சுமார் 50 செமீ (20 அங்குலம்) உயரம் வரை வளரக்கூடியனவாகவும், பொதுவாக 12 முதல் 25 கிலோ (26 முதல் 55 பவுண்டுகள் வரை) எடையுள்ளதாகவும் இருக்கும். பெட்டைகள் பொதுவாக கிடாக்களை விட பெரியதாகவும் கனமாகவும் இருக்கின்றன. இவற்றில் கிடாக்கக்கு மட்டுமே கொம்புகள் உள்ளன. இவற்றின் கொம்புகள் 11 செமீ (4.3 அங்குலம்) நீளம் வரை வளரும்.
நடத்தை[தொகு]
இவை ஆண்டு முழுவதும் இனப்பெருக்கத்தில் ஈடுபடுகின்றன. கருவுற்ற பிறகு இவற்றின் கர்ப்ப காலம் 6 முதல் 7.5 மாதங்கள் வரை ஆகும். இதன் பிறகு ஒரு குட்டியைப் பெற்றெடுக்கிறது. சாம்பல் டுயூக்கர்கள் பலவகையான உணவுகளை உட்கொள்கின்றன. பொதுவாக இவை இலைகள், பூக்கள், பழங்கள், கிழங்கு போன்றவற்றை உண்பதுமல்லாமல், இவை பூச்சிகள், தவளைகள், சிறிய பறவைகள், பாலூட்டிகள் மற்றும் அழுகுடல்களையும் கூட உண்ணும். இவை தங்களுக்குத் தேவைப்படும் நீர்ச் சத்தை தங்கள் உணவிலிருந்தே பெறுகின்றன. எனவே இவற்றால் நீண்ட காலத்திற்கு தண்ணீர் அருந்தாமல் இருக்க இயலும். மழைக்காலத்தில், இவை அடிக்கடி தண்ணீரைக் குடிக்காமல் இருக்கும். மாறாக பழங்களிலிருந்து திரவங்களைப் பெறும். குரங்குகள் உள்ள மரங்களுக்கு அடியில் இருந்துகொண்டு அவை சிதறவிடும் பழங்களைத் தேடி உண்ணும். இவை இரவும் பகலும் சுறுசுறுப்பாக இருக்கும். ஆனால் மனித குடியிருப்புகளுக்கு அருகில் பெரும்பாலும் இரவிலேயே வெளிவரும். காரணம் காட்டு நாய்கள் மற்றும் மனிதர்களின் நடமாட்டம் காரணமாக ஏற்படும் அச்சமாக இருக்கலாம்.
ஆண் மான்கள் தங்கள் பிரதேசத்தின் எல்லையைக் குறிக்க பாறைகள் மற்றும் கிளைகளில் வாசனை சுரப்பிகளை விடுகின்றன. ஆண் மான்களின் விருப்பமான ஓய்வு இடங்கள் பொதுவாக தரையிலிருந்து உயரமான இடமாக இருக்கும். ஏனெனில் அங்கிருந்தே இவை தங்கள் பிரதேசத்தை கண்காணிக்க முடியும். மாறாக பெண் மான்கள் தங்களுக்கு மறைவிடமாக உள்ள பள்ளமான இடங்களையே விரும்புகின்றன. இந்த இனத்தின் ஒட்டுமொத்த வெற்றியாக பல்வேறு வகையான வாழ்விடங்களில் வசிக்கும் திறன் ஆகும்.
காட்சியகம்[தொகு]
-
உகாண்டாவின் கிடிப்போ பள்ளத்தாக்கு தேசிய பூங்காவில் இளம் ஆண் மான்
-
குருகர் தேசியப் பூங்காவில் இளம் ஆண் மான்
-
குருகர் தேசியப் பூங்காவில் வயது வந்த ஆண் மான்
-
குருகர் தேசியப் பூங்காவில் வயது வந்த பெண் மான்
குறிப்புகள்[தொகு]
- ↑ 1.0 1.1 IUCN SSC Antelope Specialist Group (2016). "Sylvicapra grimmia". IUCN Red List of Threatened Species 2016: e.T21203A50194717. doi:10.2305/IUCN.UK.2016-1.RLTS.T21203A50194717.en. https://www.iucnredlist.org/species/21203/50194717. பார்த்த நாள்: 19 November 2021.
- ↑ Child, Matthew F.. "Sylvicapra grimmia – Common Duiker". https://www.ewt.org.za/wp-content/uploads/2019/02/28.-Common-Duiker-Sylvicapra-grimmia_LC.pdf. "extract from The Red List of Mammals of South Africa, Lesotho and Swaziland - 2016"